search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meat"

    • எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
    • உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பில் மாநகராட்சியின் இறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆடு மற்றும் மாடுகள் வெட்டப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளுக்கு இங்கிருந்து தான் விற்பனைக்கு இறைச்சி கொண்டு செல்லப்படுகிறது.

    மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் ஆடுகள் அங்கு வெட்டப்படுகின்றன. கிலோ ரூ.700 வரை விற்கப்படுகிறது. ஆனால் இறைச்சி கடைகளில் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.900 வரை விற்கப்படுகிறது.

    புளியந்தோப்பு இறைச்சி கூடத்தின் முன் பகுதியில் சிலர் ஆட்டு இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். அங்கு கிலோ ரூ.600-க்கு ஆட்டு இறைச்சி கிடைக்கிறது.

    மட்டன் கடைகளில் கிலோ ரூ.900-க்கு விற்கும்போது அங்கு எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

    ராஜஸ்தான், சூரத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனைக்கு சனிக்கிழமை ஆடுகள் கொண்டு வரப்படும். ஒரு லாரிக்கு 350 ஆடுகள் வீதம் கொண்டு வரும்போது நெரிசலில் சிக்கி அவற்றில் 4 அல்லது 5 ஆடுகள் செத்து விடுவது வழக்கம். ஒரு லாரியில் 5 ஆடுகள் என்றால் 10, 15 லாரிகளில் வரும் போது 50 ஆடுகளுக்கு மேல் வழியில் இறந்து விடுகிறது.

    இறந்துபோன ஆடுகளை அந்த பகுதியில் உள்ள சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, சுத்தம் செய்து பிரீசரில் வைத்து பாதுகாக்கின்றனர்.

    மறுநாள் காலையில் அதனை வெட்டி விற்பனைக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இறந்த ஆடுகளை பதப்படுத்தி உண்பது சுகாதார மற்றதாகும். உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    ஆனால் இறைச்சி கூடத்தின் முன்பு சிலர் இதனை தொழிலாக செய்து வருகின்றனர். செத்து போன ஆட்டு இறைச்சிக்கும் உயிரோடு வெட்டிய ஆட்டு இறைச்சிக்கும் பார்க்கும் போது வேறுபாடு தெரியாது.

    இறைச்சி கடைகளை விட கிலோவிற்கு ரூ.300 குறைவாக கிடைப்பதால் அதனை மக்கள் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் இதுபோன்ற சாகின்ற ஆடுகளை இறைச்சி கூடத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள். கூடத்தில் உள்ள வியாபாரிகள் இந்த செயலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் வெளியே சிலர் கடை வைத்து சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பதை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.

    மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தான் இறைச்சி கூடம் முழுவதும் உள்ளது. அப்படி இருக்கும் போது மலிவான விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதை ஏன் தடுக்க முடியவில்லை என்று வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    • உணவு விரைவாக செரிமானமாக வேண்டும்.
    • உணவின் வகையை பொறுத்து செரிமான முறை அமையும்.
    உண்ணும் உணவு விரைவாக செரிமானமாக வேண்டும். அப்போதுதான் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். வயது, பாலினம், வளர்சிதை மாற்றம், உணவின் வகை உள்ளிட்டவற்றை பொறுத்து செரிமான செயல்முறை அமையும். இருப்பினும் சாப்பிடும் உணவை பொறுத்து செரிமான செயல்முறை 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை நடைபெறலாம் என்பது உணவியலாளர்களின் கருத்தாக

    இருக்கிறது. எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் செரிமானமாகும் என்பது பற்றி பார்ப்போம்.

     தண்ணீர்

    தண்ணீர் விரைவாக செரிமானம் ஆகக்கூடியது. இருப்பினும் வயிறு நிரம்பியுள்ளதை பொறுத்து அது ஜீரணமாகும் நேரம் மாறுபடும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகினால் ஐந்து நிமிடங்களுக்குள் அது உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால் அதிக அளவு உணவு சாப்பிட்டு விட்டு அதன் பிறகு தண்ணீர் பருகினால் அது உறிஞ்சப்படுவதற்கு சில மணி நேரமாகிவிடும்.

     ஜூஸ்

    பழச்சாறு பருகினால் அது சுமார் 20 நிமிடங்களில் ஜீரணமாகிவிடும். அதில் இருக்கும் சத்துக்கள் விரைவாக உறிஞ்சப்பட்டு உடல் உறுப்புகளை சென்றடைந்துவிடும். அதன் மூலம் ஆரோக்கியம் வலுப்படும். ஸ்மூத்திகளை பருகினால் அவை செரிமானம் ஆவதற்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படும். எந்த உணவுகளை உட்கொண்டாலும் அதனுடன் இது போன்ற நார்ச்சத்துமிக்க உணவுகளையும் அடிக்கடி சாப்பிட வேண்டும். அவைதான் செரிமான மண்டலத்திற்கு சிறந்தவை.

