என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக் பாஷ் லீக்"

    • சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 2015, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வென்றிருந்த நிலையில், தற்போதும் வெற்றி.
    • ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிக்ஸர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் சேர்ந்து, இதுவரை நடந்த 15 பிபிஎல் தொடர்களில் ஒன்பதை வென்றுள்ளன.

    ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற 15வது பிபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி. இதன் மூலம் பிபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.

    பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி இன்று இறுதிப்போட்டியில் ஒன்பதாவது முறையாகவும், சிக்ஸர்ஸ் அணிக்கு எதிராக ஆறாவது முறையும் களமிறங்கியது. இதற்கு முன்பு சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 2015, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வென்றிருந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக இறுதிப் போட்டியில் தோற்கடித்து, அதன் ஆதிக்கத்தைத் தொடர்ந்துள்ளது. ஸ்கார்ச்சர்ஸ் அணி, பிபிஎல் இறுதிப் போட்டியில் சிஸ்சர்ஸ் அணியிடம் இரண்டு முறை, அதாவது 2012 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தோற்றுள்ளது. 

    2011, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்களான சிஸ்சர்ஸ் அணி, பிபிஎல்-லின் இரண்டாவது மிக வெற்றிகரமான அணியாகும். இந்த ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிக்ஸர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் சேர்ந்து, இதுவரை நடந்த 15 பிபிஎல் தொடர்களில் ஒன்பதை வென்றுள்ளன. 

    பிரிஸ்பேன் ஹீட் அணி 2012 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சாம்பியனாக முடிசூட்டப்பட்டுள்ளது. அதே சமயம், சிட்னி தண்டர், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு பட்டத்தை வென்றுள்ளன. 

    பிக் பாஷ் லீக்

    பிக் பாஷ் லீக், இந்தியாவின் ஐபிஎல் தொடர்போல ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடராகும். இது டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெறும். இந்த கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவால் 2011இல் தொடங்கப்பட்டது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

    • 18 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்திருந்தது.
    • இறுதியில் மெல்போர்ன் அணி 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது. இதில் இன்று மெல்போர்ன் ரெனெகேட்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் கான் 46 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்நிலையில் 4-வது பேட்டராக களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் ரன்களை குவிக்க தடுமாறினார். 18 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரிஸ்வானை வெளியேறுமாறு அணியின் கேப்டன் கை சைகை காட்டி அழைத்தார். இதனையடுத்து ரிஸ்வான் வெளியேறினார்.

    இறுதியில் மெல்ர்போன் அணி 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது. குறிப்பாக அவர் வெளியேறியதையடுத்து கடைசி 2 ஓவரில் அந்த 16 ரன்கள் எடுத்தது. இது தொடர்பான நெட்டிசன்கள் பாகிஸ்தான் வீரர்களை அசிங்கப்படுத்தும் செயல் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 257 ரன்கள் குவித்தது.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது.

    பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் பின் ஆலன் 79 ரன்னும், கூப்பட் கனோலில் 77 ரன்னும் அடித்தனர்.

    பிரிஸ்பேன் ஹீட் அணி சார்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன காலின் முன்ரோ கோல்டன் டக் அவுட்டானார்.

    அடுத்து இணைந்த ஜாக் வைல்டர்முத்-மேட் ரென்ஷா ஜோடி அதிரடியாக ஆடியது.

    பெர்த் அணியின் பந்துவீச்சை இந்த ஜோடி வெளுத்து வாங்கியது. சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 212 ரன் சேர்த்த நிலையில் ரென்ஷா 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ் பிரையண்ட் தனது பங்குக்கு 28 ரன்கள் அடித்து ரிட்டயர்டு ஹர்ட் ஆனார்.

    இறுதியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 19.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய ஜாக் வைல்டர்முத் 110 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதன்மூலம் பிக் பாஷ் லீக் வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை பிரிஸ்பேன் படைத்துள்ளது.

