search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Factional conflict"

    தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்-பதட்டம்

    புதுச்சேரி:

     புதுவை அருகே கரியமாணிக்கம் சந்திப்பில்  9மணி அளவில் நெட்டப்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

     கரியமாணிக்கம் காலனி பகுதியில் அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்வர்கள் திடீரென ஒன்று கூடினர். உடனடியாக ரோந்து போலீசார், உதவி ஆய்வாளர் கதிரேசனிடம் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக உதவி ஆய்வாளர் கதிரேசன் போலீஸ் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்பகுதியில் கரியமாணிக்கம் பகுதியை பகுதியை சேர்ந்த ரஜினி குமார் மற்றும் பெரியாண்டவர் தலைமையில் 2 குழுக்கள் திரண்டு நின்றனர்.

     மேலும் அதே பகுதியை சேர்ந்த நரேந்திரன் தலைமையில் மற்றொரு கும்பலும் திரண்டிருந்தனர். இரு குழுக்களில் உள்ள நபர்களிடையே மாற்றி மாற்றி ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தனர். 20-கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி பொதுமக்கள் செல்லும் வழியான கரி யமாணிக்கம் தவளக்குப்பம் சாலையில் தடையை ஏற்படுத்தினர்.

     நெட்டப்பாக்கம் உதவி ஆய்வாளர் கதிரேசன் அவர்களை கலைந்துபோகக் கூறி எச்சரிக்கை செய்தார். ஆனால் இருதரப்பினரும் கலைந்துபோகாமல் பொது மக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் ஈடுபட்டனர்.

    போலீசாரை அவர்களது கடமையை செய்யவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்தனர், பின்னர். போலீசாரை தகாத வார்த்கைளால் திட்டியதோடு, மேற்கொண்டு கற்கள் மற்றும் மரக்கட்டைகளை கொண்டு போலீசாரை தாக்கி வன்முறையில் ஈடுப்பட்டு போலீஸ் வாக னத்தையும் சேதப்படுத்தினர், இதில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், தலைமை காவலர் பிரதீஸ் மற்றும் காளிதாஸ் ஆகியோரை கற்களால் தாக்கியதில் காயம் அடைந்தனர்.

     இதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

    அப்பகுதியை சேர்ந்த ரஜினிகுமார்(34), பெரியாண்டவர்(42), கிருஷ்ணகுமார்(35), கிருஷ்ணராஜ்(30), நரேந்திரன்(35), விநாயக மூர்த்தி(37), சத்திய மூர்த்தி(23), பாரதிராஜா(33), கதிரவன்(27), வீரன்(37), பாக்கியராஜ் (35), பவாணி சங்கர்(21), மற்றும் நரேஷ்(27), ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தலை மறைவாக உள்ள அனை வரையும் தேடி வருகின்றனர்.

     தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை எற்பட்டுள்ள தால் கரிய மாணிக்கம் பகுதியில் 20-கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • இருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
    • இருவரையும் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முற்பட்ட போது பாலமுருகன், சிவாவையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சாத்துக்கூடல் கீழ்பாதியில் காணும் பொங்கலை முன்னிட்டு அக்கிராமத்தில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள் வாங்குவதற்காக பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிவசங்கர்,ஹரி கிருஷ்ணன், ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  அப்பொழுது ஆலிச்சி க்குடி கிராமத்தில் அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அங்கு கூடியிருந்த இளைஞர்கள் வாகனத்தில் இந்த சாலையில் செல்லக்கூடாது என வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.

    அவர்களிடம் வாக்கு வாதம் செய்த சிவசங்கர், ஹரி கிருஷ்ணன் இருவரும் அங்கிருந்து விருத்தாச்சலம் சென்று பரிசு பொருட்களை வாங்கி விட்டு அதே வழியில் மீண்டும் சென்றபோது, 20- க்கும் மேற்பட்ட இஇருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்    தகவல் அறிந்து அங்கு வந்த சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமத்தைச் சார்ந்த பாலமுருகன், சிவா அவர்கள் இருவரையும் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முற்பட்ட போது பாலமுருகன், சிவாவையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டனர  இந்த  சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்  இரு தரப்பினரிடயே ஏற்பட்ட மோதலின் காரணமாக சாத்துக்கூடல் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

    • பரத் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தெருக்கூத்து நடைபெறும் பகுதி வழியாக வந்தார்.
    • வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே ஆண்டிக்குழி பகுதியில் நேற்று தெருக்கூத்து நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பரத் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தெருக்கூத்து நடைபெறும் பகுதி வழியாக வந்தார். வரும்போது தெருக்கூத்து பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது பரத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. உடனே பொதுமக்கள் இது குறித்து பரத்திடம் கேட்டனர். ஆத்திரமடைந்த பரத் அவர்களை தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகறாக ஏற்பட்டது.