     பழங்கள்

    முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் சுமார் 30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்றவை ஜீரணமாக சுமார் 40 நிமிடங்கள் செலவாகும். தர்பூசணி பழம் விரைவாக செரிமானமாகக்கூடியது. அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செரிமான செயல்முறை ஒட்டுமொத்தமாக நடைபெற்று முடிந்துவிடும். குடல் இயக்கம் சுமூகமாக நடைபெறுவதற்கும் உதவி புரியும். அதேவேளையில் செரிமான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு உணவுகளுடன் பழங்களை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

     காய்கறிகள்

    பழங்களை விட காய்கறிகள் ஜீரணிக்க சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். இருப்பினும் கீரை, வெள்ளரிக்காய், குடை மிளகாய், தக்காளி உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் செரிமானமாகி வயிற்றை விட்டு வெளியேற சுமார் 30 நிமிடங்கள் ஆகலாம். முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் 40 நிமிடங்களில் செரிக்கப்படும். கேரட், பீட்ரூட் உள்ளிட்ட வேர் காய்கறிகள் செரிமானமாக சுமார் 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம் போன்றவை செரிமானமாக சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

     தானியங்கள்

    பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் ஒன்றை மணி நேரம் ஆகலாம். அதுபோல் பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.

     இறைச்சி

    எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். அதே நேரத்தில் சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் செரிமானம் அடைவதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆடு, கோழி, மாடு, பன்றி போன்றவைகளின் இறைச்சிகளை உட்கொண்டால் அவை ஜீரணமாவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேலாகும்.

     பால் பொருட்கள்

    கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டிகள் ஜீரணிக்க சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக்கட்டிகள் ஜீரணமாக5 மணி நேரம் கூட ஆகலாம். முட்டையின் மஞ்சள் கரு மட்டும் ஜீரணமாகுவதற்கு 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.

     நட்ஸ்கள்-விதைகள்

    எள், சூரியகாந்தி, பூசணி விதைகள் ஜீரணமாக சுமார் 2 மணி நேரம் தேவைப்படும். பச்சை வேர்க்கடலை, பாதாம், முந்திரி பருப்புகள், அக்ரூட் பருப்புகள் போன்றவை ஜீரணமாகுவதற்கு சுமார் 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

    • அயோத்தி செல்லும் யாத்ரீகர்கள் வசதிக்காக இந்த முடிவு.
    • போலீஸ், நகர்ப்புற அமைப்புகள், உணவுத்துறை மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள முடிவு.

    மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் நேற்று பதவி ஏற்ற நிலையில், அம்மாநிலத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறையின் கீழ் திறந்த வெளியில் இறைச்சி, முட்டை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான் விழிப்புணர்வு பிரசாரம் உணவுத்துறை, போலீஸ், உள்ளூர் நகர்ப்புற அமைப்புகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. டிசம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

    போபாலில் உள்ள நேரு மைதானத்தில் மோகன் யாதவ் நேற்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார. ஜெக்திஷ் தேவ்தா, ராஜேந்திர சுக்லா ஆகியோர் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் ஆகியோர் கலந்த கொண்டனர்.

    ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மோகன் யாதவ், தனது முதல் கேபினட் கூட்டத்திலேயே இந்த முடிவை எடுத்துள்ளார்.

    அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. மத்திய பிரதேசம் வழியாக அயோத்தி செல்லும் ராமர் பக்தர்கள் வரவேற்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இறைச்சி கழிவுகளை முறையாக முடிவு செய்ய ஏற்பாடுகள் செய்யவும் ,அதன் விபரத்தை நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கவும் அறிவிப்பு வழங்கப்பட்டது.
    • இறைச்சி கழிவு களை வாகனத்தில் ஒப்படைக் காமல் பொது இடங்கள் மற்றும் சாலையோரம் மற்றும் சாக்கடைகளில் கொட்டுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சி விற்பனை கடைகளில் தினசரி உற்பத்தியாகும் இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி முறையாக முடிவு செய்யாமல் ஒரு சில இறைச்சி விற்பனை கடை உரிமையாளர்களால் பொது இடங்கள் சாக்கடைகள் பைபாஸ் சாலைகள் ஆகியவற்றில் கொட்டி பொது சுகாதார கேடு ஏற்படுத்தியதால் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தார்கள்.

