என் மலர்
நீங்கள் தேடியது "கிளென் மேக்ஸ்வெல்"
- வருண் சக்கரவர்த்தி பந்து வீச வரும்போதெல்லாம், கிளென் மேக்ஸ்வெல்லின் கால்கள் நடுங்குகின்றன.
- குறிப்பிட்ட பேட்டர்களை முயல் போல் பிடிக்கிறார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீச, ஆஸ்திரேலியா 119 ரன்களில் சுருண்டு 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் மேக்ஸ்வெல் வருண் சக்ரவர்த்தி பந்தில் க்ளீன் போல்டாகியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் வருண் சக்கரவர்த்தி பந்தை 33 முறை எதிர்கொண்டுள்ளார். இதில் 5 முறை அவுட்டாகியுள்ளார்.
மேக்ஸ்வெல்லை அடிக்கடி அவுட்டாக்கி வரும் வருண் சக்கரவர்த்தியை முன்னாள் வீரரும், இந்திய அணியின் தேர்வாளருமான ஸ்ரீகாந்த் பாராட்டிள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்தி கூறியதாவது:-
வருண் சக்கரவர்த்தி பந்து வீச வரும்போதெல்லாம், கிளென் மேக்ஸ்வெல்லின் கால்கள் நடுங்குகின்றன. குறிப்பிட்ட பேட்டர்களை முயல் போல் பிடிக்கிறார் (அவுட்டாக்குகிறார்), குறிப்பாக மேக்ஸ்வெல்லை பார்க்கும்போது, அவர் கேக் துண்டை லபக் என்று விழுங்குவபோல், உடனடியாக அவுட்டாக்குகிறார்.
இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
- ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கவிருக்கிறது.
- இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
இந்தியா ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து நாளை கடைசி ஒருநாள் போட்டி நடக்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இணைந்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், முதல் 2 டி20 போட்டிகளில் விளையாடவில்லை. கடைசி 3 போடிகளில் மட்டுமே விளையாட உள்ளார்.
இது இந்தியாவுக்கு சோக செய்தியாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. எனென்றால் அவர் இந்தியாவுக்கு எதிராக மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியா- நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
- இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1-ந் தேதி நடக்கிறது.
இந்த தொடருக்காக ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
மேலும் அவருக்கு பதிலாக ஜோஷ் பிலிப் அணியில் இடம் பெற்றுள்ளார்.
- ஆஸ்திரேலியா 20 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
- அந்த அணியின் டிம் டேவிட் 52 பந்தில் 83 ரன் குவித்தார்.
டார்வின்:
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி டார்வினில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. டிம் டேவிட் 52 பந்தில் 83 ரன் குவித்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மபாகா 4 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து இறங்கிய தென் ஆப்பிரிக்காவில் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தென் ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் அணியின் வெற்றிக்காகப் போராடினார். வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன் தேவைப்பட்ட நிலையில் ரிக்கல்டன் இருந்ததால் அந்த அணிக்கு வெற்றி மேல் நம்பிக்கை இருந்தது.
கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் எதுவும் அடிக்கவில்லை. 2-வது பந்தை ரிக்கல்டன் தூக்கி அடித்தார். சிக்சர் செல்லும் என நினைத்த நிலையில், பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த மேக்ஸ்வெல் அதனை அந்தரத்தில் பாய்ந்து பிடித்தார். தரையில் கால் படும் முன் பந்தை பவுண்டரி எல்லைக்கு உள்ளே தூக்கி வீசிய அவர், தரை இறங்கியதும் பவுண்டரிக்கு வெளியே இருந்து தாவி அற்புதமாக கேட்ச் பிடித்தார். இது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
- மேக்ஸ்வெல் இதுவரை 149 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளார்.
- சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 3,990 ரன்களை விளாசியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான மேக்ஸ்வெல் இதுவரை 149 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளார். அதில், 126.7 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3,990 ரன்களை விளாசியுள்ளார். இதில் 23 அரைசதங்களும் அடங்கும். பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட மேக்ஸ்வெல் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
குறிப்பாக கடந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும் 201 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது ஒருநாள் கிரிக்கெட்டின் மிக சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று என்று பாராட்டப்பட்டது.
தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய மேக்ஸ்வெல், "2027ஆம் ஆண்டு நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை வரை தனது உடல் ஒருநாள் போட்டிகளில் ஒத்துழைக்காது. தான் அணியில் இருப்பது ஆஸ்திரேலியா அணிக்குதான் பின்னடைவுதான். அதனால் தான் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வை அறிவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
அதே சமயம் 2026 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடுவேன் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
- காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து மேக்ஸ்வெல் விலகினார்.
புதுடெல்லி:
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 53 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. கடந்த சீசன்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பஞ்சாப் கிங்ஸ் தற்போது ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் சிறப்பாக ஆடி வருகிறது.
நடப்பு சீசனில் பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் மிட்செல் ஓவனை ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
- குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- பஞ்சாப் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் அரை சதமடித்து அசத்தினார்.
அகமதாபாத்:
ஐபிஎல் 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. இதில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை எடுத்தது.
இதற்கிடையே, ஆட்டத்தின் 11வது ஓவரில் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இந்நிலையில், பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல் 19வது முறையாக டக் அவுட்டாகி ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.
- மேக்ஸ்வெல்லுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது.
- அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் டி 20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் க்ளென் மேக்ஸ்வெல் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டி20 தொடர் நிறைவடைந்த பின்னர் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதை முன்னிட்டு மேக்ஸ்வெல் ஏற்கனவே ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது.
வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அதற்கு அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால் அவர் டி20 தொடருக்கான அணியிலிருந்தும் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் மேக்ஸ்வெல், வார்னர் சதமடித்தனர்.
புதுடெல்லி:
உலக கோப்பை தொடரின் 24வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 44 பந்தில் 106 ரன்னும், வார்னர் 93 பந்தில் 104 ரன்னும் குவித்தனர்.
தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து 90 ரன்களில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 309 ரன் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்தது.
ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், உலக கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
இவர் 40 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணியின் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதம் அடித்துள்ளார்.
- மேக்ஸ்வெல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும் அடித்துள்ளனர்.
ஜோகன்ஸ்பர்க்:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது.
ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் சூர்யகுமார் யாதவ் தட்டிச் சென்றார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் மற்றும் மேக்ஸ்வெல் ( இருவரும் தலா 4 சதம் ) உடன் முதல் இடத்தை சூர்யகுமார் பகிர்ந்துள்ளார்.
ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும், மேக்ஸ்வெல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும் அடித்துள்ளனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி 4 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார்.
- டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் (32 முறை) 4-வது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். 17 ரன்னில் டுபிளிசிஸ் அவுட் ஆனார். அதை தொடர்ந்து விராட் கோலி 33 ரன்னிலும் க்ரீன் 27 ரன்னிலும் வெளியேறினார்.
இக்கட்டான சூழலில் களமிறங்கிய மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக்கை மேக்ஸ்வெல் சமன் செய்தார். மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் (32 முறை) 4-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சுனில் நரைன் (44 முறை) உள்ளார்.
ஐபிஎல் தொடரில் டக் அவுட் ஆன வீரர்கள் விவரம்:-
18 - தினேஷ் கார்த்திக்
18 - கிளென் மேக்ஸ்வெல்
17 - ரோஹித் சர்மா
16 - பியூஷ் சாவ்லா
- ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக பட்டிதார் 34 ரன்கள் விளாசினார்.
- ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். 17 ரன்னில் டுபிளிசிஸ் அவுட் ஆனார். அதை தொடர்ந்து விராட் கோலி 33 ரன்னிலும் க்ரீன் 27 ரன்னிலும் வெளியேறினார்.
இக்கட்டான சூழலில் களமிறங்கிய மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார். அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய சில நிமிடங்களில் பட்டிதார் 34 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் ரிவ்யூ மூலம் அவுட் இல்லை என தெரிய வந்தது.
இதனையடுத்து தொடர்ந்து விளையாடிய தினேஷ் கார்த்திக், தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்சிபி அணிக்கு ஷாக் கொடுத்து 11 ரன்னில் வெளியேறினார்.
ஒரு முனையில் நான் இருக்கிறேன் என அதிரடி காட்டிய மஹிபால் லோமரோர் 17 பந்தில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.