    இந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து பரத் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ், வடிவேல் ,ராஜேந்திரனை கைது செய்தனர் மேலும் இது சம்பந்தமாக 15 பேரையும் தேடி வருகின்றனர். இதேபோல் பொதுமக்கள் கோவிந்தன் அளித்த புகாரின் பேரில் பரத் தரப்பில் ஸ்ரீராம் கைது செய்யப்பட்டார். மேலும் பரத் மற்றும் இவரது தரப்பில் 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • கடலூர் அருகே டி. புதுப்பாளையம் சேர்ந்தவர் நேதாஜி. இவரது தம்பி அபிஷேக்.
    • நேதாஜி, கோபிநாத் ஆகிய 2 பேரும் அதே பகுதியில் பெட்ரோல் போடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே டி. புதுப்பாளையம் சேர்ந்தவர் நேதாஜி. இவரது தம்பி அபிஷேக். அதே பகுதியை சேர்ந்த நண்பர் கோபிநாத் தம்பி கோகுல் என்பவரும் பஸ்சில் சென்று புதுப்பாளை யம் பகுதியில் இறங்கினர். அப்போது பஸ்சில் வந்த 2 பேருக்கும், அதே பகுதி யை சேர்ந்த தமிழ்ச்செல்வன், அருள் ஆகியோருக்கும் திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். உடனே அந்த வழியாக வந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்தன்று நேதாஜி, கோபிநாத் ஆகிய 2 பேரும் அதே பகுதியில் பெட்ரோல் போடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட4 பேர் திடீ ரென்று 2 பேரை வழி மறித்து தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கி அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். அதோடு வீட்டின் எதிரில் தமிழ்ச்செல்வன் மற்றும் அருளை, நேதாஜி தரப்பினர் தாக்கி நாற்காலியை உடைத்த தாக கூறப்படுகிறது. இந்த கோஷ்டி தகராறில் நேதாஜி, கோபிநாதன், தமிழ்ச்செல்வன், அருள் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் நேதாஜி கொடுத்த புகாரின் பேரில் தமிழ்ச்செல்வன் மற்றும் 4 பேரும், தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் நேதாஜி உள்ளிட்ட 4 பேர் என 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் இருதரப்பினர் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை வேல்வார்கோட்டை பழையகலராம்பட்டியை சேர்ந்தவர் சோலைராஜா. இவரது மனைவி சரஸ்வதி(வயது30). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த தங்கவேல் மனைவி ஈஸ்வரி(40). குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று அவ்வழியாக நடந்து சென்ற ஈஸ்வரி தரப்பினரை சரஸ்வதி குடும்பத்தினர் வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதேபோல் அவர்களும் பிரச்சினையில் ஈடுபட கோஷ்டி மோதலாக மாறியது.

    இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதுகுறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ஈஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் பொன்னுச்சாமி, மாரியப்பன், சரசு, மூக்காயி, அம்மாபொண்ணு ஆகியோர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதேபோல் சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் சதீஸ், மகாமுனி, ஈஸ்வரி, பிரியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாகூர் கலைக்கல் லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 21 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைகல்லூரியில் நேற்று 2 பிரிவு மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இந்த மோதலில் பேராசிரியர் சம்பத்குமார் மற்றும் ஒரு மாணவர் காயம் அடைந்தனர்.

    தொடர்ந்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வந்ததால் தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கல்லூரி முதல்வர் இளங்கோ சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பேராசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    பின்னர் இந்த மோதல் குறித்து கல்லூரி முதல்வர் இளங்கோ லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துதல், அரசு சொத்துக்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் மிரட்டியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் 21 மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் 2 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வத்தலக்குண்டு அருகே பொங்கல் விழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருதரப்பை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு பகுதியில் பொங்கலையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாட்டுபொங்கல் தினத்தன்று பல்வேறு தோரணங்கள், வர்ணம் பூசுதல், கொடி கட்டுதல் மற்றும் பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன.

