search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள்"

    • ஆய்வுகள் பற்றி சிறப்பாக விளக்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • அறிவியல் இயக்கத்தின் தஞ்சை மாவட்டச்செயலாளர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அறிவியல் இயக்க த்தின் தஞ்சை மாவட்டக்கிளை ஏற்பாடு செய்திருந்த 31- வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

    காலையில் நடைபெற்ற துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.இதையடுத்து கலெக்டர் முன்னிலையில் மாணவர்கள் தாங்கள் செய்த ஆய்வுகளை விளக்கிப் பேசி பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கூறினர். தங்கள் ஆய்வுகளை பற்றி சிறப்பாக விளக்கிய மாணவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பேராசிரியர் ஹேமலதா துவக்கவிழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் ராஜசேகர் , பேராசிரியர் மாரியப்பன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணை ப்பாளர் முனைவர் ராம்மனோகர் ஆகியோர் ஆய்வுகளை மதிப்பீடு செய்வது தொடர்பாக பயிற்சியளித்தனர்.

    இதில் 50 -க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவியர்கள் 600 தலைப்புகளில் ஆய்வுகட்டுரை சமர்பித்தனர்.

    இதிலிருந்து சிறந்த 60 ஆய்வு கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிற 4-ந் தேதி புதுக்கோட்டையில் நடைபெற உள்ள மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    பின்னர் மாலையில் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்கத்தின் தஞ்சை மாவட்டச்செயலர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    மாநிலத்துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சுகுமாரன், ஆய்வின் நோக்கம் பற்றி சிறப்புரையாற்றினார்.

    மாவட்ட கௌரவத் தலைவர் கார்த்திகேயன், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச்செயலர் ஸ்டீபன்நாதன் வாழ்த்துரை வழங்கினார்.

    மண்டல மாநாட்டில் பங்கேற்க உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு மாவட்டக்கருவூல அலுவலர் கணேஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாநாட்டில் பங்கேற்ற பள்ளிகளின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பள்ளிகளுக்கு கேடயமும் வழங்கப்பட்டன.

    தஞ்சை மாவட்ட அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் தியாகராஜன், செந்தில்குமார், பட்டுக்கோட்டை கிளைசெயலர் செந்தமிழ் செல்வி, மாத்தூர் கிளை சுகந்தி, மாத்தூர் கிழக்கு ஊராட்சிமன்ற தலைவரும் அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைச்செயலருமாகிய மஞ்சுளா, அரியலூர் மாவட்டச்செயலர் ஞானசேகர் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

    விலங்கியல் துறைத்தலைவர் சந்திரகலா, தமிழ்த்துறையை சார்ந்த பேராசிரியர் தமிழடியான் மற்றும் கல்லூரியின் அனைத்து துறையை சார்ந்த பேராசிரியர்களும் நடுவர்களாக பணியாற்றி மாணவர்களின் ஆய்வு அறிக்கைகளை மதிப்பீடு செய்தனர்.

    நிகழ்ச்சியை கல்லூரி மாணவி பார்வதி தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சி முடிவில் மாவட்டத்துணைத் தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • தங்கள் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான 3 வாட்டர் பில்டர் மெஷின்களையும் வழங்கினர்.
    • கடந்தாண்டு 11, 12-ம் வகுப்புகளில் பொது தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் தெரிவிக்கபட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே தென்பொன்முடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி கல்வி முடித்து பட்ட படிப்புக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த 2003-ம் ஆண்டு இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

    இதில் இந்த பள்ளியில் 2003-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவ, மாணவிகள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

    20 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் நண்பர்கள் சந்தித்துக் கொண்டதால் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும் அந்த காலகட்டத்தில் தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர், ஆசிரியைகளையும் வரவழைத்து அவர்களையும் கவுரப்படுத்தி, அவர்களிடம் வாழ்த்தும் பெற்று கொண்டனர்.

