என் மலர்
நீங்கள் தேடியது "sale"
வேலாயுதம்பாளையம்,
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய்
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 53.98 1/2 குவிண்டால் எடை கொண்ட 14 ஆயிரத்து 600 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.70-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.39-க்கும், சராசரி விலையாக ரூ.22.59-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 18ஆயிரத்து 26-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 511.23 குவிண்டால் எடை கொண்ட 1079-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.72.71-க்கும், சராசரி விலையாக ரூ.77.19-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.99-க்கும், சராசரி விலையாக ரூ.70.19-க்கும் என மொத்தம் ரூ.37லட்சத்து31ஆயிரத்து 11-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 38லட்சத்து49 ஆயிரத்து 37-க்கு விற்பனையானது.
- காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது
- 40 மாடுகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாயின.
காங்கயம்,செப்.25-
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 68 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.
இதில் 40 மாடுகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.80 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன காரி வகைப் பசு விற்பனையானது.
- இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.
- திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 23 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா்.
மூலனூர்,செப்.24-
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 1.26 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.
கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 496 விவசாயிகள் 5,756 மூட்டைகளில் மொத்தம் 1,845 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 23 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். விலை குவிண்டால் ரூ. 6,450 முதல் ரூ. 7,472 வரை விற்பனையானது.
சராசரி விலை ரூ. 6,850. கடந்த வார சராசரி விலை ரூ. 6,800. ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
- வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்றது.
- ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை டெண்டரில் 92 மூட்டைகள் வரத்து வந்தது. முதல் தரம் கிலோ ரூ 71 முதல் ரூ 76 வரையிலும் 2-ம் தரம் கிலோ ரூ 55 முதல் ரூ.69 வரையிலும் விலை போனது. ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகள் விற்பனை
- வெங்கமேட்டில் செயல்பட்டு வரும்மின்னனு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு சென்றும் விற்பனை
பரமத்தி வேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப் பாளையம், சோளசிராமணி, ஜமீன் இளம்பள்ளி குரும்பலமகாதேவி, கொத்தமங்கலம் ,திடுமல், சிறுநல்லி கோவில் ,தி.கவுண்டம்பாளையம், கபிலர்மலை, வடகரையாத்தூர், ஆனங்கூர் ,மோகனூர், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர். தேங்காய் முதிர்ச்சி அடைந்ததும் கூலி ஆட்கள் மூலம் தேங்காயை பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயாகவும், தேங்காய் பருப்புகளாகவும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர் .அதேபோல் பரமத்தி வேலூர் அருகே வெங்கமேட்டில் செயல்பட்டு வரும்மின்னனு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு சென்றும் விற்பனை செய்து வருகின்றனர்.
வெங்கமேட்டில் உள்ள மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 474 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.69 -க்கும், குறைந்தபட்சமாக ரூ22.06 - க்கும், சராசரியாக ரூ.23.30-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 82- க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
மேலும் ஏலத்திற்கு 10 ஆயிரத்து 248 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ 75.89- க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ 53.33- க்கும், சராசரி விலையாக ரூ 68.88- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 8 லட்சத்து 74 ஆயிரத்து 288- க்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகள் ரூ.10 லட்சத்து 43 ஆயிரத்து 370 க்கு விற்பனையானது.
- இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.2.60 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள்
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2023 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை இன்று காலை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளியில் ரூ.1.18 கோடி இலக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.2.60 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், "கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 -வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி , மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (கூடுதல் பொறுப்பு) அய்யப்பன், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலார்கள் ஸ்ரீதர் , சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
- கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற போது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்காக சுமார் 150 மூட்டை தேங்காய் பருப்பு.
- இந்த பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,431 முதல் ரூ.7,639 வரை விற்பனையானது.
எடப்பாடி:
கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற போது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்காக சுமார் 150 மூட்டை தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,431 முதல் ரூ.7,639 வரை விற்பனையானது. 2-ம் ரக தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.5,889 முதல் ரூ.7,325 வரை விலைபோனது. இதன் மூலம் ரூ. 2 லட்சத்து 72 ஆயிரத்து 626-க்கு தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.
- ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியாகி உள்ளார்.
- உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
- பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.
- பூக்களின் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும்.
இதேப்போல் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும்.
பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்வர்.
வியாபாரிகள் மொத்தமா கவும் பூக்கள் வாங்கி செல்வர்.
பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். மேலும் வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு இருந்தாலும் விலை அதிகரிக்கும்.
அந்த வகையில் இன்று ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதாலும், நாளை விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்களின் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
அந்த வகையில் நேற்று மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனையாகின.
ஆனால் இன்று கிலோ ரூ.1250-க்கு விற்பனை செய்யப்பட்டது.
1100, முல்லை கிலோ ரூ.1000, ஆப்பிள் ரோஸ் ரூ .250, சம்பங்கி ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இவற்றின் விலையும் நேற்றைய விட அதிகமாகும்.
இருந்தாலும் பொதுமக்கள் பூக்களை வாங்கி சென்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, இன்று ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள். மேலும் நாளை விநாயகர் சதுர்த்தி. இதனால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் இருந்தது.
இதனால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளன. இருந்தாலும் பூக்களின் வரத்தும் அதிகமாக உள்ளது என்றனர்.
- சாலைபுதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.8.35 லட்சத்திற்கு விற்பனையானது
- 110 குவிண்டால் நிலக்கடலை விற்று தீர்ந்தது
வேலாயுதம்பாளையம்,
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்திஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில்நிலக்கடலை காய் 110.45குவிண்டால் எடை கொண்ட 370-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.70-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.53-க்கும், சராசரி விலையாக ரூ.82.16-க்கும் என ரூ 8 லட்சத்து 35ஆயிரத்து 317-க்கு விற்பனையானது.