என் மலர்
நீங்கள் தேடியது "varun chakravarthy"
- துணை கேப்டனாக நாராயண் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்தத் தொடரில், தமிழ்நாடு அணி எலைட் குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சென்னை:
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை கேப்டனாக நாராயண் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோர் மற்றும் இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
நடப்பு ரஞ்சி டிராபி சீசனில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழ்நாடு அணி, டி20 தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு முத்திரை பதிக்கும் முனைப்பில் உள்ளது. இந்தத் தொடரில், தமிழ்நாடு அணி எலைட் குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பிரிவில் ராஜஸ்தான், டெல்லி, கர்நாடகா, உத்தரகாண்ட், திரிபுரா, ஜார்கண்ட் மற்றும் சௌராஷ்டிரா போன்ற பலம் வாய்ந்த அணிகளும் உள்ளன. தமிழ்நாடு அணி தனது முதல் போட்டியில் அகமதாபாத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணி விவரம்:-
வருண் சக்கரவர்த்தி (கேப்டன்), நாராயண் ஜெகதீசன் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்),துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்)வி.பி. அமித் சாத்விக், ஷாருக் கான், ஆண்ட்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், சிவம் சிங், ஆர். சாய் கிஷோர், எம். சித்தார்த், டி. நடராஜன், குர்ஜப்னீத் சிங், ஏ. இசக்கிமுத்து, ஆர். சோனு யாதவ், ஆர். சிலம்பரசன், எஸ். ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்).
- வருண் சக்கரவர்த்தி பந்து வீச வரும்போதெல்லாம், கிளென் மேக்ஸ்வெல்லின் கால்கள் நடுங்குகின்றன.
- குறிப்பிட்ட பேட்டர்களை முயல் போல் பிடிக்கிறார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீச, ஆஸ்திரேலியா 119 ரன்களில் சுருண்டு 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் மேக்ஸ்வெல் வருண் சக்ரவர்த்தி பந்தில் க்ளீன் போல்டாகியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் வருண் சக்கரவர்த்தி பந்தை 33 முறை எதிர்கொண்டுள்ளார். இதில் 5 முறை அவுட்டாகியுள்ளார்.
மேக்ஸ்வெல்லை அடிக்கடி அவுட்டாக்கி வரும் வருண் சக்கரவர்த்தியை முன்னாள் வீரரும், இந்திய அணியின் தேர்வாளருமான ஸ்ரீகாந்த் பாராட்டிள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்தி கூறியதாவது:-
வருண் சக்கரவர்த்தி பந்து வீச வரும்போதெல்லாம், கிளென் மேக்ஸ்வெல்லின் கால்கள் நடுங்குகின்றன. குறிப்பிட்ட பேட்டர்களை முயல் போல் பிடிக்கிறார் (அவுட்டாக்குகிறார்), குறிப்பாக மேக்ஸ்வெல்லை பார்க்கும்போது, அவர் கேக் துண்டை லபக் என்று விழுங்குவபோல், உடனடியாக அவுட்டாக்குகிறார்.
இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
- வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்த அணியில் சூர்யகுமார் யாதவ் உள்பட 3 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளார்.
- ரோகித் சர்மா, விராட் கோலி, தோனி தேர்வு செய்யாத அவர் தன்னையும் தேர்ந்தெடுக்கவில்லை.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, கடந்த ஆண்டு நேற்றைய தேதியில் 2-வது டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான வருண் சக்ரவர்த்தி டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அஸ்வின் உடனான சமீபத்திய உரையாடல் ஒன்றில் வருண் சக்ரவர்த்தி டி20 கிரிக்கெட்டில் ஆல் டைம் லெவன் அணியைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அதன்பின் அவர் அணியை தேர்வு செய்துள்ளார்.
வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்த அணியில் இந்திய டி20 கேப்டனான சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 3 இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். முன்னணி நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, மகேந்திரசிங் தோனி ஆகியோரை தேர்வு செய்யாத அவர் தன்னையும் தேர்ந்தெடுக்கவில்லை.
வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்த கனவு லெவன் அணி விவரம் பின்வருமாறு:-
ஜோஸ் பட்லர், டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவ், நிக்கோலஸ் பூரன், ஹென்ரிச் கிளாசென், ஹர்திக் பாண்ட்யா, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ரஷித் கான், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மதீஷா பதிரனா
- விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள படம் ஓஹோ எந்தன் பேபி
- இப்படம் ஜூலை 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழனஸ் அணிகள் முதல் பிளே ஆப் சுற்றிலும் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் ௨ ஆவது பிளே ஆப் சுற்றிலும் மோதவுள்ளன.
இந்நிலையில், 'திண்டுக்கல் டிராகன்ஸ்' அணியின் கேப்டன் அஷ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தியை நடிகர் விஷ்ணு விஷால் சந்தித்துள்ளார்.
விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள ஓஹோ எந்தன் பேபி படத்தின் ப்ரோமஷனுக்காக இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- பவர்பிளேயில் 2 ஓவர்கள், டெத் ஓவர்களில் 2 முதல் 3 ஓவர்கள் வரை பந்து வீசினேன்.
- மிடில் ஓவர்களில் விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் பந்து வீசினேன்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இடம் பிடித்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் 2 லீக் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறாத அவர் 3-வது லீக் போட்டி மற்றும் நாக் அவுட் சுற்றில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ரோகித் சர்மா தன்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா என்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். பவர்பிளேயில் 2 ஓவர்கள், டெத் ஓவர்களில் 2 முதல் 3 ஓவர்கள் வரை பந்து வீசினேன். மிடில் ஓவர்களில் விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் பந்து வீசினேன்.
இப்படித்தான் என் திறனை அதிகப்படுத்த முடியும் என்று நான் அவரிடம் சொன்னேன், நான் சொல்லாமலேயே அவர் அதைப் புரிந்துகொண்டார். ஏனென்றால் அவர் எல்லா காலத்திலும் சிறந்த கேப்டன்களில் ஒருவர்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
- வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
- எனது முதல் ஓவரில் 12 ரன்கள் சென்றது. மார்க்ரம் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார்.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா ரைட்ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.
கொல்கத்தா நிர்ணயித்த 172 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்னே எடுத்தது.
அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
அவர் 4 ஓவர் வீசி 20 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அவர் கொல்கத்தா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
எனது இதய துடிப்பு நிமிடத்துக்கு 200-யை தொட்டு விட்டது. ஆனால் நீண்ட தூர பகுதியை மனதில் வைத்து நான் அவர்களுக்கு சவால் அளிக்க விரும்பினேன். அதுதான் எனது திட்டமாக இருந்தது. அது மட்டுமே என் மனதில் இருந்தது. எனது முதல் ஓவரில் 12 ரன்கள் சென்றது. மார்க்ரம் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார்.
அதே வேளையில் உங்கள் செயல்பாட்டில் நீங்கள் இருப்பது முக்கியம் உணர்ச்சிகள் எழுந்தவுடன் நமது செயல்முறை மறந்து விடலாம்.
கடந்த ஆண்டு நான் 85 கி.மீ. வேகத்தில் பந்து வீசினேன். எனவே நான் பல விஷயங்களை முயற்சித்து கொண்டிருந்தேன். அது உண்மையில் உதவுகிறது என்றார்.
- டோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார்.
- முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் டோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் கடைசி லீக் ஆட்டமாகும். இதனால் போட்டி முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
இதனையடுத்து, டோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார். பிறகு டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மீது வீசினார். இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் டோனியை பார்த்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.
டோனி மைதானத்தில் தன் அணியினருடன் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் டோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.
இவரையடுத்து, கொல்கத்தா வீரர்கள் ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் தன் அணி சட்டையை கொண்டு வந்து டோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றனர்.
சமீபத்தில் டோனி இந்த ஐபிஎல் சீசன் முடிந்ததும் விடை பெற்றுவிடுவாரோ என்று சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்களுக்கு, திடீரென்று லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 'இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை' என்று வர்ணனையாளரிடம் தெரிவித்து ரசிகர்களை இன்ப கடலில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் டோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.
- பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.
சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த தோல்விக்கு கொல்கத்தா அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காரணமாக இருந்தார் அவர் 4 ஓவர் வீசி 36 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ருதுராஜ் கெய்க்வாட், ரகானே ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார்.
31 வயதான சென்னையை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கடந்த காலங்களில் சி.எஸ்.கே. அணி வீரர்களுக்கு வலை பயிற்சி பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.
2019-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8.4 கோடிக்கு எடுத்தது. பின்னர் 2020-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ரூ.4 கோடிக்கு வாங்கியது. வருண் சக்கரவர்த்தி இந்த சீசனில் இதுவரை 19 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஒட்டு மொத்தமாக 61 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்காதது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வருண் சக்கரவர்த்தி எங்கள் அணியின் வலை (நெட்) பயிற்சி பவுலராக சில காலங்களில் இருந்தார். அப்போது அவர் எங்களது பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பந்து வீசினார். தற்போது ஐ.பி.எல். போட்டியில் அவர் அபாரமாக பந்து வீசி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.
பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.
இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.
- ரஜினிகாந்த்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வருண் சக்கரவர்த்தி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தபட்சம் 1 விக்கெட்டையாவது வீழ்த்தி விடுகிறார். அசத்தலாக சுழற்பந்து வீசி வரும் வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்து வருகிறார்.
சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே 61-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர்,
வானத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களை நாம் தினமும் பார்க்கலாம். ஆனால், சூப்பர் ஸ்டாரை பார்ப்பது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். குடும்பத்தில் ஒருவரைப் போல உணர வைக்கும் அளவுக்கு அவர் அன்புடன் பேசினார். லவ் யூ தலைவா" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவருடன் வெங்கடேஷ் ஐயரும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
- இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.
கெபேஹா:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 128 ரன்கள் எடுத்து வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:
முதல் பேட்டிங் ஆடும்போது பேட்ஸ்மேன்களால் எந்த ரன்கள் சேர்க்க முடிகிறதோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
டி20 கிரிக்கெட்டில் 125 ரன்களோ அல்லது 140 ரன்கள் எடுப்பதையோ விரும்பமாட்டோம்.
இந்திய அணியின் பவுலர்கள் செயல்பட்ட விதம் பெருமையாக உள்ளது. இதுபோன்ற கடினமான சூழலில் ஒரு பவுலர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதமான விஷயம்.
டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வருண் சக்கரவர்த்தி கடினமான உழைத்து வருகிறார். அதேபோல் இப்படியான தருணத்திற்காக நீண்ட காலமாக காத்திருந்தார் என்று சொல்ல வேண்டும்.
மிகச்சிறந்த பவுலிங்கை வருண் சக்கரவர்த்தி வெளிப்படுத்தி இருக்கிறார். இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளது என தெரிவித்தார்.
- வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- பட்லர் மட்டும் தாக்குப்பிடித்து 68 ரன்கள் விளாசினார்.
ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
பில் சால்ட், பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பில் சால்ட் ரன்ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் அட்டமிழந்தார்.
அடுத்து ஜாஸ் பட்லர் களம் இறங்கினார். 3-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் டக்கெட் 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து ரன் குவிக்க தவறியது. கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டும் தாக்குப்பிடித்து 44 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். இவரை வருண் சக்ரவர்த்தி வீழ்த்தினார்.
ஹாரி ப்ரூக் 17 ரன்னிலும், லிவிங்ஸ்டன் ரன்ஏதும் எடுக்காமலும் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்தது. கடைசி பந்தில் மார்க் வுட் ரன்அவுட் ஆக இங்கிலாந்து 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று சென்னையில் நடக்கிறது.
சென்னை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வருண் சக்கரவர்த்தி இன்று சொந்த மண்ணான சென்னையில் இன்று இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாட உள்ளார்.

இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் படத்தை வருண் சக்கரவர்த்தி அவரது கையில் பச்சை குத்தியுள்ளார். தலைவா படத்தில் வரும் பிரபலமான விஜயின் போஸ்-ஐ அவர் பச்சை குத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