    தொடர்ந்து முன்னாள் மாணவர்கள், மாணவிகள் தங்கள் நண்பர்களிடம் பேசி தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.

    அத்துடன் தங்கள் காலகட்டமான 90 காலகட்டத்தில் இருந்த அப்போதைய திண்பண்டங்களான ஆரஞ்சு மிட்டாய், பொரி உருண்டை, ஜவ்வு மிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், புளி மிட்டாய் என பல்வேறு விதமான மிட்டாய்களை ஒருவருக்கொருவர் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும் இந்த மிட்டாய்களின் சிறப்பினையும், தாங்கள் படித்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளிடமும் பகிர்ந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் குழுப்புகைப்படமும் எடுத்தனர்.

    இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், தங்கள் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான 3 வாட்டர் பில்டர் மெஷின்களையும் வழங்கினர்.

    அத்துடன் பள்ளி மைதானத்தை சீரமைத்து, விளையாட்டு உபகரணங்களும் வழங்கினர்.

    கடந்தாண்டு 11, 12-ம் வகுப்புகளில் பொது தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் தெரிவிக்கபட்டது. 

    • கிடைக்கும் வருமானத்தை மட்டுமே வைத்து திருப்தியுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
    • பள்ளி மாணவர்களுக்காக மலிவு விலையில் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகிறார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தை சேர்ந்தவர் தையல்நா யகி (வயது 60). இவர் ஆக்கூர் அரசு மேல்நிலை ப்பள்ளி வாசலில் சிறு குடிசையாக தனது கடையை தொடங்கி 30 வருடமாக நடத்தி வருகிறார்.

    ஆரம்பத்தில் 25 பைசாவுக்கு பஜ்ஜும், போண்டாவும் விற்பனை செய்துள்ளார்.

    தற்போது விண்ணை முட்டும் அளவு விலைவாசி உயர்ந்தாலும், பள்ளி மாணவர்களின் பசியை போக்கும் வகையில் ரூ.1-க்கு பஜ்ஜி போண்டாவும், 10 ரூபாய்க்கு தயிர் சாதம், புளி சாதம் எலுமிச்சை சாதமும் விற்பனை செய்து வருகிறார்.

    எப்படி இது சாத்தியம் என்று தையல்நாயகி இடம் கேட்டபோது, அரசு பள்ளியில் தற்போது ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாணவிகள் மட்டுமே படித்து வருவதாகவும், படிக்கும் பிள்ளைகளுக்கு தினமும் வீட்டில் இரண்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே செலவுக்கு பணம் தருவார்கள்.

    மதிய நேரத்தில் அவர்கள் பெரும் செலவு செய்ய முடியாத நிலையில்லாப நோக்கம் ஏதும் இன்றி தின்பண்டங்களை விற்பனை செய்து வருவதாகவும் இதில் கிடைக்கும் வருமானம் மட்டுமே தனது வாழ்வாதாரமாக உள்ள நிலையில் இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இவரது கணவர் கலியபெரு மாள் சில வருடங்களுக்கு முன்பு இயற்கை எய்திய நிலையில் தனது ஒரே மகனுடன் வசித்து வருவதாகவும் வாழ்நாள் வரை யாருக்கும் பாரமில்லாமல் உழைத்து வருவதாகவும் அதே நேரம் தன்னால் முயன்ற சிறு உதவியாக படிக்கும் மாணவர்க ளுக்கு மலிவு விலையில் தின்ப ண்டங்க ளை விற்பனை செய்து வருவ தாகவும் நெகி ழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • 150 முதல் 200 கிராம் காலை உணவு மற்றும் 100 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும்.
    • காலை உணவுத்திட்டம் தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்து உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

    மாணவ-மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வர வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல், வருகையை அதிகரித்தல் போன்ற நோக்கத்திற்காக இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    காலை உணவுத்திட்டம் தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்து உள்ளது. காலை உணவாக காய்கறிகள் சேர்த்து ஊட்டச்சத்துடன் வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடியும் புதன் கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா பொங்கல், வெண்பொங்கல் வழங்கப்படுகிறது.

    வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா வினியோகிக்கப்படுகிறது. வெள்ளிக் கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, ரவா கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி அல்லது ரவை, கோதுமை ரவை, சேமியா வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் உள்ளூரில் அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம், உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் சேர்க்க வேண்டும்.

    150 முதல் 200 கிராம் காலை உணவு மற்றும் 100 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தது. 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்ககூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    சிவகாசியில் மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை கும்பல் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    விருதுநகர்

    தமிழகத்தில் புகையிலை, கஞ்சா ஆகியவற்றின் விற்பனையை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக போதை பொருட்களை விற்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

    அதன்படி தென் மண்ட ல ஐ.ஜி. அஸ்ராகார்க் ஆலோசனையின் பேரில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  கஞ்சா, புகையிலை விற்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பள்ளி மாணவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    சிவகாசி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவர் ஒருவர் அேத பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பள்ளிக்கு சரிவர செல்லாமல் தெரு சந்திப்பில் மயக்கத்துடனேயே சுற்றித் திரிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்த போது, மகன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது.

    அதே பகுதியைச் சேர்ந்த சிலோன் ராஜா, சுருட்டை மாடசாமி, குருசாமி, பூமாரி, ஜெயராம்,  கருப்பசாமி, சிதம்பரம், சாந்தி ஆகிய 8 பேர், மாணவரை கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாக்கியுள்ளனர்.  மேலும் அந்த மாணவரை பயன்படுத்தி கஞ்சா விற்றதாக சிவகாசி டவுன் போலீசில் மாணவரின் தந்தை புகார் செய்துள்ளார்.  இதன் அடிப்படையில் 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    வளர்ந்து வரும் சிவகாசி மாநகராட்சி பகுதியில் இதுபோன்ற சமூக விரோத கும்பல் பள்ளி-கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்று அவர்களை போதைக்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றன.

    எனவே இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் உழைத்து மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என நீதிபதி பேசினார்.
    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் 25-வது ஆண்டு விழா நடந்தது. முதல்வர் குணசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக துறையூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவர் கல்வியில் சிறந்த விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

    மாணவர்கள் தன்னம்பி க்கையுடன் உழைத்து, மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். சட்ட திட்டங்களை மதித்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். அரசுப்பணிகளுக்கு செல்ல படிக்கும் காலத்தில் இருந்தே கடினமான பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.  

    மாணவிகள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் டைரியில் நீங்கள் என்ன வேலைக்கு செல்லவேண்டும் என்பதை குறித்து வைத்து தினமும் வாசித்து அதற்கு ஏற்ப உழைக்க வேண்டும். 


    பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. மற்றும் காவலர் தேர்வுகளுக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பெருமையுடைய இந்த கல்லூரி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர் ஜீவரத்தினம், வேந்தோணி, ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை ராணி துரைராஜ், துறைத்தலைவர்கள் ரேணுகாதேவி, அறிவழகன், கண்ணன், ஆயிஷா, மும்தாஜ் பேகம், விஜயகுமார் கிருஷ்ணவேணி, ஹரிநாராயணன், உடற்கல்வி இயக்குனர் பிரசாத் மற்றும் பேராசிரி யர்கள், அலுவலக பணியா ளர்கள், மாணவ- மாணவி கள் கலந்து கொண்டனர். 
    ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களை பற்றிய புரிதலும், நம்பிக்கையும் கொண்டிருந்தால், அவர்களின் மனநிலையில் எந்த முரண்பாடும் வராது.
    ஒரு குழந்தையின் வளர்ச்சியில் காணப்படும் மாற்றங்களை சரியான நேரத்தில் கண்டுபிடித்து பயிற்சி அளித்தால் அதில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியும்.

