search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammad Rizwan"

    • 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
    • ஒரு ரன்னை எடுக்க சென்ற ரிஸ்வான் பேட்டை தவற விட்டு கை விரல்களால் கீரிஸ் கோட்டை தொட்டார்.

    நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் கடைசியாக விளையாடிய 8 சர்வதேச போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் 2024 புத்தாண்டில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் திணறி வருகிறது.

    முன்னதாக இத்தொடரின் 3-வது போட்டியில் பாகிஸ்தான் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் ஒரு ரன் எடுக்க முயற்சித்தார். அப்போது தடுமாறி கையிலிருந்த பேட்டை தவற விட்டு பேட்டை எடுக்காமலேயே ரன் எடுக்க ஓடினார். இதனால் எதிர்ப்புறம் இருந்த கிரீஸ் கோட்டை தன்னுடைய கைவிரல்களால் தொட்ட 2 ரன்களை எடுத்தார். கை விரல்களால் கீரிஸ் கோட்டை ரிஸ்வான் தொட முயற்சித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் அதை பார்த்த இந்திய வீரர் ஷிகர் தவான் "கபடி கபடி கபடி" என்ற தலைப்புடன் எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு ரிஸ்வானை கலாய்த்துள்ளார். இந்த பார்த்த ரசிகர்களும் அவர்கள் பங்குக்கு கலாய்த்து வருகின்றனர்.

    • பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக இழந்தது.

    இந்த தொடர் முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகி நிலையில் புதிய கேப்டனாக சாஹின் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நடக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் பாகிஸ்தான் அணி விவரம்:-

    ஷாஹீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அமீர் ஜமால், அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, அசம் கான், பாபர் அசாம், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், உசாமா மிர், ஜமான் கான்.

    • பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
    • அப்போது ரசிகர்கள் சிலர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    அகமதாபாத்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் பரவி வருகின்றன.

    விருந்தோம்பலுக்கு பெயர் போன இந்தியாவில், முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டதற்கு பலரும் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • அக்சர் பட்டேல், முகமது ரிஸ்வான், கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறந்த வீரருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.
    • செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி விருதை அறிவித்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்களின் பெயரை ஐசிசி சமீபத்தில் பரிந்துரைத்து இருந்தது.

    அந்த வகையில் இந்திய வீரர் அக்சர் பட்டேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறந்த வீரருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் ஊடக பிரதிநிதிகள், முன்னாள் சர்வதேச வீரர்கள் மட்டும் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் இதன் வெற்றியாளர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ரிஸ்வான் கடந்த மாதம் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இதில் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • இரண்டு பேரை வைத்து ஒரு அணியை உருவாக்க முடியாது.
    • ரிஸ்வான் அவருடைய திட்டத்தை மாற்ற எந்த தேவையும் இல்லை.

    டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது.கேப்டன் பாபர் அசாம் கூட தொடர்ந்து ரன்கள் சேர்க்கவில்லை. பாகிஸ்தான் ஓரளவுக்கு வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் முஹம்மது ரிஸ்வான் தான்.

    முஹம்மது ரிஸ்வான் தொடர்ந்து ரன்களை தொடக்க வீரராக குவித்து வருகிறார். ஆனால் அதனை மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால் முகமது ரிஸ்வானையே பலரும் விமர்சித்து வருகின்றனர்.முஹம்மது ரிஸ்வானின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாக பலரும் சாடி வருகின்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானுக்கு அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷகித் அப்ரிடி ஒரு முக்கிய அறிவுரையை தந்துள்ளார் .

    இது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் ஷகித் அப்ரிடி கூறியதாவது:-

    நீங்கள் பந்து வீச்சில் அல்லது பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என்பது முக்கியம். அந்த வகையில் ரிஸ்வான் மற்றும் பாபர் இரண்டு பேருமே அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கிறார்கள். ஆனால் இரண்டு பேரை வைத்து ஒரு அணியை உருவாக்க முடியாது. 11 பேரும் விளையாட வேண்டும். 6 பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள்.அதில் குறைந்த பட்சம் மூன்று வீரர்கள் ஆவது அணிக்கு ரன் சேர்க்க பங்களிப்பை கொடுக்க வேண்டும்.

