என் மலர்
நீங்கள் தேடியது "Glenn Maxwell"
- பிக்பாஸ் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் -மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆகிய அணிகள் மோதின.
- முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடியில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.
பிக்பாஸ் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் -மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடியில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.
முன்னதாக இந்த போட்டியில் மேக்ஸ்வெல் ஒரு சிறப்பான கேட்ச் பிடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த வகையில் 16 ஓவரை லாரன்ஸ் வீசினார். அவர் வீசிய முதல் பந்தையே வில் சிக்சர் அடிக்க முயற்சித்தார். அப்போது லாங் ஆனில் இருந்த மேக்ஸ்வெல் அவர் அடித்த பந்தை சாமர்த்தியமாக பிடித்தார்.
UNBELIEVABLE CATCH FROM MAXWELL in BBL!!That truly is one of the greatest catches of all time.#BBL #BBL14 #Maxwell @StarsBBL pic.twitter.com/TOU3U9yNhu
— Satya_vk (@satyavk15) January 1, 2025
கிட்டத்தட்ட அந்த பந்து பவுண்டரி கோட்டை கடந்தது. அந்த பந்தை மேக்ஸ்வெல் பிடித்து மேலே தூக்கி போட்டு மீண்டும் எல்லை கோட்டுக்கு வந்து கேட்ச் பிடித்து அசத்தினார். அவரது கேட்சை சக வீரர்கள் பாராட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பலவீனங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
- ஷார்ட் பால், டிரைவ் சிறப்பாக விளையாடுகிறார்.
இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் பலவீனங்கள் இருப்பதாக தெரியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பலவீனங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஷார்ட் பால், டிரைவ் சிறப்பாக விளையாடுகிறார். சுழற்பந்து வீச்சையும் சாதாரணமாக எதிர் கொள்கிறார். அழுத்தமான சூழ்நிலையிலும் எளிதாக விளையாடுகிறார். அவர் டெஸ்ட்டில் 40-க்கும் மேற்பட்ட சதங்களை விளாச போகிறார். மேலும் பல சாதனைகளை படைக்க உள்ளார்.
இவ்வாறு மேக்ஸ்வெல் கூறினார்.
- ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
- மேக்ஸ்வெல் 10,000 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
பிரிஸ்பேன்:
பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
இதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் 10,000 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தச் சாதனையை படைத்த 3-வது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தத்தில் 16-வது வீரர் என்ற பெருமையை மேக்ஸ்வெல் பெற்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 19 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து இந்த சாதனையை அவர் ஏற்படுத்தி இருக்கிறார்.
இதுவரை 448 போட்டிகளில் பங்கேற்று 421 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் மொத்தம் 10,031 ரன்களை எடுத்து பேட்டிங் சராசரி 27.70 வைத்திருக்கிறார். இவற்றில் 7 சதங்களும், 54 அரை சதங்களும் அடங்கும். ஆட்டமிழக்காமல் 154 ரன்கள் என்பதே இவருடைய அதிகபட்ச ரன் குவிப்பு ஆகும்.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் (12,411 ரன்), ஆரோன் பின்ச் (11,458 ரன்கள்) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.
- ஆஸ்திரேலிய டூரின்போது விராட் என்னிடம் ஒரு திட்டத்தை கூறினார்.
- பெங்களூரு எனது வாழ்க்கையில் முக்கியமான ஆட்டங்களை விளையாட என்னை அனுமதித்தது
ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருபவர் ஆஸ்திரேலிய கிரிக்ட்டர் கிளென் மேக்ஸ்வெல். இவர் தனது வாழ்க்கை குறித்து சுயசரிதை பாணியில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணியில் விளையாடும் மேக்ஸ்வெல், விராட் கோலி மற்றும் ஆர்சிபி அணி குறித்து தனது புத்தகத்தில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய டூரின்போது விராட் என்னிடம் ஒரு திட்டத்தை கூறினார். 2021 இல் ஆர்சிபியில் விராட், நான் மற்றும் ஏபி டெல்விலியர்ஸ் மிடில் ஆர்டரில் விளையாடுவோம் என்று அவர்கூறிய திட்டம் எனக்கு பிடித்திருந்தது. சச்சின், ரிக்கிக்கு இணையான வீரர்களுடன் விளையாடுவது அற்புதமானது. அதன்பின் ஏலங்கள் நடந்தன. ஆர்சிபி என்னை தேர்ந்தெடுத்து அழைத்தபோது, உலகிலேயே மகிழ்ச்சியான கிரிக்கெட்டராக என்னை உணர்ந்தேன்.

பெங்களூரில் ஒரு பிளேயராக எனது இரண்டாவது ஆட்டத்தை தொடங்கினேன். பெங்களூரு எனது வாழ்க்கையில் முக்கியமான ஆட்டங்களை விளையாட என்னை அனுமதித்தது. 2023 மூன்றாவது சீசனின்போது ஆர்சிபியை நான் எனது வீடாக உணரத் தொடங்கினேன். உரிமையாளர்கள் மிகவும் பக்கபலமாக இருந்தனர் என்று தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

- இன்ஸ்டாகிராமில் பாலோ செய்ய தேடும்போது அவரது பெயர் கிடைக்கவில்லை.