    • ஐபிஎல் போட்டியில் விளையாடுவதில்லை என முடிவு எடுத்த நிழைலயில் ILT20 ஏலத்தில் பெயர் பதிவு செய்துள்ளார்.
    • ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அஸ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசனில் விளையாடினார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில்லை என அறிவித்தார். இந்திய அணி, ஐபிஎல் போட்டியில் விளையாடாத வீரர் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் அஸ்வின் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி20 (சர்வதேச லீக் டி20 தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதனால் வெளிநாடுகளில் நடைபெறும் லீக்கில் விளையாடுவது உறுதியானது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கிலும் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ டோட் க்ரீன்பெர்க், அஸ்வினுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வின் பிக் பாஷ் லீக்கில் விளையாட முன்வந்தால், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடுவது முதல் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஆவார்.

    • முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 175 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பெர்த் அணி 19.3 ஓவரில் 177 ரன்கள் எடுத்து வென்றது.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடரின் 12வது சீசன் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. மெக்ஸ்வீனி 41 ரன்னும், ஹேஸ்ல்லெட் 34 ரன்னும் அடித்தனர்.

    பெர்த் அணி சார்பில் பெஹண்ட்ராப், கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் பெர்த் அணி களமிறங்கியது.

    பரபரப்பாக நடைபெற்ற ஆட்டததில் பெர்த் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அத்துடன் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கேப்டன் ஆஷ்டன் டர்னர் 53 ரன்கள் அடித்தார். இறுதியில் நிக் ஹாப்சன் 7 பந்தில் 18 ரன்களும், கூப்பர் கன்னோலி 11 பந்தில் 25 ரன்னும் எடுத்து அணியின் வெற்றியை எளிதாக்கினர்.

    ஆட்ட நாயகன் விருது ஆஷ்டன் டர்னருக்கும், தொடர் நாயகன் விருது மேத்யூ ஷார்ட்டுக்கும் அளிக்கப்பட்டது.

    • டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    • தற்போது பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால், டி20-யில் மட்டும் விளையாடுவதாக அறிவித்துள்ளார்.

    தற்போது ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இன்று சிட்னி மைதானத்தில் சிட்னி தண்டர்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின.

    சிட்னி தண்டர் அணிக்காக டேவிட் வார்னர் விளையாடி வருகிறார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்திற்குள் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்து தரையிறங்கியது. போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள் என்னடா? மைதானத்திற்குள் ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது என அச்சமைடந்தனர்.

    ஆனால் ஹெலிகாப்டரில் இருந்து டேவிட் வார்னர் ஹாலிவுட் பட பாணியில் ஒய்யாரமாக இறங்கி வந்தார். இதனால் ஆச்சர்யம் அடைந்த ரசிகர்களுக்கு டேவிட் வார்னர் ஏன் ஹெலிகாப்டர் மூலம் வர வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது.

    டேவிட் வார்னரின் சகோதரர் திருமணம் ஹன்டர் பள்ளத்தாக்கில் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட பிறகு போட்டி நடைபெறும் இடத்திற்கு வாகனத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவது இயலாத காரியம். இதனால் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார்.

    கிரிக்கெட்டால் மட்டுமல்ல பொழுதுபோக்கு போன்ற செயல்களாலும் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் டேவிட் வார்னர்.

    • இப்போட்டி முழுமையாக அடைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றது.
    • பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டதா என்றும் சோதனை செய்யப்பட்டது.

    பிக் பாஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீரர்களும் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இதனால் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 19.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க் ஸ்டெக்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    இந்நிலையில் இப்போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை இழந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ், இன்னிங்சின் 8-வது ஓவரின் 3-வது பந்தை சிக்சர் அடிக்கும் முயற்சியில் விளாசினார். அதனை கேன் ரிச்சர்ட்சன் கேட்ச் பிடித்தார்.

    இருப்பினும் இப்போட்டி முழுமையாக அடைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றதால், பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டதா என்றும் சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் அது மேற்கூரையில் படாமல் ஃபீல்டரிடம் சென்றதையடுத்து அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டொய்னிஸ் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

    இதில் சுவாரஸ்யமான விசயம் என்னவெனில், இப்போட்டியை காண உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச்சும் மைதானத்தில் இருந்தார். இந்த கேட்சைப் பார்த்த அவரும் என்ன நடந்தது என நம்பமுடியாமல் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தார். ஸ்டோய்னிஸ் விக்கெட் இழந்த விதத்தைப் பார்த்து ஷாக்கான ஜோகோவிச்சின் வீடியோ வைரலாகி வருகிறது. 

    ×