    மாணவர்கள் அனைவருமே ஏதோ ஒரு திறன் கொண்டவர்கள் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஆசிரியரின் ஒத்துழைப்பால் மாணவர்கள் முன்னேற்றம் அடைய முடியும்.

    அவர்கள் அதிக நேரம் செலவிடுவது பள்ளியில் தான். ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களை பற்றிய புரிதலும், நம்பிக்கையும் கொண்டிருந்தால், அவர்களின் மனநிலையில் எந்த முரண்பாடும் வராது.

    மாணவர்களின் கவனம் சிதற இப்போது பல வகையான வாய்ப்புகள் இருக்கின்றன. பெரியவர்களைப் பார்த்தே அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள், ஒரு நாள் தங்கள் மொபைல் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டால், மாணவர்களின் நிலைப்பாட்டினை மாற்ற முடியும்.

    பிள்ளைகளின் வளர்ச்சியில், பெற்றோர்களின் பொறுப்பையும் அறிந்து கொள்ள வேண்டும். இதில் குழந்தைகள் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்குப் பெற்றோர்கள் செவி சாய்க்க வேண்டும்.

    அதற்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதன் மூலம், மாணவர்கள் மரியாதை கொண்டு தன்னிலை புரிந்து செயல்படுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்து உள்ளன. எனவே, மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் சமமான பங்கு உள்ளது.
    மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், முதல்வர் அலுவலகத்தில் பேசி ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர், கணபதிபாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கொழஞ்சி. இருவரும் பனியன் தொழிலாளிகள். அரசு மேல்நிலைப்பள்ளியில் இவர்களது மூத்த மகள் பிரேமா 8-ம் வகுப்பும், இளைய மகள் உமா 6-ம்வகுப்பும் பயில்கின்றனர். இவர்கள் தங்கள் சேமிப்பு பணத்தை, அடிக்கடி மக்களுக்கு உதவியாக வழங்கி வருகின்றனர்.

    அவ்வகையில் சிறுசேமிப்பாக சேர்த்த, 3 ஆயிரம் ரூபாயை இலங்கை மக்களுக்கு நிவாரணமாக வழங்க முன்வந்துள்ளனர். இலங்கைக்கான நிவாரணமாக தமிழக முதல்வரிடம் நேரில் வழங்க விரும்புகிறோம். மாவட்ட நிர்வாகம் அதற்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து சகோதரிகள் கூறியதாவது:-

    கடந்த 7 ஆண்டுகளாக சேமித்து வைக்கும் பணத்தை, பல்வேறு உதவிகளாக வழங்கி உள்ளோம். இதுவரை 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கியுள்ளோம். ஒருமுறையாவது, நிவாரண உதவித்தொகையை முதல்வரிடம் வழங்க வேண்டும் என்று முயற்சித்தோம், இயலவில்லை. இம்முறையாவது, முதல்வரிடம் நேரில் வழங்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்றனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், முதல்வர் அலுவலகத்தில் பேசி ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.

    மாணவர்கள் மரக்கன்று நட தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வீட்டுக்கொரு விருட்சம் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்தினை உலக புவி தினத்தன்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார். 

    இத்திட்டத்திற்கு கவின்மிகு தஞ்சை இயக்கம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்வடிவம் கொடுத்து வருகிறது.

     இத்திட்டத்தின் கீழ் ‌இதுவரை பல்வேறு கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 5000 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

     இதனில் தமிழகத்தில் முதல்முறையாக திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இசை வனம் உருவாக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகும்.

     இதன் தொடர்ச்சியாக அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் “புஷ்பவனம்” எனும் பெயரில் 500 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியினை மாவட்ட கலெக்டர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்.


     மேலும் அக்கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கியா மூலிகைத் தோட்டத்தினையும் துவக்கி வைத்தார். 

    தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட கலெக்டர்,  இக்கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு மாணவ -மாணவியரும் அவர்களது வீடுகளில் ஒரு மரத்தினை வளர்த்திட  வேண்டுமென அறிவுறுத்தினார்.
    ×