- விராட் கோலி என்னை பிளாக் செய்திருப்பார் என என்னால் நம்ப முடியவில்லை.
சிட்னி:
ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருபவர் கிளென் மேக்ஸ்வெல். இவர் விராட் கோலியுடன் மிக நெருக்கமாக நட்பு கொண்டுள்ளவர்.
சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கிளென் மேக்ஸ்வெல் பங்கேற்றார். அப்போது அவர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் தன்னை பிளாக் செய்தது குறித்து பேசியதாவது:
நான் ஆர்.சி.பி. அணிக்கு வருவது உறுதியானதும் எனக்கு மெசேஜ் செய்து விராட் கோலிதான் முதலில் வரவேற்றார். பிறகு அவருடன் இணைந்து நான் முகாமில் பயிற்சி செய்தேன்.
நாங்கள் கலந்து பேசுவதற்கு சிறப்பான நேரங்கள் அமைந்தது. பிறகு நான் அவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்ய தேடும்போது அவரது பெயர் கிடைக்கவில்லை. அதற்கு முன் அவரை பாலோ செய்ய எனக்கு தோன்றவில்லை.
இன்ஸ்டாகிராமில் அவருடைய பெயரை நான் தேடி கிடைக்காதபோது, ஒருவர் என்னிடம் விராட் கோலி உங்களை பிளாக் செய்திருந்தால் மட்டுமே அவருடைய பெயரை நீங்கள் தேடும் பொழுது கிடைக்காது என கூறினார்.
விராட் கோலி என்னை பிளாக் செய்திருப்பார் என என்னால் நம்ப முடியவில்லை.
நான் இதை விராட் கோலியிடம் கேட்டபோது அதற்கு அவர், நீ டெஸ்ட் தொடரில் என்னிடம் கோபமாக நடந்துகொண்டாய். அதனால் உன்னை நான் இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்திருக்கலாம் என சொன்னார்.
அது நியாயமான காரணம் என நினைத்தேன். அதன்பின், அவர் மீண்டும் என்னை அன்பிளாக் செய்துவிட்டார். அப்போதிலிருந்து நாங்கள் மீண்டும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம் என தெரிவித்தார்.
- கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல் கடுமையாக சொதப்பினார்.
- இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.
ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆர்சிபி-யை Unfollow செய்ததால் அவர் அணியை விட்டு வெளியேறலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய அவர் கடுமையாக சொதப்பினார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. சில போட்டிகளில் இருந்து அவரே வெளியேறுவதாக தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருக்கும் மேக்ஸ்வெல், ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறார் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், ஆர்சிபி அணி ஐபிஎல் 2024 சீசனில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்சிபி அணியை Unfollow செய்துள்ளார். இதன்மூலம் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2025-யில் புதிய உரிமைக்காக விளையாட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அடுத்த சீசனில் ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டுமே தக்கவைக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
- ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டதால் சிக்க
- ஸ்காட்லாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் இங்கிலாந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைக்கான தொடக்க சுற்று ஆட்டம் நடைபெற்றது. "பி" பிரிவில் ஆஸ்திரேலியா- ஸ்காட்லாந்து இடையிலான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் சூப்பர் 8 சுற்று முன்னேறும் என்ற நிலை இருந்தது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் குவித்தது. பின்னர் ஆஸ்திரேலியா 19.4 ஓவரில்தான் இலக்கை எட்டியது. கடைசி ஓவர் வரை போட்டி சென்றது. இதனால் பரப்பான நிலை ஏற்பட்டது.
இதனால் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல விமானங்களில் டிக்கெட் புக் செய்வதும், கேன்சல் செய்வதுமாக இருந்தனர். அவர்களிடம் பீதி தொற்றியிருந்தது.
கடைசி ஓவரின் 3-வது பந்தில் டிம் டேவிட் கேட்ச் தவற விட்டபோது இங்கிலாந்து வீரர்கள் அறையில் ஒருவிதமான பதட்டம் இருந்துள்ளது. கேட்ச் விட்டபின்னர் 2 பந்து மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றோம். அதை பார்க்க வேடிக்கயைாக இருந்திருக்கும் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து வீரர்களிடம் இருந்து எனக்க சில தகவல் கிடைத்தது. அப்போது போட்டியில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?. உண்மையிலேயே இங்கிலாந்து லீக் சுற்றோடு திருப்பி அனுப்பப் போகிறீர்களா? இது மிகவும் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் எனத் தெரிவித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
- மேக்ஸ்வெல் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார்.
- கிறிஸ் கெயில் சாதனையை டேவிட் வார்னர் முறியடித்துள்ளார்.
