search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன்"

    சேலம் 4 ரோட்டில் செல்போன் ரீசார்ஜ் கடை ஊழியர் மாயமானார்.
    சேலம்:

    சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் சீனிவாசன் (வயது 18).

    இவர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று வேலைக்கு சென்ற அவர் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார் மாயமான சீனிவாசனை தேடி வருகிறார்கள்.
    தகவல் தொடர்பு வசதி முழுமையாக கிடைக்காததால் சின்னப்பநல்லூர் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட அஜ்ஜனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது சின்னப்பநல்லூர் கிராமம். இங்கு சுமார் 420 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். 

    இப்பகுதியில் செல்போன் சேவை தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை கள் முழுமையாக கிடைக்கா ததால் அப்பகுதி மக்கள் ஆன்லைன் சேவைகள், பண பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை மற்றும் இங்கு இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் ஆன்லைன் வகுப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்வும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

    அதுமட்டுமல்லாமல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் நிவாரண பொருட்கள், பொங்கல் தொகுப்பு உள்ளிட்டவற்றை வாங்குவதற்கும் இணைய சேவைகள் இல்லாததால் அப்பகுதி கிராமத்திலிருந்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உயரமான பகுதிக்கு சென்று செல்போன் சிக்னல் கிடைக்கும் இடத்தில் குடும்ப அட்டையை வைத்து ஸ்கேன் செய்து விரல் ரேகைகளை பதிவு செய்த பின்பு அங்கிருந்து மீண்டும் அனைவரும் கடைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் அவல நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது.

    பெரும்பாலான ஆண்கள்  பணிகளுக்கு வெளியூர்களுக்கு சென்று விடுவதால் வீட்டிலிருக்கும் பெண்கள் திடீரென மருத்துவமனைக்கோ அல்லது பிரசவத்திற்காக செல்வதற்கு ஆம்புலன்ஸ் மற்றும் இதர சேவைகளுக்காக யாரை யேனும் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அப்பகுதியில் இருந்து உடனடியாக தொடர்பு கொள்ள முடியாத நிலைதான் உள்ளது. 
    இந்த நிலையிலிருந்து இப்பகுதி கிராம மக்கள் மீள்வதற்காக தொலைத்தொடர்பு வசதி களை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
    அதிக வெயில் காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும்.
    கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

    வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் குறிப்பாக செல்போனில் தான் அதிகளவு நேரத்தை செலவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களின் கண்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

    அதிக வெயில் காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது கண்களை கசக்கினால் கண் எரிச்சல் வர வாய்ப்பு உள்ளது. மேலும் கண்களில் நீர்சத்து குறைவதால் அலர்ஜி ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. செல்போனை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும்.

    அத்துடன் கண்ணில் கட்டி உருவாகும். கண்களில் நீர்சத்து பிரச்சினையை சரிசெய்ய கண் சிமிட்டலை அதிகப்படுத்த வேண்டும். தண்ணீர் அதிகளவில் குடிக்கவேண்டும். கீரை, காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் மற்றும் மீன் போன்றவைகளை உணவில் சேர்த்து வரவேண்டும். முக்கியமாக கேரட், பப்பாளி, இனிப்பு பூசணிக்காய் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதேபோல் டி.வி. அதிகநேரம் பார்க்கும்போது கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. மேலும் தற்போது பள்ளி மாணவர்கள் 4 முதல் 6 மணி நேரம் வரை கணினி முன்பு அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து கணினி பயன்படுத்துவதால் கண் வலி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இதை தடுக்க கணினி பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் இருக்கையின் உயரமும், கணினியின் உயரமும் சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இதேபோல் ஆன்லைன் வகுப்பை செல்போனில் பார்க்கும்போது சரியாக அமர்ந்து கொண்டு செல்போனை கையில் வைத்து கொண்டு பார்க்கலாம். படுத்துக்கொண்டு செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் செல்போன் பார்ப்பதை தவிப்பது நல்லது.
    இந்தியாவில் உள்ள குழந்தைகள் மொபைல் முதிர்ச்சியை அடையும் இளையவர்களில் ஒன்றாகவும், ஆன்லைன் அபாயங்களை அதிகம் வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
    உலகின் 10  பகுதிகளில் உள்ள பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நடத்தப்பட்ட (மெக்காஃபி. )McAfee ஆய்வில், இந்தியக் குழந்தைகள் இளைவயதிலேயே  மொபைல் பயனபடுத்தும் அறிவை அடைகிறார்கள் என தெரியவந்து உள்ளது.

    ஆய்வின்படி, இந்தியாவில்  10-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு 83 சதவீதமாக உள்ளது. இது சர்வதேச சராசரியான 76 சதவீதத்தை விட  7 சதவீதம் ஆகும்  அதிகம்.

