என் மலர்

  நீங்கள் தேடியது "Big Bash T20 League"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ். #BigBashLeague
  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

  டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பிரிஸ்பேன் ஹீட் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பிரையன்ட் 28 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் கிறிஸ் லின் 55 பந்தில் 84 ரன்கள் விளாச பிரிஸ்பேன் ஹீட் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது.

  பின்னர் 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டன் ஹென்ரிக்ஸ் 57 ரன்னும், அவெண்டானோ 30 ரன்னும், சில்க் 46 ரன்களும் விளாச சிட்னி சிக்சர்ஸ் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 165 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  மற்றொரு ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டரை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் #BigBashLeague
  ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டர் - அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.

  டாஸ் வென்ற அடிலெய்டு பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் கேரி 40 பந்தில் 59 ரன்களும், கேப்டன் இன்கிராம் 43 பந்தில் 75 ரன்களும் விளாச அடிலெய்டு 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் அணி களம் இறங்கியது.

  வாட்சன் (28), பட்லர் (23), பெர்குசன் (47), ஜோ ரூட் (18) ரன்களில் வெளியேற சிட்னி தண்டர் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ் #BigBashLeague
  பிக் பாஷ் டி20 லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின.

  டாஸ் வென்ற மெல்போர்ன் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பெர்த் அணி முதலில் பேட்டிங் செய்தது. மெல்போர்ன் அணியின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பெர்த் அணி 19 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 103 ரன்னில் சுருண்டது. கிளிங்கர் 28 ரன்களும், வில்லே 12 ரன்களும், கார்ட்ரைட் 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். மெல்போர்ன் அணி சார்பில் ரிச்சர்ட்சன், கிறிஸ்டியன் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

  பின்னர் 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் அணி களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் மெல்போர்ன் 17 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறிது.

  ஐந்தாவது விக்கெட்டுக்கு ஹார்பர் உடன் முகமது நபி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹார்பர் 25 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்தார். நபி 27 பந்தில் நான்கு பவுண்டரி, 2 சிக்சருடன் 35 ரன்கள் குவித்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்ன் ரெனேகட்ஸ் 15.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் 8 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளரான போப் பிக்பாஷ் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். #BigBash
  நியூசிலாந்தில் இந்த வருட தொடக்கத்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் லெக் ஸ்பின்னரான ஆஸ்திரேலியாவின் லாய்டு போப் சிறப்பாக பந்து வீசினார்.

  இங்கிலாந்துக்கு எதிராக 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் சாய்த்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் குயின்ஸ்லாந்து அணிக்கெதிராக 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார்.  இந்நிலையில் இளம் வீரரான லாய்டு போப்பை பிக்பாஷ் தொடரில் விளையாடும் சிட்னி சிக்சர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.  19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடிய பிரித்வி ஷா இந்திய அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான முகமது நபி மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #BigBash
  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் முகமது நபி. இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக 2-வது முறையாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

  20 ஓவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தி வருகிறார்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் ஏற்கனவே பல லீக் தொடரில் விளையாடி வருகிறார்கள். ரஷித் கான் சராசரியாக ஒரு ஓவருக்கு 5.65 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். நபி 5.76 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.  கடந்த சீசனில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிராக 30 பந்தில் 52 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். நபி இறுதிப் போட்டிக்கான நேரத்தில் சர்வதேச போட்டிக்கு திரும்பினார். அந்த போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட்டும், துணைக் கேப்டன் ஜோஸ் பட்லரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடுகிறார்கள். #BigBash2018
  இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாடும் முன்னணி வீரர்கள் பொதுவாக வெளிநாட்டில் நடைபெறும் டி20 லீக் தொடரில் பங்கேற்று விளையாடுவது கிடையாது. ஆனால் தற்போது ஏராளமான வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக்கில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

  2018 ஐபிஎல் தொடரில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடினார்கள். டெஸ்ட் அணி கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன ஜோ ரூட் ஐபிஎல் ஏலத்தில் ஏலம் போகவில்லை. அவரை எந்த அணியில் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.  இந்நிலையில் தற்போது ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோரை பிக் பாஷ்  டி20 லீக்கில் விளையாடும் சிட்னி தண்டர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 2018-19 சீசனில் இருவரும் ஏழு போட்டிகளில் விளையாடுவார்கள்.

  ஜோஸ் பட்லர் முதல்முறையாக விளையாட இருக்கிறார். அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஜோஸ் பட்லர் கடந்த பிக்பாஷ் சீசனில் 202 ரன்கள் சேர்த்தார்.
  ×