பார்படாஸ்:
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரன் பிஞ்ச் மொத்தம் 103 போட்டிகளில் விளையாடி 3,120 ரன்களை எடுத்திருக்கிறார். இதனை வார்னர் முறியடித்து இருக்கிறார்.
அவர் 56 ரன்கள் (51 பந்துகள், 6 பவுண்டரிகள்) எடுத்த வார்னர், மொத்தம் 104 போட்டிகளில் விளையாடி 3,155 ரன்களை குவித்திருக்கிறார். இந்த போட்டியில், வார்னர் மற்றொரு சாதனையையும் படைத்திருக்கிறார். அவர், 27-வது அரை சதம் அடித்துள்ளார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்திருக்கிறார்.
கெயில் 110 அரை சதம் அடித்திருக்கிறார். வார்னர் மொத்தம் 111 அரை சதம் எடுத்திருக்கிறார். இதேபோன்று, இந்த வரிசையில் இந்திய வீரர் விராட் கோலி இவர்களை நெருங்கும் வகையில், 105 அரை சதம் எடுத்துள்ளார்.
மேலும் இந்த போட்டியில் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்துள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். இதில் 3 கோல்டன் டக் அவுட் ஆகும்.
- ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள்.
- அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆர்வமில்லாதது போல் தெரிகிறது.
ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னையை கடைசி போட்டியில் தோற்கடித்த பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
அதனால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியின் இந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். அவர் இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 52 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சமமாக ஆர்சிபி அணியில் விளையாடவில்லை எனவும் அடுத்து வருடம் ஆர்சிபி அணியில் இருந்து மேக்ஸ்வெல்லை கழற்றி விட வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னார் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாம் மேக்ஸ்வெல் பற்றி பேச வேண்டும். அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான அனுபவம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள். ஆனால் ஐபிஎல் தொடர் என்று வரும் போது மட்டும் அவருக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவருக்கு இங்கே ஆர்வமில்லாதது போல் தெரிகிறது. குறிப்பாக அவுட்டானால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஏனெனில் அவருடைய வங்கிக் கணக்கில் பணம் சென்று விடுகிறது.
அதனால் ஜாலியாக இருந்து சிரித்து விட்டு அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்வார். ஆனால் இறுதி முடிவு என்ன? நீங்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும். எனவே அவரை விட்டு ஆர்சிபி நகர வேண்டும். அவர்கள் தோல்வியை சந்திக்கும் போது என்ன பிரச்சனை என்பதை நாங்கள் இங்கே அமர்ந்து விவாதிக்கிறோம். ஆனால் அவர்கள் 6 வெற்றியுடன் தகுதி பெற்றதால் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையான முடிவு கோப்பை வெல்வதில் தான் இருக்கிறது. அது அவர்களிடம் இல்லாததால் அங்கே பிரச்சினை இருக்கிறது.
இவ்வாறு திவாரி கூறினார்.
- ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக பட்டிதார் 34 ரன்கள் விளாசினார்.
- ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். 17 ரன்னில் டுபிளிசிஸ் அவுட் ஆனார். அதை தொடர்ந்து விராட் கோலி 33 ரன்னிலும் க்ரீன் 27 ரன்னிலும் வெளியேறினார்.
இக்கட்டான சூழலில் களமிறங்கிய மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார். அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய சில நிமிடங்களில் பட்டிதார் 34 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் ரிவ்யூ மூலம் அவுட் இல்லை என தெரிய வந்தது.
இதனையடுத்து தொடர்ந்து விளையாடிய தினேஷ் கார்த்திக், தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்சிபி அணிக்கு ஷாக் கொடுத்து 11 ரன்னில் வெளியேறினார்.
ஒரு முனையில் நான் இருக்கிறேன் என அதிரடி காட்டிய மஹிபால் லோமரோர் 17 பந்தில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.
- ராஜஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார்.
- டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் (32 முறை) 4-வது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். 17 ரன்னில் டுபிளிசிஸ் அவுட் ஆனார். அதை தொடர்ந்து விராட் கோலி 33 ரன்னிலும் க்ரீன் 27 ரன்னிலும் வெளியேறினார்.
இக்கட்டான சூழலில் களமிறங்கிய மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக்கை மேக்ஸ்வெல் சமன் செய்தார். மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் (32 முறை) 4-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சுனில் நரைன் (44 முறை) உள்ளார்.
ஐபிஎல் தொடரில் டக் அவுட் ஆன வீரர்கள் விவரம்:-
18 - தினேஷ் கார்த்திக்
18 - கிளென் மேக்ஸ்வெல்
17 - ரோஹித் சர்மா
16 - பியூஷ் சாவ்லா
- ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
- ஆர்சிபி அணி 6 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி 15.3 ஓவரில் இலக்கை 199 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வி மூலம் ஆர்சிபி அணி 5 தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் காயம் காரணமாக ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக அமையும்.
ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.