search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Lara"

  • ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு இருவரும் டி20-யில் விளையாடவில்லை.
  • அடுத்த ஆண்டு வெஸ்ட்இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கும் உலகக் கோப்பையில் அவர்கள் இடம் பிடிப்பார்களா? என்பது கேள்வி.

  20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 3-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் 55 ஆட்டங்களை கொண்டது.

  இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

  சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் (50 ஓவர்) இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. அபாரமாக விளையாடி முக்கியமான ஆட்டத்தில் தோல்வி ஏற்படுவது சில சமயங்களில் நடக்கும்.

  விராட் கோலி, ரோகித் சர்மா அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களது அனுபவத்துக்கு மாற்று இல்லை. வெஸ்ட்இண்டீஸ் ஆடுகளங்களை நன்கு அறிந்தவர்கள். சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இதனால் 20 ஓவர் உலக கோப்பையில் அவர்கள் விளையாட வேண்டும். அவர்களை அணியில் சேர்க்க வேண்டும்.

  இந்தியா எந்த அணியை தேர்வு செய்தாலும் ஒரு வலிமையான சக்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் கோலியும், ரோகித் சர்மாவும் ஜாம்பவான்கள். அவர்களை எளிதில் நிராகரித்துவிட இயலாது.

  இவ்வாறு லாரா கூறியுள்ளார்.

  இந்திய அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை அரைஇறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்தப் போட்டியில் இருந்து ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் அளவில் இடம் பெறவில்லை.

  ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட இளம் வீரர்களை கொண்டு 20 ஓவர் அணி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

  ஐபிஎல் தொடரில் யாராவது ஒரு வீரர் பெரிய ஷாட்டையோ அல்லது எதாவது மைல்கல்லையோ அடையும்போது கேமராவில் குடும்ப உறுப்பினர்கள் காட்டப்படுவர்.
  மும்பை:

  தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், தென் ஆப்ரிக்கா வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

  இதில் பட்லர் 16 போட்டிகளில் விளையாடி 4 சதம் உட்பட 824 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் யாராவது ஒரு வீரர் பெரிய ஷாட்டையோ அல்லது எதாவது மைல்கல்லையோ அடையும்போது கேமராவில் குடும்ப உறுப்பினர்கள் காட்டப்படுவர்.

  இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லர் ஒவ்வொரு முறையும் பெரிய ஷாட்டை அடிக்கும்போதும் கேமராவில் வான் டெர் டுசெனின் மனைவி லாரா தவறுதலாக காட்டப்பட்டார். இதனால் பலர் லாராவை பட்லரின் மனைவி என தவறுதலாக நினைத்துவிட்டனர். இதுகுறித்து கிண்டலாக பேசிய லாரா ‘நான் பட்லரை 2வது கணவராக தத்தெடுத்துவிட்டேன்’ என தெரிவித்தார்.

  இதுகுறித்து லாரா கூறியதாவது:-

  நான் ஜோஸ் பட்லரின் மனைவி என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். நான் அவர் சிக்சர் அடிக்கும்போது சில முறை கேமராவில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறார்கள். பட்லரின் மனைவி பெயர் லூசி. நான் அவரை பார்த்தது கூட இல்லை.

  என் கணவர் ரஸ்ஸி சில காரணங்களால் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதில் பட்லருக்கு உற்சாகத்தை தெரிவித்து வருகிறேன். இந்த சீசனில் நான் பட்லரை இரண்டாவது கணவராக தத்தெடுத்துவிட்டேன்.

  இவ்வாறு கிண்டலாக கூறினார். 
  இளம் வீரரான பிரித்வி ஷா சில நேரம் சச்சினாகவும், சில நேரம் சேவாக்காகவும், சில நேரம் லாராவாகவும் தெரிகிறார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். #RaviShastri
  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. ராஜகோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  நேற்றுடன் முடிந்த 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இளம் வீரரான பிரித்வி ஷா டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 154 பந்தில் 19 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் குவித்து அசத்தினார்.  ஐதராபாத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 53 பந்தில் 70 ரன்களும், 2-வது இன்னிங்சில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காலும் இருந்தார். மூன்று இன்னிங்சில் 237 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

  அறிமுக தொடரிலேயே ஆட்ட நாயகன் (முதல் டெஸ்ட்) மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்ற பிரித்வி ஷாவை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார்.  பிரித்வி ஷா குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘பிரித்வி ஷா கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர். அவர் மும்பை அணிக்காக 8 வயதில் இருந்தே விளையாடி கொண்டிருக்கிறார்.  அவர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார். அவர் சில நேரம் சச்சினைப் போன்றும், சில நேரம் சேவாக் போன்று, ஆடுகளத்தில் விளையாடும்போது சில நேரத்தில் பிரையன் லாரா போன்றும் விளையாடுகிறார்.

  தொழில் தர்மத்தை உணர்ந்து தலைநிமிர்ந்து நின்றால் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.’’ என்றார்.
  ×