search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dindugal"

    • கவுன்சிலரின் கண்களில் மிளகாய் பொது தூவிவிட்டு கொலை செய்துள்ளனர்.
    • சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு.

    திண்டுக்கல் மாநகராட்சியின் 25வது வார்டு கவுன்சிலர் சிவக்குமாரின் தந்தை நாகராஜன். மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது, திடீரென நாகராஜனை சூழ்ந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மர்ம நபர்கள் விரட்டியபோது கவுன்சிலரின் கண்களில் மிளகாய் பொது தூவிவிட்டு, வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் முன்பகை காரணமாக கொலை நடைபெற்றதா ? அல்லது தொழில் போட்டி காரணமா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் இருதரப்பினர் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை வேல்வார்கோட்டை பழையகலராம்பட்டியை சேர்ந்தவர் சோலைராஜா. இவரது மனைவி சரஸ்வதி(வயது30). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த தங்கவேல் மனைவி ஈஸ்வரி(40). குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று அவ்வழியாக நடந்து சென்ற ஈஸ்வரி தரப்பினரை சரஸ்வதி குடும்பத்தினர் வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதேபோல் அவர்களும் பிரச்சினையில் ஈடுபட கோஷ்டி மோதலாக மாறியது.

    இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதுகுறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ஈஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் பொன்னுச்சாமி, மாரியப்பன், சரசு, மூக்காயி, அம்மாபொண்ணு ஆகியோர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதேபோல் சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் சதீஸ், மகாமுனி, ஈஸ்வரி, பிரியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே கொத்தனாரை அரிவாளால் வெட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகில் உள்ள மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துராஜ் மகன் சரத்குமார் (வயது25). மினி வேன் டிரைவராக உள்ளார். இவரது வைக்கோல் போருக்கு மர்ம நபர்கள் சம்பவத்தன்று தீ வைத்து சென்றனர்.

    இவரது வீட்டிற்கு எதிரில் பழனியப்பன் மகன் மணிராஜன் (28) என்பவர் வசித்து வருகிறார். கொத்தனார் வேலை பார்க்கும் இவர்தான் தனது வைக்கோல் போருக்கு தீ வைத்ததாக சரத்குமார் சந்தேகப்பட்டார். இதனால் கடந்த 2 நாட்களாக குடிபோதையில் அவரிடம் தகராறு செய்து வந்தார்.

    இதனால் நேற்று மணிராஜனை அரிவாளால் சரத்குமார் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திண்டுக்கல் நகர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி மின்னல்களுடன் சூறாவளி காற்று வீசி வருகிறது. மழை வருவதுபோல் ஏமாற்றி செல்கிறது.

    பலத்த காற்று வீசுவதால் மின் வயர்கள் சேதம் அடைந்து அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க பராமரிப்பு பணிக்காகவும் மின் தடை ஏற்படுத்தப்படுகிறது.

    ஆனால் கடந்த சில நாட்களாக எந்தவித முன் அறிவிப்பும் இன்றி 2 முதல் 3 மணி வரை மின் தடை அமல்படுத்தப்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இரவு நேரங்களில் தூங்க முடியாமல் கொசுக்கடியும் சேர்ந்து இருப்பதால் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சிறு தொழில்களும் மின் தடையால் பாதிக்கப்பட்டு வருகிறது.

    எனவே இது குறித்து மின்சாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. எனவே இதுபோன்ற காரணங்களால் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது. இருந்தபோதும் திண்டுக்கல் நகர் பகுதியில் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    திண்டுக்கல்லில் மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை போனது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் தாலுகா போலீஸ் சரகம் மாலைப்பட்டி ரோடு சுப்புராமன் பேட்டை சக்திநகரை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது 40). மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார்.

    இவர் கடந்த 20-ந் தேதி தனது மனைவி தங்கரேகா, மகன்கள் விமல், சோலை ஆகியோருடன் திருப்பதிக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு உள்ள பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த நகை மற்றும் பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவானார்கள்.

    இன்று காலை நாராயணமூர்த்தி ஊருக்கு திரும்பினார். கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறிக்கிடந்தது. பீரோதிறந்தபடி காணப்பட்டது.

    பீரோவை பார்த்த போது அதில் இருந்த 25 பவுன் நகை, ரொக்க பணம் ரூ. 8,500 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த நாராயணமூர்த்தி இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் ஆகியோர் வழக்குபதிவு செய்தனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சாலை ஓரம் நின்று கொண்டது. கை ரேகை நிபுணர் சீனியம்மாள் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து உள்ளார். கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தெரிவித்து உள்ளார்.

    திண்டுக்கல் அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் தாக்கப்பட்டார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை அழகர்நாயக்கன்பட்டியில் காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

    இதில் சாமி ஊர்வலம் நடைபெற்றபோது ஏராளமான வாலிபர்கள் கூட்டத்தில் ஆடிப்பாடி சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் தவறுதலாக சபரி என்ற வாலிபர் மீது மோதி விட்டார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ஆனால் சபரி கடும் கோபத்தில் இருந்ததால், கணேஷ் வீட்டுக்கு சென்று அவரை கடுமையாக தாக்கி உள்ளார்.

    இது குறித்து செம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரியை கைது செய்தனர்.

    திண்டுக்கல் அருகே பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.22 லட்சத்து 77 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு அருகே பறக்கும் படை தணிக்கை குழு அதிகாரி மனோகரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது திண்டுக்கல் ஆக்ஸிஸ் பேங்கிலிருந்து தனியார் நிறுவன வண்டி மூலமாக ரூ.18 லட்சம் சித்தரே வில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்டது.

