search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "t20 world cup 2022"

    • தென் ஆப்பிரிக்க அணி ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.
    • நான் விளையாடும் ஒவ்வொரு பெரிய ஆட்டத்திலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் அந்த தருணத்தை அனுபவிக்க சொல்வேன்.

    20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இறுதிப்போட்டி நடைபெறும் மெல்போர்னுக்கு யார் செல்வார்கள் என்று யாருக்கு தெரியும்? ஆனால் ஆஸ்திரேலியா தனது பிரிவில் இருந்து அரை இறுதிக்கு செல்லும். தென் ஆப்பிரிக்க அணி ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் என்று நம்புகிறேன்.

    நான் விளையாடும் ஒவ்வொரு பெரிய ஆட்டத்திலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் அந்த தருணத்தை அனுபவிக்க சொல்வேன். இது ஒரு பெரிய விளையாட்டு என்பதை உணர்ந்து உங்களுக்கும், மற்றவர்களுக்கும் எவ்வளவு அதிகமான திறமையை வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்தினால் சிறப்பாக விளையாடுவீர்கள் என்றார். 

    • இதை விட சிறப்பான கிரிக்கெட் போட்டி இதுவரை நடைபெற்றதில்லை.
    • விராட் கோலி உலகக் கோப்பையில் அவரது முத்திரையை பதித்தார்.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இது குறித்து மெல்போர்னில் பேசிய ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளதாவது: மெல்போர்னில் இதைவிட சிறப்பான கிரிக்கெட் போட்டி இதுவரை நடைபெற்றதில்லை .இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எப்போதுமே பார்க்க முடியாத நம்ப முடியாத ஒரு ஆட்டமாக அது இருந்தது. என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 


    இதற்கு பிறகு உலககோப்பையை கைப்பற்றும் எங்களது எண்ணத்தை அங்கேயே நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி வாழ்க்கையைப் பற்றி நினைக்கும் போது அவரது ஆட்டம் ஆச்சரியமாக இருக்கிறது.12 மாதங்கள் அவர் அலட்சியமாக இருந்துள்ளார். உலகக் கோப்பையில் அவரது முத்திரையை பதித்தார், இது பார்ப்பதற்கு நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸ். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பந்து வீச்சு பலம், பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம்.
    • ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் சிறப்பாக விளையாட முடியாது.

    டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

    இந்த டி20 உலகக் கோப்பையில் உள்ள அனைத்து அணிகளையும்விட, பாகிஸ்தானிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள். ஆஸ்திரேலியாவைப் பார்த்தால், அவர்களிடம் 140 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒரே ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே உள்ளனர். இங்கிலாந்தைப் பொறுத்தவரை, மார்க் வுட் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும்.

    ஆனால். பாகிஸ்தானுக்காக, ஷாஹின் அப்ரிடி, ஹரிஸ் ரவுப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் 140 கிமீக்கு மேல் பந்து வீசுவார்கள். வேகப்பந்து வீச்சுதான் அவர்களின் பலம். இருப்பினும், அவர்களின் பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம். அவர்களிடம் தரமான பவர்-ஹிட்டர் இல்லை, மேலும் அவர்கள்(பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்) ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் விளையாட முடியாது.

    பாபர் சீக்கிரம் அவுட்டானால், இந்தியா தனது மிடில் ஆர்டர் வேகப்பந்து வீச்சை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை, எனவே பவுண்டரி அடிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்காது. இதுவே பாகிஸ்தானுக்கு பலவீனங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • இந்திய அணி பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்ப்பு
    • இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டும் பாகிஸ்தான் பந்து விச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து வெற்றியுடன் இந்த தொடரை இந்திய அணி தொடங்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுவரை இரு அணிகள் இடையே நடைபெற்றுள்ள 11 டி20 போட்டிகளில் இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்திய அணி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா,வீராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் நல்ல நிலையில் உள்ளனர்.

    எனினும் பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார். இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 112 ரன்களில் சுருண்டது.
    • இங்கிலாந்தின் சாம் கர்ரன் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    பெர்த்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 112 ரன்களில் சுருண்டது. இப்ராகிம் சட்ரன் 32 ரன்களும், உஸ்மான் கனி 30 ரன்களும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல் 19 ரன்னும், ஜோஸ் பட்லர் 18 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னிலும் அவுட்டாகினர். டேவிட் மலான் 18 ரன்னிலும், புரூக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 18.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. லிவிங்ஸ்டோன் 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 112 ரன்களை எடுத்தது.

    பெர்த்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

    அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி நிதானமாக ஆடியது. இப்ராகிம் சட்ரன் 32 ரன்கள் எடுத்தார்.

    உஸ்மான் கனி பொறுப்புடன் ஆடி 30 ரன்களை எடுத்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 112 ரன்களில் சுருண்டது.

    இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் கான்வே அதிரடியாக ஆடி 92 ரன்கள் குவித்தார்.

    சிட்னி:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. கான்வே 92 ரன்களுடனும், நீஷம் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17.1 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார்.

    இதன்மூலம் நியூசிலாந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, சான்ட்னர் தலா 3 விக்கெட்டும், டிட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.
    • தேவன் கான்வே அதிரடியாக ஆடி 92 ரன்கள் விளாசினார்

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று சூப்பர்-12 சுற்று தொடங்கியது. இதில் இன்று போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்கள் பின் ஆலன், தேவன் கான்வே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 56 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. ஃபின் ஆலன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கான்வே அரை சதம் கடந்து ஸ்கோரை உயர்த்தினார். கேப்டன் வில்லியம்சன் 23 ரன், கிளென் பிலிப்ஸ் 12 ரன் சேர்த்தனர்.

    அதன்பின்னர் கான்வேயுடன் நீஷம் இணைய, நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. கான்வே 92 ரன்களுடனும், நீஷம் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. 

    • 8 அணிகள் கலந்துகொண்ட முதல் சுற்று நேற்றுடன் முடிந்தது.
    • சூப்பர் 12 சுற்றில் விளையாடும் 12 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்று, சூப்பர் 12 ரவுண்டு என 2 பகுதியாக போட்டியை நடத்த அட்டவணை அமைக்கப்பட்டது.

    தர வரிசை அடிப்படையில் 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 ரவுண்டில் விளை யாடுகின்றன. முதல் சுற்று மூலம் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. 8 நாடுகள் கலந்து கொண்ட முதல் சுற்று நேற்றுடன் முடிந்தது.

    இதன் முடிவில் ஏ பிரிவில் இருந்து இலங்கை, நெதர்லாந்தும் , பி பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, அயர்லாந்தும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து , நமீபியா , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 4 அணிகள் வெளியேற்றப்பட்டன.

    சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. இதில் விளையாடும் 12 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    குருப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து , நியூசிலாந்து , ஆப்கானிஸ்தான் , இலங்கை அயர்லாந்து அணிகளும், குரூப்-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா , வங்காளதேசம், ஜிம்பாப்வே , நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்று உள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    சூப்பர் 12 சுற்றின் இன்றைய தொடக்க ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து, இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    இந்திய அணி கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதற்கு நாளைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. இரு அணிகள் இடையே யான 20 ஓவர் போட்டியில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் இதுவரை 11 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 68.

    உள்நாட்டில் மட்டுமே சிறப்பாக ஆடுகிறது, வெளி நாடுகளில் கோட்டை விட்டு விடுகிறது என்ற விமர்சனம் இந்திய அணி மீது இருக்கிறது. அதை சரி செய்ய உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் வீராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் நல்ல நிலையில் உள்ளனர். ஆல் ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா சாதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார். சமீப காலமாக பந்து வீச்சு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இதை சரி செய்வது அவசியமாகும். பும்ரா, ஜடேஜா இல்லாதது அணிக்கு பாதிப்பே.

    பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் கேப்டன் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், பஹர் ஜமான் ஆகியோரும் பந்து வீச்சில் ஹாரிஸ் ரவூப், முகமது நவாஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீரர் ஷகீன்ஷா அப்ரிடி திரும்பி இருப்பது அணிக்கு கூடுதல் பலமே.

    இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. 80 முதல் 90 சதவீதம் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம். இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்கள் சேர்த்தது.
    • ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக லூக் ஜாங்வே 29 ரன்கள் அடித்தார்.

    ஹோபர்ட்:

    டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 45 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ரசா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி, 18.2 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லூக் ஜாங்வே 29 ரன்கள் அடித்தார். வெஸ்லி 27 ரன்கள் சேர்த்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 152 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 73 ரன்னில் சுருண்டது.

    சிட்னி:

    8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

    16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

    இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 73 ரன்களில் சுருண்ட் பரிதாபமாக தோற்றது.

    இதில் ஐக்கிய அரபு அமீரக அணி வீரர் ஜுனைத் சித்திக் 17-வது ஓவரில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். அது 109 மீட்டர் தூரம் சென்றது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதலில் விளையாடிய நமீபியா அணி 121 ரன்கள் அடித்தது.
    • நெதர்லாந்து அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.

    கீலாங்:

    16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நமீபியா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் பிரைலின்க் 43 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து 122 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங் 39 ரன்களும் மேக்ஸ் ஓடொவ்ட் 35 ரன்களும் எடுத்தனர். இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், லீடே முதல் பந்தில் பவுண்டரி அடித்தும், 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற செய்தார்.

    இறுதியில் அந்த அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் அடித்தது. இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெதர்லாந்து இந்த சுற்றில் தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    ×