என் மலர்
நீங்கள் தேடியது "டி20"
- போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடைபெறுகிறது.
- இந்திய நேரப்படி, இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி அந்நாட்டின் அணிக்கு எதிராக நான்கு 20 ஓவர் மற்றும் 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டி இந்திய நேரப்படி, இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, டேவிட் மலான், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், ஹாரி புரூக் மற்றும் நியூசிலாந்து அணியில் கேப்டன் டிம் சவுதி, டிவான் கான்வே, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் உள்பட தரமான வீரர்களும் விளையாடுகின்றனர்.
- அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றிவிட்டது.
- தொடரை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி கடைசி போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையில் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துவங்க இருந்த நிலையில், போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே மழை பெய்து வந்ததால், போட்டியில் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை (6-ந் தேதி) தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.
- அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
நாமக்கல்:
தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு, மார்ச் 13-ல் தொடங்கி, கடந்த 3-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அதேபோல்,
பிளஸ்-1 பொதுத்தேர்வு, மார்ச் 14-ல் தொடங்கி இன்று முடிகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை (6-ந் தேதி) தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
இதற்காக மாவட்டம் முழுவதும் 94 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 94 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 95 துறை அலு வலர்கள், 1,731 அறை கண்காணிப்பாளர்கள், 140 பறக்கும் படை உறுப்பி னர்கள், 9 கட்டுக்காப்பு மைய அலுவலர்கள் என மொத்தம் 2,069 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும், பொதுத் தேர்வு எழுதும் மையங்களுக்கு, பலத்த போலீஸ் பாது காப்புடன், வினாத்தாள் எடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. தேர்வில் எவ்வித விதிமீறலும் நடக்காமல் இருக்க, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
- குந்தாபாலம் பகுதியில் சுமார் 4 வீடுகள் சேதமடைந்தன.
- ஒவ்வொரு வீடுகளுக்க்கும் தலா 5000 வீதம் 4 வீடுகளுக்கு மொத்தம் 20ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட மஞ்சூர் பகுதியில் தொட்டகம்பை, சேரனூர், குந்தாபாலம் பகுதியில் சுமார் 4 வீடுகள் சேதமடைந்தன.
சேதமடைந்த வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் ஒவ்வொரு வீடுகளுக்க்கும் தலா 5000 வீதம் 4 வீடுகளுக்கு மொத்தம் 20ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
அவருடன் கீழ் குந்தா பேரூராட்சி செயலாளர் சிவராஜ், கீழ்குந்தா பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பெள்ளி, சக்ஸஸ் சந்திரன், பாசறை பேரூராட்சி செயலாளர் ஜெயபிரகாஷ், மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு பேரூராட்சி செயலாளர் சரவணன், கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ், கேத்தி ராஜூ, வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தேசியமய–மாக்கப்பட்ட வங்கி கணக்கு முடக்கம் செய்யப்–படுவதாக சில தினங்களுக்கு முன்பு எஸ்எம்எஸ் வந்துள்ளது.
- மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.14,756 மீட்டு மீண்டும் சரவணன் வங்கி கணக்கில் சேர்த்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் அருகே உள்ள ஓமலூர் அடுத்த தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவர் மினி டெம்போ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படுவதாக சில தினங்களுக்கு முன்பு எஸ்எம்எஸ் வந்துள்ளது. மேலும் அதில் உள்ள லிங்கை பார்க்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை உண்மை என்று நம்பிய சரவணன் அந்த லிங்கை பார்த்தபோது அதில் கேட்கப்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20,236 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.14,756 மீட்டு மீண்டும் சரவணன் வங்கி கணக்கில் சேர்த்தனர்.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே.20 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
- எஸ்.கே.20 படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'டான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபீஸில் வசூலில் சாதனை படைத்தது. இதையடுத்து, சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்து வரும் படம் 'எஸ்.கே.20'. இப்படத்தை தெலுங்கில் வெளியான 'ஜாதி ரத்னாலு' படத்தின் இயக்குனர் அனுதீப் கேவி இயக்குகிறார். இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

எஸ்கே20
தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று 'எஸ்.கே.20' திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுனர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 'எஸ்.கே.20' படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செய்பெர்ட், கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தலா 12 ரன்னில் ஆட்டமிழந்தனர். சுழற்பந்து வீச்சாளர் குருணால் பாண்டியா துள்ளியமாக பந்து வீச கேன் வில்லியம்சன் 20 ரன்னிலும், மிட்செல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்னுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராண்ட்ஹோம் 28 பந்தில் 4 சிக்சர், 1 பவுண்டரியுடன் 50 ரன்கள் சேர்த்தார். ராஸ் டெய்லர் 42 ரன்கள் சேர்த்தார். சான்ட்னெர் 7 ரன்னிலும், சவுத்தி 3 ரன்னிலும ஆட்டமிழக்க நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.
இதனால் இந்தியாவிற்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குருணால் பாண்டியா 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


Surging Into Week 2.. Crossing Borders.. Redefining History. #2Point0 Enters the 500 Crore Club! #2Point0EpicBlockbuster#2Point0@2Point0movie@rajinikanth@akshaykumar@shankarshanmugh@arrahman@iamAmyJacksonpic.twitter.com/Agq5ZMsxGB
— Lyca Productions (@LycaProductions) December 6, 2018