    இதற்காக அந்தந்த பகுதியில் இளைஞர்கள் ஏற்பாடுகளை செய்தனர். ஜி.தும்மலப்பட்டியில் பொங்கல் விழாவிற்காக வர்ணம் பூசும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது. இங்கு வரையக்கூடாது என மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே இருதரப்பினர் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து இருதரப்பை சேர்ந்த அசோக்(19), ரமேஷ்(22), ராஜேஷ்(22), விக்னேஷ்(22), வசந்த்(20) உள்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வாலாஜா அருகே கோஷ்டி மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ஷாம்குமார் (21). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

    அப்போது ஜெயராம்பேட்டை பாவானி அம்மன் கோவிலை சேர்ந்த அரி என்பவர் மணிகண்டன் மீது மோதுவதுபோல் பைக்கில் சென்றுள்ளார். இதனை மணிகண்டன் அரியிடம் தட்டி கேட்டார் அப்போது இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதனை கண்ட அரியின் நண்பர்கள் வேலு, யோகேஸ்வரன், ஆகியோர் வந்து மணிகண்டனை சரமாறியாக தாக்கினர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு எதிரே நடந்த காங்கிரஸ் கண்டன போராட்டத்தில் கோஷ்டி பூசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #congressprotest

    சென்னை:

    சி.பி.ஐ. உயர் அதிகாரிகளான அலோக்வர்மா, ராஜேஷ் அஸ்தனா ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மத்திய அரசு அவர்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது.

    இதற்கிடையில் சி.பி.ஐ. அதிகாரியான அலோக் வர்மா, ரபேல் விமான ஊழல் தொடர்பான ஆதாரங்ளை திரட்டியதால்தான் அவரை மத்திய அரசு பழி வாங்கியதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.

    மத்திய அரசின் நடவடிக் கையை கண்டித்து இன்று நாடு முழுவதும் சி.பி.ஐ. அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராகுல்காந்தி அறிவித்தார்.

    அதன்படி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு எதிரே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    மத்திய பா.ஜனதா அரசு ஜனநாயக நெறிமுறைகளை குறிதோண்டி புதைத்து வருகிறது. சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் நியமனத்தை பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்க முடியும்.

    ஆனால் ரபேல் போர் விமான ஊழல் வழக்கை மறைப்பதற்காக பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவு எடுத்து இருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    தமிழகத்தில் இப்போது 50 லட்சம் வாக்காளர்களுக்கு பிரதிநிதிகள் இல்லை. மக்கள் 20 தொகுதிகளிலும் தேர்தலையே எதிர்பார்க்கிறார்கள்.

    இன்னும் 6 மாதத்தில் பாராளுமன்ற தேர்தலும் வர இருக்கிறது. மத்தியில் நடைபெறும் காவி ஆட்சியையும் மாநிலத்தில் நடைபெறும் ஆவி ஆட்சியையும் மக்கள் தூக்கி ஏறிவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் சீரஞ்சீவி, தாமோதரன், அஸ்லம் பாட்சா, கஜநாதன், பி.ஏ. நவீன், தணிகாசலம், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், சிவராஜசேகர், எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், நிர்வாகிகள் நாச்சிகுளம் சரவணன், டாக்டர் பாண்டியராஜ், தி.நகர் விக்னேஷ்வரன், ரஞ்சன்குமார், சீதாபதி, நவாஸ், ஜி.கே.தாஸ், பிராங் ளின் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக சாஸ்திரி பவன் எதிரே உள்ள ஆண்டர்சன் சாலை முகப்பில் காலை 10 மணியில் இருந்தே தொண்டர்கள் திரள தொடங்கினார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர்களான குமரிஅனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்லகுமார், எம்.எல். ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், திருநாவுக்கரசர் வருகைக்காக காத்திருந்தனர். அவரை தொண்டர்கள் திரண்டு நின்று பகுதிக்கு மெயின் ரோடு வழியாக வரும்படி தகவலும் தெரிவித்து இருந்தனர்.

