என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்- நமீபியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
    X

    நெதர்லாந்து வீரர்கள்

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்- நமீபியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி

    • முதலில் விளையாடிய நமீபியா அணி 121 ரன்கள் அடித்தது.
    • நெதர்லாந்து அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.

    கீலாங்:

    16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நமீபியா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் பிரைலின்க் 43 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து 122 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங் 39 ரன்களும் மேக்ஸ் ஓடொவ்ட் 35 ரன்களும் எடுத்தனர். இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், லீடே முதல் பந்தில் பவுண்டரி அடித்தும், 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற செய்தார்.

    இறுதியில் அந்த அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் அடித்தது. இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெதர்லாந்து இந்த சுற்றில் தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    Next Story
    ×