என் மலர்
கிரிக்கெட் (Cricket)

TNPL 2025: துஷார் ரஹேஜா அதிரடி அரைசதம்... திண்டுக்கல்லை வீழ்த்தி திருப்பூர் அபார வெற்றி
- திருப்பூர் அணியின் அசத்தல் பந்துவீச்சால் திண்டுக்கல் 93 ரன்னுக்கு சுருண்டது
- திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியாக 16.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களுக்கு திண்டுக்கல் அணி ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சிவம் சிங் 30 ரன்கள் அடித்தார்.
திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகளும், மதிவண்ணன் 3 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி 11.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 65 ரன்கள் அடித்தார். திண்டுக்கல் அணி சார்பில் கணேசன் பெரியசாமி 1 விக்கெட் வீழ்த்தினார்.