    ஆனால் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் அவரை பின்புறமாக அழைத்து வந்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் தொடங்கியபோது முன் பகுதியில் திரண்டு நின்ற மூத்த நிர்வாகிகள் அந்த பகுதிக்கு வரவில்லை. திருநாவுக்கரசர் நேரடியாக ஒலிபெருக்கியில் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ.வை அழைத்தார். ஆனால் யாரும் அங்கு செல்லவில்லை.

    தொடர்ந்து திருநாவுக்கரசர், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் சிறப்புரை ஆற்றி விட்டு போராட்டத்தை முடித்தனர். மற்றொரு இடத்தில் கே.ஆர்.ராமசாமி உள்பட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அலுவலகத்தை முற்றுகையிட செல்வோம், கைது செய்தால் அதற்கும் தயார் ஆவோம் என்றபடி திருநாவுக்கரசர் மெயின் ரோடு பகுதிக்கு வந்தார். அங்கு கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ.வை திருநாவுக்கரசர் அழைத்து, “ஏன் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு வரவில்லை. நீங்கள் தனி அரசியல் நடத்துகிறீர்களா? என்று ஆவேசமாக கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே சிலர் நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதை பார்த்ததும் கே.ஆர்.ராமசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கைது ஆவதற்கு விருப்பம் இல்லாமல் அங்கிருந்து தள்ளி சென்று விட்டனர்.

    இதனால் திருநாவுக்கரசர் ஆதரவாளர்களும், கைது ஆகாமல் சென்றனர். எல்லோரும் ஆங்காங்கே தனித்தனியாக நின்று கொண்டிருந்தனர். ஆனால் அவர்களை கைது செய்வதா? வேண்டாமா? என்று தெரியாமல் போலீசாரும் தவித்தனர். பின்னர் ஒரு வழியாக காங்கிரசார் கலைந்து சென்றனர். #congressprotest

    வேலூர் கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேலூர்:

    வேலூர் விருபாட்சிபுரம் காந்திநகரை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் சம்பவத்தன்று தனது நண்பர்கள் சிலருடன் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

    அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் சிவா இவரும் தனது நண்பர்களுடன் மைதனத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சத்யராஜ் நண்பர்களுக்கும் சிவாவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த சிவா மற்றும் அவரது நண்பர்கள். சத்யராஜ் மற்றும் அவரது நண்பர்களை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

    இதில் பலத்த காயமடைந்த சத்யராஜ், மற்றும் செல்வத்தை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து சத்யராஜ் தரப்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பலவன்சாத்துகுப்பம் பகுதியை சேர்ந்த டில்லிபாபு (வயது 22), சிவா (17), பரத் (21), அருண்குமார் (22), அஜித் (29). ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம் அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திண்டிவனம்:

    நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. அந்த பஸ்சை மதுரையை சேர்ந்த ஜெகதீஸ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

    அந்த நேரத்தில் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மீனாட்சிமுத்து (49), நெல்லையை சேர்ந்த மல்லிகா (60), தினேஷ்பாபு (27), சென்னையை சேர்ந்த சுசீலா (45), மேரிநிர்மலா, தூத்துக்குடியை சேர்ந்த தங்கராஜ் (90), சாத்தான்குளத்தை சேர்ந்த ராஜகுமாரி (50) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திண்டிவனம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாசரேத் அருகே பெண்ணை அவதூறாக பேசிய தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாசரேத்:

    நாசரேத் அருகில் உள்ள ஆசீர்வாதபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 23). இவரது தங்கையை உடையார்குளம் காந்திநகரை சேர்ந்த சூர்யா என்பவர் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனை சதீஷ்குமார், சூர்யா மற்றும் அவரது அண்ணன் முத்துசெல்வம் ஆகியோரிடம் தட்டி கேட்டார்.

     இதனால் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில் நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து சூர்யா (19) அவரது அண்ணன் முத்து செல்வம் (23) ஆகிய 2 பேரை கைது செய்தார். 

    முத்துசெல்வம் அளித்த புகாரின் பேரில் சதீஷ்குமார், பிள்ளையன்மனை வடக்கூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (20), செல்வமுருகன் (21), பாஸ்கர் (42) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ×