என் மலர்
நீங்கள் தேடியது "திண்டுக்கல் டிராகன்ஸ்"
- இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.
- சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. அடுத்து முதலாவது தகுதி சுற்றில் 79 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.
திருப்பூர் அணியில் பேட்டிங்கில் துஷர் ரஹேஜா (411 ரன்), அமித் சாத்விக், பிரதோஷ் ரஞ்சன் பால், சசிதேவும், பந்து வீச்சில் இசக்கிமுத்து (12 விக்கெட்), டி.நடராஜன், சிலம்பரசனும் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் சாய் கிஷோர் (128 ரன், 12 விக்கெட்) ஆல்-ரவுண்டராக அசத்துகிறார்.
ஆர்.அஸ்வின் தலைமையிலான நடப்பு சாம்பியன் திண்டுக்கல் அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் 3-வது இடம் பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியேற்றுதல் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியையும், 2-வது தகுதி சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
திண்டுக்கல் அணியில் பேட்டிங்கில் ஷிவம் சிங் (327 ரன்), விமல் குமார், பாபா இந்திரஜித், ஹன்னி சைனியும், பந்து வீச்சில் ஜி.பெரியசாமி (11 விக்கெட்), வருண் சக்ரவர்த்தி (10 விக்கெட்), சசிதரணும், ஆல்-ரவுண்டராக கேப்டன் அஸ்வினும் (296 ரன், 13 விக்கெட்) வலுசேர்க்கின்றனர்.
லீக் ஆட்டத்தில் திருப்பூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கலை தோற்கடித்து இருந்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள திண்டுக்கல் அணி தீவிரம் காட்டும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு அனுகூலமாக இருக்கும். இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் திண்டுக்கல்லும், ஒன்றில் (நடப்பு சீசனில்) திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
திருப்பூர்: அமித் சாத்விக், துஷர் ரஹேஜா, சாய் கிஷோர் (கேப்டன்), முகமது அலி, சசிதேவ், பிரதோஷ் ரஞ்சன் பால், மோகன் பிரசாத், சிலம்பரசன், மதிவாணன், டி.நடராஜன், இசக்கிமுத்து, அனோவன்கர்.
திண்டுக்கல்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), ஷிவம் சிங், பாபா இந்திரஜித், மான் பாப்னா, விமல் குமார், ஹன்னி சைனி, தினேஷ், கார்த்திக் சரண், புவனேஷ்வர், வருண் சக்ரவர்த்தி, சசிதரண், ஜி.பெரியசாமி.
இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள படம் ஓஹோ எந்தன் பேபி
- இப்படம் ஜூலை 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழனஸ் அணிகள் முதல் பிளே ஆப் சுற்றிலும் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் ௨ ஆவது பிளே ஆப் சுற்றிலும் மோதவுள்ளன.
இந்நிலையில், 'திண்டுக்கல் டிராகன்ஸ்' அணியின் கேப்டன் அஷ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தியை நடிகர் விஷ்ணு விஷால் சந்தித்துள்ளார்.
விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள ஓஹோ எந்தன் பேபி படத்தின் ப்ரோமஷனுக்காக இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய திருச்சி அணி 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
திண்டுக்கல்:
9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற கடைசி மற்றும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
விமல் குமார் 55 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஷிவம் சிங் 37, ஹனி சைனி 21 ரன்கள் எடுத்தனர்.
திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன், சரவணகுமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் திருச்சி கிராண்ட் சோழாஸ் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
5வது விக்கெட்டுக்கு கவுசிக், சஞ்சய் யாதவ் ஜோடி 98 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு துணை நின்றது. கவுசிக் 42 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய சஞ்சய் யாதவ் அரை சதம் கடந்தார்.
இறுதியில், திருச்சி அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வென்றதுடன் 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
- திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விமல் குமார் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
9வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
நடப்பு டி.என்.பி.எல். தொடரில் கடந்த ஆட்டத்தின் வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
இதில், அதிகபட்சமாக விமல் குமார் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். தொடர்ந்து, ஷிவம் சிங் 37, ஹனி சைனி 21 ரன்கள், மான் பாஃப்னா 14 ரன்கள் எடுத்தனர்.
இதன்மூலம், 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் திருச்சி கிராண்ட் சோழாஸ் களமிறங்கியுள்ளது.
- 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் மோதுகின்றன.
- டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
9வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நடப்பு டி.என்.பி.எல். தொடரில் கடந்த ஆட்டத்தின் வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- துண்டுகளின் மூலத்தையும், பந்தை சேதப்படுத்தும் பிற முறைகளையும் ஆராய வேண்டும்.
- கோவை, மதுரை பலமுறை எச்சரித்த போதும் நடுவர்கள் நடவடிக்கை எடுக்க தவறியது கவலை அளிக்கிறது.
சென்னை:
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடந்த 14-ந்தேதி சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.
இந்தப் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனம் தடவப்பட்ட துண்டுகளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் புகார் அளித்து உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த கோரி மதுரை அணியின் தலைமை செயல் அதிகாரி டி.பூஜா தமிழ்நாடு பிரீமியர் லீக் தலைமை செயல் அதிகாரி பிரசன்னாவுக்கு நேற்று இ.மெயில் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக அஸ்வின் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீது அவசர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்னாவுக்கு மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.ஒ.ஒ. எஸ்.மகேஷ் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எங்களுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஒரு தீவிரமான விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக இதை நான் எழுதுகிறேன்.
போட்டிக்கு முன்பு நடுவர்கள் பலமுறை எச்சரிக்கை செய்த போதும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனங்கள் தடவப்பட்டதாக தோன்றும் துண்டுகளை பயன்படுத்தி பந்தை வெளிப்படையாக சேதப்படுத்தியது.
இதனால் பந்தின் தன்மை அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடினமான கல் போல் இருந்தது. பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்கும் போது உலோக ஒலியை உருவாக்கியது.
இது ஆட்டத்தின் முடிவை பாதித்தது மட்டுமல்லாமல் எங்கள் இளம் அணியை மனசோர்வடைய செய்தது. நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
1. துண்டுகளின் மூலத்தையும், பந்தை சேதப்படுத்தும் பிற முறைகளையும் ஆராய வேண்டும். பந்தை சேதப்படுத்த பயன்படுத்தப்பட்ட துண்டுகள் எங்கிருந்து வந்தது, அதை வழங்கியவர்கள் யார் என்பதை டி.என்.பி.எல். நிர்வாகம் கண்டறிய வேண்டும்.
2. அந்த துண்டுகளில் வேதியியல் மாற்றங்கள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய ஆய்வக சோதனை நடத்த வேண்டும்.
3. அஸ்வின், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மற்றும் இந்த மோசமான விவகாரத்தில் தொடர்புடைய மற்ற அனைவருக்கும் கடுமையான தண்டனையை அளிக்க வேண்டும்.
பந்து வீச்சாளர்கள் மற்றும் பீல்டர்கள் பந்தை சேதப்படுத்த பயன்படுத்திய பிற சாத்தியமான முறைகள் குறித்தும் எங்கள் தொழில் நுட்ப குழு ஆய்வு செய்து வருகிறது. அதன் விவரங்களை விரிவான அறிக்கையாக நாங்கள் வழங்குவோம். வேண்டுமென்றே சேதப்படுத்துதல் மற்றும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே விளையாட்டின் நேர்மையை நிலை நிறுத்த நாங்கள் விரிவான நவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
எங்கள் தலைமை பயிற்சியாளர் சுர்ஜித் சந்திரன், உதவி பயிற்சியாளர் எஸ்.கார்த்திக் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளை எங்கள் அணியின் தலைமை செயல் அதிகாரி டி.பூஜா ஏற்கனவே உங்களுக்கு அனுப்பியுள்ளார். போட்டியின் போது பந்தின் தன்மை வியக்கத்தக்க முறையில் மாறியது என்பது தெளிவாகிறது.
பவர்பிளேயின் போது பந்து சரியான நிலையில் இருந்தது. மேலும் எங்கள் அணியின் ஸ்கோர் அதை பிரதிபலித்தது. ஆனால் போட்டி தொடர்ந்து செல்லும் போது பந்து ஒரு உலோக ஒலியை உருவாக்க தொடங்கியது. கடினமான உலோக கல் போல் பந்தின் தன்மை இருந்தது.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் துண்டுகளை பயன்படுத்தியதால் பந்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணங்களாக ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்.
லைகா கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் பலமுறை எச்சரித்த போதும் மைதான நடுவர்களும், போட்டி நடுவர்களும் நடவடிக்கை எடுக்க தவறியது கவலை அளிக்கிறது.
