என் மலர்

  நீங்கள் தேடியது "AUSvNZ"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆஸ்திரேலிய அணி 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.
  • நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா.

  கெய்ர்ன்ஸ்:

  நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதல் 2 ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

  இந்நிலையில், தொடரின் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

  அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். அவர் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். லபுஸ்சேன் 52 ரன்களும், அலெக்ஸ் கேரி 42 ரன்களும் எடுத்தனர்.

  நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 2 விக்கெட்டும், டிம் சவுதி, லாக்கி பெர்குசன், சான்ட்னர் தலா 1 விக்கெட்டு வீழ்த்தினர்.

  இதையடுத்து, 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 47 ரன்கள் எடுத்தார்.ஜேம்ஸ் நீஷம் 36 ரன்னும், பின் ஆலன் 35 ரன்னும், சாண்ட்னர் 30 ரன்னும் எடுத்தனர்.

  இறுதியில் நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

  ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஆகியவை அளிக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 232 ரன்கள் எடுத்துள்ளது.
  • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 233 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

  கெய்ர்ன்ஸ்:

  நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

  முதலாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீசுவதாக அறிவித்தது.

  அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்தனர். கான்வே 46 ரன்னும், வில்லியம்சன் 45 ரன்னும், லாதம் 43 ரன்னும் எடுத்தனர்.

  ஆஸ்திரேலியா சார்பில் மேக்ஸ்வெல் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், ஆடம் ஜாம்பா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

  இதையடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் அசத்தலாக பந்து வீசினர். இதனால் 44 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

  அடுத்து இறங்கிய அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன் ஆகியோர் நிதானமாக ஆடி அரை சதமடித்தனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது. அலெக்ஸ் கேரி 85 ரன்னில் அவுட்டானார்.

  இறுதியில், ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 233 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிரீன் 89 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

  நியூசிலாந்து சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், மேட் ஹென்றி, பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மேத்யூ வேட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஷூவில் மதுபானம் ஊற்றி குடித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

  நேற்று நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. 

  முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு  172 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்

  173 ரன்கள் அடித்தால்  வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தார். 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்து வார்னர் ஆட்டமிழந்தார்.

  மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

  இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றது.

  வெற்றிக்கு பின்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் ஓய்வு அறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முக்கியமாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஷூவில் மதுபானம் ஊற்றி குடித்துள்ளனர்.

  மேத்யூ வேட் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஷூவில் மதுபானம் ஊற்றி குடித்துள்ளனர்.

  இவர்கள் மூவரும் ஷூவில் மதுபானம் ஊற்றி குடித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷுடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தார்.
  துபாய்:

  டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

  அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 85 ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி 77 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர் அரை சதமடித்தார்.

  இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

  இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது மிட்செல் மார்ஷுக்கும், தொடர் நாயகன் டேவிட் வார்னருக்கும் வழங்கப்பட்டது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
  துபாய்:

  ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.

  இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதேசமயம் மற்றொரு துவக்க வீரர் வார்னர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். அவர் 38 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 53 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தார்.

  வார்னர்

  இதேபோல் நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த மிட்செல் மார்ஷ், விரைவாக அரை சதம் கடந்ததுடன், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுமுனையில் மேக்ஸ்வெல்லும் பொறுப்புடன் ஆடினார். 

  இதனால், ஆஸ்திரேலிய அணி 7 பந்துகள் மீதமிருந்த நிலையில், 173 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்ஷ் 50 பந்துகளில் 77 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

  இதன்மூலம், முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி உள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்த நிலையில், ஹாசில்வுட் ஓவரில் ஆட்டமிழந்தார்.
  துபாய்:

  ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

  துவக்க வீரர்களான டேரில் மிட்செல் 11 ரன்னிலும், மார்ட்டின் குப்தில் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 32 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். மறுமுனையில் பிலிப்ஸ் நிதானமாக ஆடினார்.

  மார்ட்டின் குப்திலை அவுட் ஆக்கிய ஆடம் ஜம்பா

  அணியின் ஸ்கோர் 144 ஆக இருந்தபோது, பிலிப்ஸ் 18 ரன்களில் அவுட் ஆனார். வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்த நிலையில், ஹாசில்வுட் ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

  ஜேம்ஸ் நீஷம் 13 ரன்கள் , டிம் செய்பர்ட் 8 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.  ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட் 3 விக்கெட் வீழ்த்தினார். 

  இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்துக்கு அது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக அமையும்.
  துபாய்:

  ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதல் சுற்று மற்றும் சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 

  கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த இங்கிலாந்து அரைஇறுதியுடன் வெளியேற்றப்பட்டது. விராட் கோலி தலைமையில் பங்கேற்ற இந்திய அணி சூப்பர்-12 சுற்றை கூட தாண்டவில்லை.

  இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

  ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இங்கிலாந்திடம் கோட்டை விட்டது. நியூசிலாந்து இறுதிச் சுற்றை அடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். 

  கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சூப்பர்- 12 சுற்றில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் அரைஇறுதிக்கு வந்தது.  ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சூப்பர்-12 சுற்றின் லீக் சுற்றில் 4-ல் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் ‘ரன்ரேட்’ அடிப்படையில் அரை இறுதியை எட்டியது. தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட பாகிஸ்தானை அரைஇறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா சாய்த்தது.

  உலக கோப்பையை வெல்வதில் இரு அணி வீரர்களும் புது உத்வேகத்துடன் களமிறங்கி உள்ளனர்.  இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால் நியூசிலாந்துக்கு அது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக அமையும். மேலும் 2015-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. அதற்கு பழிதீர்க்க வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொள்வார்கள். 

  50 ஓவர் உலக கோப்பையை 5 முறை வசப்படுத்தியுள்ள ஆஸ்திரேலியாவுக்கு 20 ஓவர் உலக கோப்பை தான் இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. அதை வெல்வதற்கு இப்போது அரிய சந்தர்ப்பம் கனிந்துள்ளது.
  ×