என் மலர்
நீங்கள் தேடியது "Bangladesh cricket Board"
- டி20 உலக கோப்பையில் தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
- இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது.
புதுடெல்லி:
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் எதிரொலியாக ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக டி20 உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து ஐ.சி.சி. இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இதற்கிடையே வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு ஏற்றவாறு சென்னை, திருவனந்தபுரம் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த அணி கொல்கத்தாவில் 3 போட்டியிலும், மும்பையில் ஒரு ஆட்டத்திலும் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) செயலாளர் சைகியா கூறியதாவது:-
வங்கதேசப் போட்டிகளை சென்னைக்கோ அல்லது வேறு இடத்துக்கோ மாற்றுவது குறித்த எந்த தகவலும் பி.சி.சி.ஐ.க்கு வரவில்லை. இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இது ஐ.சி.சி. மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இடையேயான தகவல் பரிமாற்ற விஷயமாகும்.
ஏனெனில் ஐ.சி.சி.தான் ஆளும் அமைப்பு. இடமாற்றம் குறித்த முடிவை ஐ.சி.சி. எங்களுக்குத் தெரிவித்தால், பி.சி.சி.ஐ., தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். தற்போது எங்களுக்கு அத்தகைய தகவல் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்க தேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
- இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்தது.
இஸ்லாமாபாத்:
வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருகிறது. ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்க தேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்தது. இந்தியாவில் விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தது. ஆனாலும் இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று 2-வது முறையாக வங்க தேசம் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. இது குறித்து ஐ.சி.சி. இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இதற்கிடையே வங்க தேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு ஏற்றவாறு சென்னை, ஐதராபாத் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த அணி கொல்கத்தாவில் 3 போட்டியிலும், மும்பையில் ஒரு ஆட்டத்திலும் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் வங்கதேச போட்டியை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் போட்டி நடத்த முடியாவிட்டால் நாங்கள் நடத்த தயார் என்று பாகிஸ்தான் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.
- இந்தியா- வங்கதேசம் இடையில் ஒருவரும் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது.
- செப்டம்பர் மாதம் மீண்டும் தொடரை தொடங்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது.
இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக வங்கதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஆனால், தற்போது வங்கதேசத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், பிசிசிஐ இந்திய அணியை அனுப்ப சம்மதம் தெரிவிக்குமா? என்பது சந்தேகம்தான்.
மீடியாக்கள் தகவலின்படி, செப்டம்பர் 1, 3 மற்றும் 6-ந்தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் செப்டம்பர் 9, 12, 13-ந்தேதிகளில் டி20 போட்டிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அணி ஆகஸ்ட் 28-ந்தேதி வங்கதேசம் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா- வங்கதேசம் இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒயிட்பால் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை போட்டிகளை ஒத்திவைக்க இரு நாட்டின் கிரிக்கெட் போர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடருக்காக, 2026 செப்டம்பரில் இந்தியாவை வரவேற்பதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆவலுடன் காத்திருக்கிறது. இந்தத் சுற்றுப் பயணத்திற்கான திருத்தப்பட்ட தேதிகள் மற்றும் போட்டி அட்டவணைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது.
- அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், அணிகள் ஒவ்வொன்றாக அமெரிக்கா புறப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டு சென்றது. அந்த வரிசையில், தற்போது ஆசிய நாடுகளில் ஒன்றான வங்காளதேசம் கிரிக்கெட் அணி அமெரிக்கா புறப்பட்டது.
அமெரிக்கா புறப்படும் முன் வங்காளதேசம் அணி வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹாசனுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
- ஷேக் ஹசீனா கட்சியின் எம்பியாக ஷகிப் அல் ஹசன் இருந்தார்.
- மாணவர்கள் போராட்டத்தின் போது ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் உள்ளார்.
மாணவர்கள் போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
மாணவர்கள் போராட்டத்திற்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.
கலவரத்தின்போது கனடாவில் நடந்த குளோபல் டி20 லீக்கில் ஷகிப் அல் ஹசன் விளையாடி கொண்டிருநதார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை. .
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன், நாடு திரும்பினால் எந்த துன்புறுத்தலும் இருக்காது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.
இதனையடுத்து, அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக வங்கதேசத்திற்கு ஷகிப் அல் ஹசன் திரும்ப உள்ளார் என்று சொல்லப்படுகிறது.
வங்காள தேசத்தில் டாக்கா மற்றும் சிட்டகாங் மைதானத்தில் தற்போது டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் - நவம்பரில் ஜிம்பாப்வே அணி வங்காள தேசம் செல்கிறது. அப்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் நவம்பர் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடக்கிறது. இந்த ஆட்டம் முதன்முதலாக சியல்ஹெட் மைதானத்தில் நடக்கிறது. இதற்கு முன் சியல்ஹெட்டில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது கிடையாது. ஏழு டி20 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டி மூலம் புதிய மைதானத்தை அறிமுகப்படுத்துகிறது.
அந்த சமயத்தில் வங்காள தேசத்தில் தேர்தல் நடக்க இருப்பதால் ஜிம்பாப்வேயிற்கு எதிரான தொடரை இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்பின் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வங்காள தேசம் அவெஸ்ட் இண்டீஸ் செல்கிறது.
ஆகவே, வங்காள தேசம் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் அடுத்தடுத்து விளையாடுகிறது. ஜிம்பாப்வே தொடருக்கான போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த தொடர் அக்டோபர் மாதம் நடக்கிறது. அதன்பின் நவம்பர் 15-ந்தேதியில் இருந்து டிசம்பர் 22-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் உடன் மோதுகிறது.
வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான், இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது காயம் அடைந்தார். இதனால் அவர் சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணியில் இடம் பெறவில்லை. அந்த தொடரை வங்காளதேச அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது.
இந்த நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு தடை விதிக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹஸ்சன் அளித்த பேட்டியில், ‘20 ஓவர் லீக் போட்டியில் ஆடி காயம் அடைந்ததால் நாட்டு அணிக்காக முஸ்தாபிஜூர் ரகுமான் விளையாட முடியாமல் போனதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட அவருக்கு தடையில்லா சான்றிதழ் அளிக்கப்படமாட்டாது’ என்றார். #BCB #MustafizurRahman
தற்போது வங்காள தேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. அப்போது மெக்கென்சி அணியுடன் இணைவார்.

வங்காள தேச அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீவ் ரோட்ஸ், பந்து வீச்சு ஆலோசகராக ரியால் குக் ஆகியோர் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் திலன் சமரவீரா பேட்டிங் ஆலோசகராக இருந்துள்ளார். அவர் சென்ற பின்னர், சைமன் ஹெல்மோட் இடைக்கால ஆலோசகராக பணியாற்றினார். #BCB #NeilMcKenzie