    ரிஸ்வான் அவருடைய திட்டத்தை மாற்ற எந்த தேவையும் இல்லை. அவர் யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடப்பாண்டில் மட்டும் ரிஸ்வான் 14 டி20 போட்டிகளில் 8 அரைசதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், பாபர் அசாம் தவிர மற்ற வீரர்கள் சொதப்பி வருவது அந்த அணியின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

    • 20 ஓவர் கிரிக்கெட் சேசிங்கில் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.
    • இந்த ஜோடி கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சேசிங்கின் போது 197 ரன் குவித்ததே ஒரு தொடக்க ஜோடியின் அதிக ரன்னாக இருந்தது.

    கராச்சி:

    பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது 20 ஓவர் போட்டி நேற்று கராச்சியில் நடந்தது.

    இங்கிலாந்து நிர்ணயித்த 200 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 19.3 ஓவரில் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் 110 ரன்னும், முகமது ரிஸ்வான் 88 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 203 ரன் குவித்தனர். இதன் மூலம் பாபர் ஆசாம்-முகமது ரிஸ்வான் ஜோடி புதிய உலக சாதனை படைத்தது. 20 ஓவர் கிரிக்கெட் சேசிங்கில் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.

    இதற்கு முன்பு இந்த ஜோடி கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சேசிங்கின் போது 197 ரன் குவித்ததே ஒரு தொடக்க ஜோடியின் அதிக ரன்னாக இருந்தது.

    அந்த சாதனையை அவர்களே முறியடித்தனர். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம் 7 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என்ற சமனில் உள்ளது. 3-வது போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ்கெய்லின் 6 ஆண்டு கால சாதனையை பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் முறியடித்துள்ளார்.
    சார்ஜா:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆடத்தில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 15 ரன் எடுத்தார்.

    இதில் 5-வது ரன்னை எடுத்தபோது ரிஸ்வான் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார்.

    20 ஓவர் போட்டியில் ஒரு ஆண்டில் அதிக ரன் எடுத்தவர் கிறிஸ்கெய்ல். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அவர் 2015-ம் ஆண்டு 36 ஆட்டத்தில் 1,665 ரன் எடுத்தார். சராசரி 59.46 ஆகும். இதில் 3 சதமும், 10 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 151 ரன் (அவுட் இல்லை) குவித்தார்.

    கிறிஸ்கெய்லின் 6 ஆண்டு கால சாதனையை தான் முகமது ரிஸ்வான் முறியடித்தார். அவர் 1,676 எடுத்துள்ளார். ஒரு சதமும், 15 அரை சதமும் இந்த ஆண்டில் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 104 ரன் குவித்தார். அவருக்கு இன்னும் ஆட்டம் இருக்கிறது.

    இதனால் இந்த ஆண்டு 20 ஓவர் போட்டியில் அவரது ரன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 79 ரன் எடுத்தார்.

    மேலும் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கும் இந்த ஆட்டத்தில் சாதனை படைத்தார். அவர் 18 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் அரை சதத்தை தொட்டார். இந்த உலக கோப்பையில் ஏற்கனவே இந்திய வீரர் ராகுல் ஸ்காட்லாந்துக்கு எதிராக 18 பந்தில் அரை சதம் அடித்து இருந்தார். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 2014-ம் ஆண்டு 18 பந்தில் அரைசதம் அடித்து இருந்தார்.

    இந்த 3 பேரும் 20 ஓவர் உலக கோப்பையில் அதிவேகத்தில் அரைசதம் அடித்த வீரர்களில் 3-வது இடத்தில் உள்ளனர். யுவராஜ்சிங் 2007 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 12 பந்தில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருக்கிறது.
    நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானின் ரிஸ்வான், பாபர் அசாம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.
    அபுதாபி:

    அபுதாபியில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான், நமீபியா அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். பாபர் அசாம் 70 ரன்னில் அவுட்டானார். ரிஸ்வான் 79 ரன்னுடனும், ஹபீஸ் 39 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களமிறங்கியது. கிரேக் வில்லியம்ஸ் 40 ரன்னும், ஸ்டீபன் பார்டு 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், நமீபியா 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி கட்டத்தில் டேவிட் வைஸ் அதிரடியாக ஆடி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ×