search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயம்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலம் 4 ரோட்டில் செல்போன் ரீசார்ஜ் கடை ஊழியர் மாயமானார்.
    சேலம்:

    சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் சீனிவாசன் (வயது 18).

    இவர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று வேலைக்கு சென்ற அவர் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார் மாயமான சீனிவாசனை தேடி வருகிறார்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலத்தில் வாலிபர் திடீர் மாயமானார்.
    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி என்.மேட்டுத்தெரு   தடிக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் கோபிசங்கர்(வயது30). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 28-ந்தேதி ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. 

    அக்கம்பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி கோபிசங்கரின் தந்தை சிவகுமார் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து கோபிசங்கர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரித்து வருகிறார்கள். 

    கோபிசங்கர் காணாமல் போன அன்று சந்தன கலர் கோடு போட்ட அரை கை சட்டையும், புளூ கலர் டிராயரும் அணிந்திருந்தார். அவரது இடது கண் பார்வை இல்லை. வலபுறமாக சாய்ந்து நடக்கும் பழக்கம் கொண்டவர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டை விட்டு சென்ற தாய் மற்றும் மகள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே  பள்ளிப்படை முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா.  கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்  கடந்த 27-ந்தேதி  வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.

    வீட்டில் இருந்த மனைவி ஜெயஸ்ரீ (வயது 23) மற்றும் 3 வயது மகள் லக்‌ஷனா ஆகியோரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த ராஜா தனது மகள், மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் 2 பேரும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து ராஜா சிதம்பரம்  டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து  தாய்- மகள் என்ன ஆனார்கள், எங்கு சென்றனர் என்பது குறித்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எடப்பாடி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் திடீரென மாயமானார்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணம்பட்டி ஊராட்சி, மோட்டூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி இவரது மகள் தமிழரசி(23) இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 

    இத்தம்பதியினருக்கு 2 வயது மற்றும் 6 மாதத்தில் என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 
    இந்நிலையில் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்த தமிழரசி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெற்றோருடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசி தனது 6 மாத கைக்குழந்தையுடன் திடீரென மாயமானார். 

    கை குழந்தையுடன் மாயமான தமிழரசியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் அவர் கிடைக்காத நிலையில்,கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

    புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன தமிழரசியை யாரேனும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார்களா? அல்லது அவர் வேறு எதேனும் குடும்ப பிரச்சினைக்காக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×