search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Internet access Unused villagers"

    தகவல் தொடர்பு வசதி முழுமையாக கிடைக்காததால் சின்னப்பநல்லூர் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட அஜ்ஜனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது சின்னப்பநல்லூர் கிராமம். இங்கு சுமார் 420 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். 

    இப்பகுதியில் செல்போன் சேவை தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை கள் முழுமையாக கிடைக்கா ததால் அப்பகுதி மக்கள் ஆன்லைன் சேவைகள், பண பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை மற்றும் இங்கு இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் ஆன்லைன் வகுப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்வும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

    அதுமட்டுமல்லாமல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் நிவாரண பொருட்கள், பொங்கல் தொகுப்பு உள்ளிட்டவற்றை வாங்குவதற்கும் இணைய சேவைகள் இல்லாததால் அப்பகுதி கிராமத்திலிருந்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உயரமான பகுதிக்கு சென்று செல்போன் சிக்னல் கிடைக்கும் இடத்தில் குடும்ப அட்டையை வைத்து ஸ்கேன் செய்து விரல் ரேகைகளை பதிவு செய்த பின்பு அங்கிருந்து மீண்டும் அனைவரும் கடைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் அவல நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது.

    பெரும்பாலான ஆண்கள்  பணிகளுக்கு வெளியூர்களுக்கு சென்று விடுவதால் வீட்டிலிருக்கும் பெண்கள் திடீரென மருத்துவமனைக்கோ அல்லது பிரசவத்திற்காக செல்வதற்கு ஆம்புலன்ஸ் மற்றும் இதர சேவைகளுக்காக யாரை யேனும் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அப்பகுதியில் இருந்து உடனடியாக தொடர்பு கொள்ள முடியாத நிலைதான் உள்ளது. 
    இந்த நிலையிலிருந்து இப்பகுதி கிராம மக்கள் மீள்வதற்காக தொலைத்தொடர்பு வசதி களை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
    ×