என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perth Scorchers"

    • பெர்த்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.
    • டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    பெர்த்:

    பிக்பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் பிலிப், ஹென்ரிக்ஸ் ஆகியோர் 24 ரன்கள் எடுத்தனர்.

    பெர்த் ஸ்கார்சர்ஸ் சார்பில் டேவிட் பைன், ஜேய் ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டும், பியர்ட்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 17.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுடன், 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 44 ரன்னும், பின் ஆலன் 33 ரன்னும், ஜோஷ் இங்லிஸ் 29 ரன்னும் எடுத்தனர்.

    இதன்மூலம் பிக்பாஷ் லீக் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையை பெர்த் ஸ்கார்சர்ஸ் பெற்றது.

    ஆட்ட நாயகன் விருது டேவிட் பைனுக்கும், தொடர் நாயகப் விருது சாம் ஹார்பருக்கும் அளிக்கப்பட்டது.

    • சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 2015, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வென்றிருந்த நிலையில், தற்போதும் வெற்றி.
    • ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிக்ஸர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் சேர்ந்து, இதுவரை நடந்த 15 பிபிஎல் தொடர்களில் ஒன்பதை வென்றுள்ளன.

    ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற 15வது பிபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி. இதன் மூலம் பிபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.

    பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி இன்று இறுதிப்போட்டியில் ஒன்பதாவது முறையாகவும், சிக்ஸர்ஸ் அணிக்கு எதிராக ஆறாவது முறையும் களமிறங்கியது. இதற்கு முன்பு சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 2015, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வென்றிருந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக இறுதிப் போட்டியில் தோற்கடித்து, அதன் ஆதிக்கத்தைத் தொடர்ந்துள்ளது. ஸ்கார்ச்சர்ஸ் அணி, பிபிஎல் இறுதிப் போட்டியில் சிஸ்சர்ஸ் அணியிடம் இரண்டு முறை, அதாவது 2012 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தோற்றுள்ளது. 

    2011, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்களான சிஸ்சர்ஸ் அணி, பிபிஎல்-லின் இரண்டாவது மிக வெற்றிகரமான அணியாகும். இந்த ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிக்ஸர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் சேர்ந்து, இதுவரை நடந்த 15 பிபிஎல் தொடர்களில் ஒன்பதை வென்றுள்ளன. 

    பிரிஸ்பேன் ஹீட் அணி 2012 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சாம்பியனாக முடிசூட்டப்பட்டுள்ளது. அதே சமயம், சிட்னி தண்டர், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு பட்டத்தை வென்றுள்ளன. 

    பிக் பாஷ் லீக்

    பிக் பாஷ் லீக், இந்தியாவின் ஐபிஎல் தொடர்போல ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடராகும். இது டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெறும். இந்த கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவால் 2011இல் தொடங்கப்பட்டது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

    • பெர்த்தில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.
    • டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    பெர்த்:

    பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், பெர்த்தில் இன்று நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்சர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது. பின் ஆலன் 49 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களமிறங்கியது. பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் 15 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி சார்பில் மாலி பேர்ட்மேன் 3 விக்கெட்டும், டேவிட் பைன், கூப்பர் கன்னோலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது பின் ஆலனுக்கு அளிக்கப்பட்டது.

    • முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 175 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பெர்த் அணி 19.3 ஓவரில் 177 ரன்கள் எடுத்து வென்றது.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடரின் 12வது சீசன் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. மெக்ஸ்வீனி 41 ரன்னும், ஹேஸ்ல்லெட் 34 ரன்னும் அடித்தனர்.

    பெர்த் அணி சார்பில் பெஹண்ட்ராப், கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் பெர்த் அணி களமிறங்கியது.

    பரபரப்பாக நடைபெற்ற ஆட்டததில் பெர்த் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அத்துடன் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கேப்டன் ஆஷ்டன் டர்னர் 53 ரன்கள் அடித்தார். இறுதியில் நிக் ஹாப்சன் 7 பந்தில் 18 ரன்களும், கூப்பர் கன்னோலி 11 பந்தில் 25 ரன்னும் எடுத்து அணியின் வெற்றியை எளிதாக்கினர்.

    ஆட்ட நாயகன் விருது ஆஷ்டன் டர்னருக்கும், தொடர் நாயகன் விருது மேத்யூ ஷார்ட்டுக்கும் அளிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் அடிலைட் ஸ்டிரைகர்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்.
    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், அடிலைட் ஸ்டிரைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற அடிலைட் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டிவைன் 35 ரன்னும், காப் 32 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலைட் அணி களம் இறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ் #BigBashLeague
    பிக் பாஷ் டி20 லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற மெல்போர்ன் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பெர்த் அணி முதலில் பேட்டிங் செய்தது. மெல்போர்ன் அணியின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பெர்த் அணி 19 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 103 ரன்னில் சுருண்டது. கிளிங்கர் 28 ரன்களும், வில்லே 12 ரன்களும், கார்ட்ரைட் 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். மெல்போர்ன் அணி சார்பில் ரிச்சர்ட்சன், கிறிஸ்டியன் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் அணி களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் மெல்போர்ன் 17 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறிது.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு ஹார்பர் உடன் முகமது நபி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹார்பர் 25 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்தார். நபி 27 பந்தில் நான்கு பவுண்டரி, 2 சிக்சருடன் 35 ரன்கள் குவித்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்ன் ரெனேகட்ஸ் 15.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ×