search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் - புதிய சாதனை படைத்த மேக்ஸ்வெல்
    X

    உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் - புதிய சாதனை படைத்த மேக்ஸ்வெல்

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் மேக்ஸ்வெல், வார்னர் சதமடித்தனர்.

    புதுடெல்லி:

    உலக கோப்பை தொடரின் 24வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 44 பந்தில் 106 ரன்னும், வார்னர் 93 பந்தில் 104 ரன்னும் குவித்தனர்.

    தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து 90 ரன்களில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 309 ரன் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்தது.

    ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில், உலக கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.

    இவர் 40 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

    சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணியின் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×