    இந்த பணத்திற்கு எந்த ஆவணமும் இல்லாததால் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி துணை ஆட்சியர் சிவக்குமார் தாசில்தார் பிரபா முன்னிலையில் ஒப்படைக்கபட்டு பின்னர் திண்டுக்கல் கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த பணம் வங்கி பணமாகவே இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் கொண்டு செல்லக் கூடாது இதற்கு ரூட் சாட் வேண்டும். இதுவும் அவர்க ளிடம் இல்லை நாங்கள் கருவூலத்தில் ஒப்படைத்து விடுகிறோம். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை காண் பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என்றார். இதே போல் கரிசல்பட்டியை சேர்ந்த பாலகுரு என்ற ஆட்டு வியாபாரி.

    செம்பட்டி சந்தையில் ஆடு வாங்குவதற்காக ரூ.70, 600-த்துடன் இரு சக்கர வாகனத்தில் வரும் போது திண்டுக்கல் மாவட்ட கலெக்டரின் நிலையான குழு பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இல்லாததால் ஆட்டு வியாபாரி கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ஒட்டன்சத்திரம் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டிபோலீஸ் நிலையம் முன்பு வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே கேரளாவிலிருந்து திண்டுக் கல் சென்ற பால் ஏற்றி வந்த மணிகண்டபிரபு ஓட்டி வந்த வாகனத்தை ஆய்வு செய்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.4,07,410-த்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர். #LokSabhaElections2019

    திண்டுக்கல்லில் இன்று மாலை நடக்கும் பொது கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். #MKStalin #DMK

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மதுரையில் இருந்து கார் மூலம் மாலை 5.30 மணிக்கு திண்டுக்கல் செல்கிறார். மாவட்ட எல்லையான சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

     


    அதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் முன்பு நடக்கும் பிரசார கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    அதன் பின் தேனி மாவட்டத்திற்கு செல்லும் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். #MKStalin #DMK

    திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். #JactoGeo

    திண்டுக்கல்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு வட்டக்கிளை ஒருங்கிணைப்பாளர்கள் குழந்தை ராஜ், பெரியசாமி, ஹெல்மா பிரியதர்சன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்தங்கம், பாண்டி, கேந்திரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ ஜியோ உயர் மட்டக்குழு உறுப்பினர் ஞானதம்பி, சிறப்புரையாற்றினார். துரைராஜ் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    அதனைத் தொடர்ந்து பஸ் நிலையம் நோக்கி பேரணியாக வந்து மறியலில் ஈடுபட முயன்றனர். 1800க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதே போல் நத்தம் யூனியன் அலுவலகம் முன்பாகவும், வேடசந்தூர் ஆத்து மேடு பகுதியிலும், ஒட்டன்சத்திரம் யூனியன் அலுவலகம் முன்பாகவும், பழனி தாலுகா அலுவலகம் முன்பாகவும், செம்பட்டி, நிலக்கோட்டையில் யூனியன் அலுவலகம் முன்பாகவும், கொடைக்கானலில் மூஞ்சிக்கல் பஸ் நிலையம் பகுதியிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெண்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.  #JactoGeo

    திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் அருகே கொடைரோடு மாலைய கவுண்டன்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று வியாபாரம் முடிந்ததும் விற்பனையாளர்கள் மற்றும் பாரில் வேலை செய்பவர்கள் கடையை பூட்டிச் சென்றனர்.

    தோட்டத்து காவலுக்கு வெள்ளிமலை (வயது 45) என்பவர் மட்டும் இருந்தார். நள்ளிரவு சமயத்தில் இங்கு காரில் வந்த முகமூடி கும்பல் வெள்ளிமலையை கத்தியை காட்டி மிரட்டியது. மேலும் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்து விட்டு கடையை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் சாவகாசமாக அமர்ந்து மதுகுடித்து கும்மாள மிட்டனர். அங்கிருந்த 240 மது பாட்டில்களையும் பணம் ரூ.900த்தையும் கொள்ளையடித்து அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர். முகமூடி அணிந்திருந்ததால் வந்தவர்கள் அடையாளம் தெரிய வில்லை. இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை விற்பனை தொகையை விற்பனையாளர்கள் எடுத்துச் சென்றதால் பெருமளவு பணம் தப்பித்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே யாகப்பகன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்தது. தற்போது காவலாளி உள்ள கடையிலேயே அவரை மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் அருகே மாயமான புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள போஜனம் பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). இவர் வேல்வார்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆயில் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கார்த்திகா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற பெருமாள் வீடு திரும்பவில்லை. அவரது மோட்டார் சைக்கிள் மட்டும் சுடுகாடு அருகே தனியாக கிடந்தது.

    இந்த நிலையில் அதே பகுதியில் ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்த போது இறந்த வாலிபர் பெருமாள் என தெரிவய வந்தது. மேலும் திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பெருமாளின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெருமாள் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது சொத்து பிரச்சினையா? காதல் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலை பொங்கலுக்கு செல்ல வேண்டிய புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல்லில் அடகு கடை மற்றும் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் வேடப்பட்டியில் அடகு கடை மற்றும் ஏ.டி.எம். மையங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 வாலிபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடியதால் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

    இது குறித்து நகர் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நகர் தெற்கு இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் தாவூத் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    சுடுகாடு அருகே மோட்டார் சைக்கிளில் 2 பேர் சந்தேகத்துக்கு இடமாக வந்துள்ளனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார் விசாரித்ததில் 2 பேரும் ஏ.டி.எம். மையம் மற்றும் அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் என்பது தெரிய வந்தது.

    அந்த வாலிபர்கள் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 20), வேடப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியதீபக் (17) என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்து வேறு ஏதும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×