என் மலர்

  செய்திகள்

  வங்காள தேச அணியின் பேட்டிங் ஆலோசகராக மெக்கென்சி நியமனம்
  X

  வங்காள தேச அணியின் பேட்டிங் ஆலோசகராக மெக்கென்சி நியமனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்காள தேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் மெக்கென்சி நியமிக்கப்பட்டுள்ளார். #BCB
  வங்காள தேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகர் பதவி காலியாகவே இருந்து வந்தது. சுமார் ஓராண்டிற்குப் பிறகு தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் நீல் மெக்கென்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

  தற்போது வங்காள தேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. அப்போது மெக்கென்சி அணியுடன் இணைவார்.  வங்காள தேச அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீவ் ரோட்ஸ், பந்து வீச்சு ஆலோசகராக ரியால் குக் ஆகியோர் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் திலன் சமரவீரா பேட்டிங் ஆலோசகராக இருந்துள்ளார். அவர் சென்ற பின்னர், சைமன் ஹெல்மோட் இடைக்கால ஆலோசகராக பணியாற்றினார். #BCB #NeilMcKenzie
  Next Story
  ×