    ஏற்பாடுகள்

    இதன் தொடர்ச்சியாக இறைச்சி விற்பனை கடைக்காரர்கள் தங்களு டைய கடைகளில் உற்பத்தி யாகும் இறைச்சி கழிவுகளை முறையாக முடிவு செய்ய ஏற்பாடுகள் செய்யவும் ,அதன் விபரத்தை நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கவும் அறிவிப்பு வழங்கப்பட்டது. நாமக்கல் நகராட்சி ஆணை யாளர் அவர்களின் முயர்ட்சியின் படி தற்போது நாமக்கல் நகர இறைச்சி விற்பனை கடை உரிமையாளர்கள் சங்கம் இறைச்சி கழிவுகளை தினசரி கடைகளில் சென்று சேகரித்து ஜே .கே. ஆர் மெரைன் ப்ராடக்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கரூரில் உள்ள வாகனத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு நேற்று யயயயயய அனைத்து கடைகளிலும் இறைச்சிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு கரூர் சென்று அங்குள்ள வாகனத்தில் ஒப்படைக் கப்பட்டது.

    தினசரி நாமக்கல் நகராட்சி பகுதி களில் உள்ள இறைச்சி கடைகளில் உற்பத்தியாகும் கழிவுகளை சேகரித்து கரூரில் ஒப்படைக்க முடிவு செய்யப்ப ட்டுள்ளது. எனவே இறைச்சி விற்பனை கடை உரிமை யாளர்கள் தங்களுடைய கடைகளில் உற்பத்தி யாகும் இறைச்சி கழிவுகளை இறைச்சி விற்பனை கடை உரிமையாளர் சங்கம் மூலம் இயக்கப்படும் வாகனத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படு கிறது இறைச்சி கழிவு களை வாகனத்தில் ஒப்படைக் காமல் பொது இடங்கள் மற்றும் சாலையோரம் மற்றும் சாக்கடைகளில் கொட்டுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    எச்சரிக்கை

    எனவே இறைச்சி விற்பனை கடைக்காரர்கள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி பொது இடங்களிலும் சாக்கடை களிலும் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் இருக்க வேண்டும் என தெரி வித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் காய்கறிகளின் திடீர் விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஏராளமான பொதுமக்கள் மீன் மார்க்கெட்டில் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    கோவை,

    தமிழகம் முழுவதும் காய்கறிகளின் திடீர் விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி இல்லாமல் சமையல் செய்யும் நிலைக்கு இல்லத்தரசிகள் சென்று விட்டனர்.

    இதனால் பொதுமக்கள் மீன் மற்றும் இறைச்சிக்கடைகளை நோக்கி சென்று விட்டனர். கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, கேரளா, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன.

    இன்று காலை வழக்கம் போல உக்கடம் மீன் சந்தை கூடியது. தற்போது கேரளாவில் மீன்பிடி தடை காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமேஸ்வரத்தில் இருந்து அதிகளவில் மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    இந்த மீன்களை வாங்குவதற்காக அதிகாலை முதலே மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    அந்த பகுதியே எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்பட்டன. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர். விலா, நெத்திலி, சங்கரா, பாறை என பல்வேறு வகையான மீன்களை ஆர்வத்துடன் வாங்கி செல்வதை காண முடிந்தது.

    ஏராளமான பொதுமக்கள் மீன் மார்க்கெட்டில் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் விற்பனையான மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

    விளமீன்-ரூ.400, நெத்திலி-ரூ.150, சங்கரா-ரூ.270, வாவல்-ரூ.130, நெய்மீன்-ரூ.90, கொல்லி-ரூ.130, அயிரை-ரூ.200, முரள்-ரூ.200, பாறை-ரூ.400, வஞ்சிரம்-ரூ.700, மத்தி-ரூ.150க்கு விற்பனையாகி வருகிறது.இதேபோல் கோவையில் உள்ள இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி சென்றனர். புறநகர் பகுதி களான மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.

    • சேலம் மாநகர பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
    • குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி என 64 கிலோவை அதிரடியாக பறிமுதல் செய்து இறைச்சியை அழித்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகர பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை அடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலை மையில் அலுவலர்கள் சூர மங்கலம் மற்றும் அஸ்தம்பட்டி பகுதிகளில் உள்ள 15 இறைச்சி கடைக ளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் சுகாதாரமற்ற முறையிலும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி என 64 கிலோவை அதிரடியாக பறிமுதல் செய்து இறைச்சியை அழித்தனர். மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெறாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறும் போது, இறைச்சி கடையில் சுகாதாரமற்ற நிலையில் கடையின் முன்பு இறைச் சியை தொங்கவிடக்கூடாது.

    துருப்பிடிக்காத கம்பியில் சுகாதாரமான முறையில் தொங்கவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டது. பணியாளர்கள் கையுறை , தலை உறை, ஏப்ரான் அணிந்து சுகாதா ரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும். கண்ணாடி கூண்டில் அல்லது கண்ணாடி போன்ற சீட்டு கொண்டு கவர் செய்து விற்பனை செய்ய வேண்டும். மேலும் இது போன்ற நடவ டிக்கைகள் பின்பற்றாத கடைகள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • (ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் தினத்தையொட்டி இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது.
    • எனவே இறைச்சி கடை உரிமையாளர்கள் தாங்கள் நடத்தும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை முழுமையான அளவில் மூடப்பட வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் தினத்தையொட்டி இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே இறைச்சி கடை உரிமையாளர்கள் தாங்கள் நடத்தும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை முழுமையான அளவில் மூடப்பட வேண்டும்.

    அனைத்து இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதா என்பதை சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்கவும், மாநகராட்சியின் அறிவிப்பை செயல்படுத்தாத இறைச்சி கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • பொங்கல் பண்டிகையொட்டி பெரும்பாலான வீடுகளில் முதல் நாள் மற்றும் 2-வது நாளான நேற்றும் சைவ உணவுகளை சமைத்து அதனை சாமிக்கு படையலிட்டு கும்பிடுவது வழக்கம். 3-வது நாளான காணும் பொங்கல் அன்று அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி உண்பார்கள்.
    • காணும் பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம் அலைமோதியது.

    சேலம்:

    பொங்கல் பண்டிகை ஓட்டி நேற்று முன்தினம் சேலம் மாநகரில் பெரும்பாலான இறைச்சி மற்றும் மீன்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    தொடர்ந்து நேற்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மீன் கடைகள் இறைச்சி கடைகளை அடைக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதையொட்டி இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் கறி சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    இதைத்தொடர்ந்து1 மணி நேரம் வரை காத்து நின்று கடைகளில் இறைச்சியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    1 கிலோ ஆடு இறைச்சி ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல சூரமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மீன் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் மீன்கள் விற்பனை அதிக அளவில் நடந்தது.

    • ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி இறைச்சி எடுப்பதற்காக அதிகாலை முதலே அதிகளவில் அசைவ பிரியர்கள் கடை களில் குவிந்தனர்.
    • குறிப்பாக மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 500- க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவில் மீன் கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளன. இதேபோல் மீன் மார்க்கெட், இறைச்சி மார்க்கெட்டுகளும் உள்ளன.

    இந்த கடை மற்றும் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை சீசன் நாட்களில் மீன், ஆடு, கோழி இறைச்சி விற்பனை அதிகளவில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும்

    கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி இறைச்சி எடுப்பதற்காக அதிகாலை முதலே அதிகளவில் அசைவ பிரியர்கள் கடை

    களில் குவிந்தனர். குறிப்பாக மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஆடு, கோழி இறைச்சி , மீன் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இன்று 1 கிலோ ஆட்டுக்கறி - ரூ.600- ரூ.700, பிராய்லர் கோழிக்கறி - ரூ.200, நாட்டுக்கோழி கறி - ரூ.560- ரூ.600, மீன் வகைகள் ( ரகத்தை பொறுத்து)- ரூ.125- ரூ.700, என்கிற விலையில் விற்கப்பட்டது.

    ஆசனூர் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமானை வேட்டையாடிய 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக மான் இறைச்சியை கடித்து குதறி சாப்பிட்டது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக பவானிசாகர், தலமலை, ஆசனூர் மற்றும் தாளவாடி வனப்பகுதியில் செந்நாய்கள் அதிகளவில் காணப்படுகிறது.

    செந்நாய்கள் எப்போதும் கூட்டமாக நடமாடுவதோடு மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டை யாடும்போது 10-க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்று சேர்ந்து வேட்டையாடி பின்னர் இறைச்சியை உண்பது வழக்கம்.

    இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை யோரத்தில் ஆசனூர் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளி மானை வேட்டையாடிய 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக மான் இறைச்சியை கடித்து குதறி தின்றன.

    தற்போது பெய்த மழையால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் பசுமையாக இருந்து புற்களை சாப்பிட வரும் புள்ளிமான்களை செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக தாக்கி வேட்டையாடி வருகின்றன.

    ×