இந்த விஷயத்தை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டு ஆட்டத்தின் நேர்மையை காப்பதற்கும், மதுரை அணிக்கு தரப்பட வேண்டிய புள்ளிகளை வழங்குவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பூர் அணியின் அசத்தல் பந்துவீச்சால் திண்டுக்கல் 93 ரன்னுக்கு சுருண்டது
- திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியாக 16.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களுக்கு திண்டுக்கல் அணி ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சிவம் சிங் 30 ரன்கள் அடித்தார்.
திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகளும், மதிவண்ணன் 3 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி 11.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 65 ரன்கள் அடித்தார். திண்டுக்கல் அணி சார்பில் கணேசன் பெரியசாமி 1 விக்கெட் வீழ்த்தினார்.
- சாய் கிஷோர் பந்துவீச்சில் LBW முறையில் அஸ்வின் ஆட்டமிழந்தார்.
- அஸ்வின் தனது கிளவுஸை கழட்டி வெளியே வீசினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியாக 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களுக்கு திண்டுக்கல் அணி ஆல் அவுட்டானது.
இப்போட்டியில் சிறப்பான ஆடிய அஸ்வின், சாய் கிஷோர் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். ரீபிளேவில் பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாக தெரிந்தது. ஆனால் ஏற்கனேவே 2 ரெவியூக்களையும் இழந்ததால் அவரால் அந்த விக்கெட்டுக்கு ரெவியூ எடுக்க முடியவில்லை.
இதனால் பெண் நடுவரிடம் முறையிட்ட அஸ்வின், பின்னர் கடுப்பாகி தனது பேட்டை கொண்டு தனது தொடையை அடித்தார். பின்னர் தனது கிளவுஸை கழட்டி வெளியே வீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
- அதிகபட்சமாக சிவம் சிங் 30 ரன்கள் அடித்தார்.
- திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியாக 16.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களுக்கு திண்டுக்கல் அணி ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சிவம் சிங் 30 ரன்கள் அடித்தார்.
திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகளும், மதிவண்ணன் 3 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கவுள்ளது.
- டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.
கோவை:
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2025 சீசனின் முதல் போட்டி கோவையில் இன்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
பாலசுப்ரமணியன் சச்சின் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். ஆந்த்ரே சித்தார்த் 23 பந்தில் 25 ரன்களும், ஷாருக் கான் 14 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் அஸ்வின், சந்தீப் வாரியர், ஜி.பெரியசாமி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அஸ்வின் 15 ரன்னில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அணியை கடைசி வரை நின்று வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஷிவம் சிங் 82 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், திண்டுக்கல் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூவுடன் இணைந்த ராஜ் குமார் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்தார்.
- திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு கோவையில் நடைபெறும் ஆட்டத்தில் பார்சி திருச்சி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.
கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ துவக்க வீரராக களமிறங்கி நிதானமாக ஆடினார். ஆனால் மறுமுனையில் திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்தனர். ஜாபர் ஜமால் (4), அக்சய் சீனிவாசன் (0), பெரைரோ (5), மணி பாரதி (2), ஷாஜகான் (13), அந்தோணி தாஸ் (0) ஆகியோர் விரைவில் அவுட் ஆகினர். 49 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகள் சரிந்தன.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில், கங்கா ஸ்ரீதர் ராஜூவுடன், இணைந்த ராஜ் குமார் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்தார். அணியின் ஸ்கோர் 114 ஆக இருந்தபோது, கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆட்டமிழந்தார். அவர் 41 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 48 ரன்கள் சேர்த்தார். அடுத்த ஓவரில் ராஜ் குமார் அவுட் ஆனார். அவர் 22 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார்.
ராமதாஸ் அலெக்சாண்டர் 4 ரன்னிலும், ரகுபதி ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, திருச்சி அணி 19.1 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின், சரவணக் குமார், சுபோத் பதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய திருச்சி 120 ரன்னில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய திண்டுக்கல் 122 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
கோவை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சி திருச்சி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணி 19.1 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திண்டுக்கல் அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்தனர். கங்கா ஸ்ரீதர் ராஜூ 41 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 48 ரன்கள் சேர்த்தார். ராஜ்குமார் 22 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார்.
திண்டுக்கல் சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின், சரவணக்குமார், சுபோத் பதி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விமல் குமார் டக் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் அதிரடியாக ஆடினார். அவர் 30 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 46 ரன்கள் எடுத்தார். பாபா இந்திரஜித் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். சரத் குமார் 5 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், திண்டுக்கல் அணி 14.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆதித்ய கணேஷ் 20 ரன்னும், சுபோத் பதி 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.