என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கதேச கிரிக்கெட் அணி"

    • இந்தியாவில் நடக்கும் போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தல்.
    • வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை ஐசிசி நிராகரித்தது.

    2026 டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    டாக்காவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முடிவெடுக்கப்பட்டதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் விளையாடப் போவதில்லை என்று வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    இந்தியாவில் நடக்கும் போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை ஐசிசி நிராகரித்தது.

    • டி20 உலக கோப்பையில் தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
    • இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது.

    புதுடெல்லி:

    வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் எதிரொலியாக ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக டி20 உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.

    இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து ஐ.சி.சி. இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

    இதற்கிடையே வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு ஏற்றவாறு சென்னை, திருவனந்தபுரம் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த அணி கொல்கத்தாவில் 3 போட்டியிலும், மும்பையில் ஒரு ஆட்டத்திலும் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) செயலாளர் சைகியா கூறியதாவது:-

    வங்கதேசப் போட்டிகளை சென்னைக்கோ அல்லது வேறு இடத்துக்கோ மாற்றுவது குறித்த எந்த தகவலும் பி.சி.சி.ஐ.க்கு வரவில்லை. இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இது ஐ.சி.சி. மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இடையேயான தகவல் பரிமாற்ற விஷயமாகும்.

    ஏனெனில் ஐ.சி.சி.தான் ஆளும் அமைப்பு. இடமாற்றம் குறித்த முடிவை ஐ.சி.சி. எங்களுக்குத் தெரிவித்தால், பி.சி.சி.ஐ., தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். தற்போது எங்களுக்கு அத்தகைய தகவல் எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசனுக் இடம் கிடைக்கவில்லை.
    • கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய போது ஷகிப் பந்துவீச்சு விதிமுறைக்குட்பட்டு இல்லை என கூறி ஐ.சி.சி. தடைவிதித்தது.

    9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான வங்காளதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசனுக் இடம் கிடைக்கவில்லை.

    கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய போது அவரது பந்துவீச்சு விதிமுறைக்குட்பட்டு இல்லை என கூறி ஐ.சி.சி. தடைவிதித்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் சென்னையில் நடந்த பந்து வீச்சு சோதனையிலும் அவர் தேறவில்லை. இதனால் அவரது பந்துவீச்சுக்கு தடை தொடருகிறது. இதன் காரணமாகவே ஷகிப் அல்-ஹசன் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

    சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற இருந்த அவரது கனவு கலைந்தது. பார்மின்றி தடுமாறும் விக்கெட் கீப்பர் லிட்டன் தாசும் கழற்றிவிடப்பட்டுள்ளார்.

    வங்காளதேச அணி வருமாறு:-

    நஜ்முல் ஷூசைன் ஷன்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், தவ்ஹித் ஹரிடாய், சவுமியா சர்கார், தன்சித் ஹசன், மக்முதுல்லா, ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹூசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், பர்வேஸ் ஹூசைன், நசும் அகமது, தன்சிம் ஹசன், நஹித் ராணா.

    ×