search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC Champions Trophy 2025"

    • கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ல் பாகிஸ்தானில் விளையாடி இருந்தது.
    • இங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை நேசிக்கிறார்கள்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த தொடருக்காக இந்தியா அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது இன்னும் வரை கேள்வி குறியாகவே உள்ளது.

    கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ல் பாகிஸ்தானில் விளையாடி இருந்தது. அதன் பிறகு அங்கு சென்று விளையாடவில்லை. பாகிஸ்தான் அணி நேரடி தொடரில் விளையாட இந்தியாவுக்கு கடந்த 2012-ல் வந்திருந்தது. அதன் பின்னர் இரு அணிகளுக்கு இடையிலான நேரடி தொடர் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

    பாகிஸ்தான் வந்து விளையாடுமாறு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா வந்தால் சிறப்பான, அன்பான வரவேற்பு கிடைக்கும் என பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிஸ்வான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை நேசிக்கிறார்கள். மேலும், இந்திய அணி பாகிஸ்தான் நாட்டில் விளையாடுவதை பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா வந்தால் சிறப்பான, அன்பான வரவேற்பு கிடைக்கும்.

    முகமது ரிஸ்வான் கூறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரும் என மோசின் நக்வி கூறினார்.
    • 3 முறை பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடியுள்ளதால் இம்முறை இந்திய அணி நிச்சயம் எங்களை ஏமாற்றாது.

    கராச்சி:

    2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

    மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.

    மறுபுறம் இந்தியா வரவில்லை என்றால் அவர்களைப் புறக்கணித்து விட்டு மற்ற அணிகளை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டிலேயே நடத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. ஆனால் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக கலக்காமல் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவிற்கு தொடர்ந்து பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரும் என நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

    நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்க உள்ள ஐசிசி தொடர் என்பதால் பலத்த பாதுகாப்புடன் தொடரை நடத்த ஆயத்தமாகி வருகிறோம். எனவே அடுத்த ஆண்டு அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என்பதால் நிச்சயம் இந்திய அணியும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு ஜூலைக்கு பிறகு 3 முறை பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடியுள்ளதால் இம்முறை இந்திய அணி நிச்சயம் எங்களை ஏமாற்றாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி, மார்ச்சில் நடக்கிறது.
    • இந்திய கிரிக்கெட் அணி 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியதில்லை.

    லாகூர்:

    இந்திய கிரிக்கெட் அணி 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியதில்லை. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தபோது இந்திய அணி அங்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டது.

    அடுத்ததாக பாகிஸ்தானில் 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் நடக்கிறது. பாகிஸ்தானுடனான சீரற்ற உறவு மற்றும் பாதுகாப்பு பிரச்சினையால் இந்திய அணி அங்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

    இந்த நிலையில் இந்திய அணி இந்த முறை பாகிஸ்தானுக்கு வருகை தரும் என்று அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐ.சி.சி.யின் புதிய தலைவராக இந்தியாவின் ஜெய்ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஆதரவு அளித்துள்ளது என்று தான் அர்த்தம். இதுவே இந்திய அணி பாகிஸ்தானுக்கு வருகை தருவதை 50 சதவீதம் உறுதிப்படுத்தி விட்டது.

    கிரிக்கெட் வாரிய நிர்வாகியாக ஜெய்ஷா இதுவரை செய்துள்ள பணிகள் கிரிக்கெட்டுக்கு ஆதாயம் தரும் வகையிலேயே இருந்துள்ளன. எனவே சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பங்கேற்பதை உறுதி செய்வதற்கான முயற்சியை அவர் மேற்கொள்வார் என நம்புகிறேன்.

    இவ்வாறு ரஷித் லத்தீப் கூறினார்.

    ×