    இது இந்தியாவில்  குழந்தைகளை ஆன்லைன்  ஆபாயங்களுக்கு அதிகமாக உட்படுத்த வழிவகுத்தது.மேலும், சில 22 சதவீத இந்திய குழந்தைகள் இணைய அபாயத்தை  அனுபவித்துள்ளனர், இது உலகளாவிய சராசரியான 17 சதவீதத்தை விட 5 சதவீதம்  அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    உலகளவில் 90 சத்வீத  பெற்றோர்கள் ஆன்லைனில் பாதுகாவலர்களாக தங்கள் பங்கை ஒப்புகொண்டு உள்ளனர்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களில் 56 சதவீதம்  பேர் தங்கள் சொந்த ஸ்மார்ட்போன்களைப் பாதுகாக்க பார்ஸ்வேர்டையும் 42 சதவீதம்  பேர் தங்கள் குழந்தைகளின் ஸ்மார்ட்போன்களைப் பாதுகாக்க பாஸ்வேர்டையும் பயன்படுத்துகிறார்கள்.

    இந்தியப் பெற்றோர்களிடையே இணைய அச்சுறுத்தல் மற்றும் சமூக ஊடகங்களில் துஷ்பிரயோகம் பற்றிய கவலை  47 சதவீதமாக உள்ளது, இது உலகளாவிய சராசரியான 57 சதவீதத்தை  விட 10 சத்வீதம்  குறைவாகும்.

    மேலும், ஒரு நபரின் உண்மையான அடையாளம் தெரியாமல் தனிப்பட்ட உரையாடல்களில் ஈடுபடும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை, உலகெங்கிலும் உள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் 11 சதவீதம்  அதிகம்
    என ஆய்வில் தெரியவந்து உள்ளது.

    இதுகுறித்து மெக்காஃபி மார்க்கெட்டிங் துணைத் தலைவர் சச்சின் பூரி கூறியதாவது:-

    இந்தியாவில் உள்ள குழந்தைகள் மொபைல் முதிர்ச்சியை அடையும் இளையவர்களில் ஒன்றாகவும், ஆன்லைன் அபாயங்களை அதிகம் வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம், அவர்களது இணைக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயனுள்ள ஆன்லைன் பாதுகாவலர்களாக வெற்றி பெறுவதற்குத் தேவையான அறிவை பெற்றோருக்கு வழங்க முயற்சிக்கிறோம்" என்று கூறினார்.
    வாலிபரிடம் செல்போன் விற்பதாக கூறி ஆன்லைனில் மர்ம நபர்கள் செய்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து ரூ.39 ஆயிரம் மீட்டு வாலிபரிடம் ஒப்படைத்தனர்
    சேலம்:

    சேலம் போர்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்த நவீன் குமார். இவர் இணையதளத்தில்  குறைந்த விலையில் செல்போன் விற்பனை செய்வதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசிய நபர் ரூ.39 ஆயிரத்து 500 முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று சொன்னார். அதை நம்பி நவீன்குமார் போனில் பேசியவர் கூறிய வங்கி கணக்கிற்கு கூகுல்பே மூலம் ரூ.39 ஆயிரத்து 500  அனுப்பி வைத்தார்.

    ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் செல்போன் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தனது பணத்தை மீட்டுத் தருமாறு நவீன் குமார் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். 

    இதுகுறித்து  சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது அதில் நவீன் குமார் அனுப்பிய பணம் மும்பையில் உள்ள ஒரு தனியார் வங்கி கணக்கிற்கும் பஞ்சாப்பில் உள்ள தனியார் வங்கி கணக்கிற்கும் சென்றிருப்பது தெரியவந்தது. 

    மோசடி செய்யப்பட்ட பணத்தை நவீன்குமாருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிகளின் லீகல் டிபார்ட்மெண்டுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நவீன்குமாரிடம் இருந்து மோசடியாக பெறப்பட்ட  ரூ.39 ஆயிரம் 500 முழுவதும் அவரது வங்கி கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டது. 

    மேலும் இது போன்ற குறைந்த விலையில் செல்போன், 2, 4  சக்கர வாகனங்கள் மற்றும் இதர பொருட்கள் விற்பதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம். வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவதை நம்பி தங்களுடைய வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் ஓ.டி.பி.க்களை யாரிடமும் பகிர வேண்டாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம், குறைந்த வட்டியில் கடன் என்ற வரும் போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். 

    அவ்வாறு யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930-க்கு விரைவாக தொடர்பு கொள்ளும் பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டுத் தர இயலும் என  சேலம் சைபர் கிரைம் டி.எஸ்.பி. முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    ×