என் மலர்
நீங்கள் தேடியது "jewel"
- அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:
மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. தரை தளத்தில் உள்ள வீடுகள் முழுவதும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நின்றதால் பெரும்பாலானோர் வீடுகளை பூட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகளில் சென்று மீட்டனர். மேலும் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் ஹெலிகாப்டர்களிலும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ள நீர் வடிந்து உள்ளதால் வீடுகளுக்கு மக்கள் திரும்பி உள்ளனர். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.
மழை வெள்ளத்தில் மூழ்கிய வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் மற்றும் பிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட எலெக்ட்ரிக் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளதை பார்த்து உரிமையாளர்கள் கண்ணீர் வடித்தனர்.
இதற்கிடையே முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் வடிந்த பகுதியில் பொதுமக்கள் திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். அப்போது வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
வரதராஜபுரம் பகுதியில் விஷ்னு என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் 17 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கனமழை காரணமாக முடிச்சூர் முழுவதும் மழை நீரால் மூழ்கி போனதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து இருந்தனர். தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சரத்குமார் என்பவர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், கண்ணண் என்பவரது வீட்டில் 15 நகை, விஜயலட்சுமி என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், கார்த்திக் என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, அருண் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை என மொத்தம் 60 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை அள்ளிச் சென்று உள்ளனர்.
சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் மற்றும் வாங்கிய நகைகளை மழை வெள்ளத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் சுருட்டி சென்று இருப்பதை கண்டு அதனை பறி கொடுத்தவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முடிச்சூர் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் செயல்படவில்லை. இதனால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே அதே பகுதியில் 3 மாதத்திற்கு முன்பு 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன நிலையில் குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை தற்போது மீண்டும் கை வரிசை காட்டி உள்ளனர்.
மழைவெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கும் அவசரத்தில் வீட்டில் இருந்த நகை மற்றும் ரொக்கப்பணத்தை பெரும்பாலானோர் அப்படியே விட்டுச்சென்று இருந்தனர்.
வெள்ளத்தின் போது பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் நகை-பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர். மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் முடிச்சூர் பகுதியிலும் சில வீடுகளில் கொள்ளை நடந்து உள்ளது. இது தொடர்பாகபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மழை பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவுவது போல் நடித்து மனிதாபிமானம் இல்லாமல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
- மர்மநபர்கள் திருடி வந்து வைத்து சென்றனரா? போலீஸ் விசாரணை
- கண்காணிப்பு காமிராக்களையும் ைகப்பற்றி ஆய்வு
வடவள்ளி,
கோவை மருதமலை சாலையில் முல்லை நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அவசர மருத்துவ தேவைக்காக அங்கு ஒரு ஆம்புலன்சு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஆம்புலன்சின் டிரைவர் முருகன் என்பவர் நேற்று மதியம் ஆம்புலன்சை சுத்தம் செய்தார். பின்பக்கம் சுத்தம் செய்வதற்காக ஆம்புலன்சு கதவை திறந்தார்.
அப்போது உள்ளே ஒரு கைப்பை இருந்தது. அதை எடுத்து அவர் பார்த்தார். அதில் செயின், மோதிரம், வளையல், ஆரம் என தங்க நகைகள் இருந்தன.
இதனால் அதிர்ச்சியான அவர் உடனே பையை எடுத்து கொண்டு, வட வள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு போலீசாரிடம் ஆம்புலன் சில் இந்த பை கிடந்ததாகவும், இதில் நகைகள் உள்ளது. ஆனால் யாருடையது? ஆம்புலன்சில் எப்படி வந்தது என தெரியவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அது ஒரிஜினல் நகையைா? அல்லது போலி நகையா? என ஆய்வு செய்தனர். அப்போது அது ஒரிஜினல் நகை தான் என்பது உறுதியானது. மொத்தம் 19 பவுன் நகை இருந்தது.
போலீசார் தொடர்ந்து அந்த நகை யாருடையது? என்பதை கண்டறிய அந்த பையில் ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா என தேடி பார்த்தனர்.
அப்போது அதில் ஒரு துண்டு சீட்டு இருந்தது. அதை எடுத்து பார்த்த போது, அதில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு கேக் ஷாப்பில் கேக் வாங்கியதற்கான சீட்டு என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த நகையை மீட்டு, அது யாருடையது? எப்படி ஆம்புலன்சில் வந்தது. யாராவது திருடி வந்து விட்டு, பயத்தில் ஆம்புலன்சில் விட்டு சென்றனரா? அல்லது ஆம்புலன்சில் வந்த யாராவது மறந்து விட்டு சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்கின்றனர். யாராவது ஆம்புலன்சில் வந்து நகைைய வைத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கிறதா? என்பதை பார்த்து ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். மேலும் துண்டு சீட்டில் இருந்த கேக் கடைக்கும் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
- 15 வயது சிறுவன் ஒருவன் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
- போலீசார் அந்த சிறுவனை பிடித்து கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (வயது 24 ). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மாயமானது.
அதிர்ச்சியடைந்த லாவண்யா பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்த அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பல்கலைக்கழகத்துக்கு எதிராக உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.
- 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து உதவி பேராசிரியை சுகன்யா அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர்.
சேலம்:
சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியையாக சுகன்யா (35) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பல்கலைக்கழகத்துக்கு எதிராக உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் இவர் பணி முடிந்து தனது மொபட்டில் பல்கலைக்கழகம் பகுதியில் உள்ள பாலத்தின் கீழே சென்று கொண்டு இருந்தார். அங்கு இருந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து உதவி பேராசிரியை சுகன்யா அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றார்.
இதுகுறித்து தெரியவந்ததும் கருப்பூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது உதவி பேராசிரியை சுகன்யாவிடம் நகையை பறித்து சென்றது ஓமலூர் மாட்டு காரன்புதூர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் உள்பட 2 பேர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான வாலிபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
- சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் 17-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி வசந்தா (65).
துணிக்கடை
இவர் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார். இதையடுத்து மூதாட்டி துண்டை எடுத்து அவரிடம் காண்பித்தக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்ச லிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து வசந்தா தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மீனாவின் கணவர் செல்லையா கடந்த 10-ந்தேதிக்கு முன்பு இறந்து விட்டார்.
- திருட்டு குறித்து மீனா தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள கீழ தென்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி மீனா. செல்லையா கடந்த 10-ந்தேதிக்கு முன்பு இறந்து விட்டார். மீனா தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று அவரை விஷ பூச்சி கடித்து விட்டது. இதனால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று வீட்டுக்கு சென்றார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 2½ பவுன் தங்க செயின் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- அயோத்–தி–யாப்–பட்–ட–ணத்தை அடுத்த மின்–னாம்–பள்ளி பகு–தியை சேர்ந்–த–வர் மாதேஸ்–வரி உடை–யாப்–பட்டி பகு–தி–யில் மின்–வா–ரிய அலு–வ–ல–கத்–தில் அக்–க–வுண்ட் மேற்–பார்–வை–யா–ள–ராக பணி–பு–ரிந்து வரு–கி–றார்.
- இவர் குடும்–பத்–து–டன் வெளி–யூர் சென்ற போது மர்–ம–ந–பர்–கள் வீட்–டின் பூட்டை உடைத்து பீரோ–வில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயி–ரத்தை திருடி சென்–ற–னர்.
சேலம்:
சேலம் அயோத்–தி–யாப்–பட்–ட–ணத்தை அடுத்த மின்–னாம்–பள்ளி பகு–தியை சேர்ந்–த–வர் மாதேஸ்–வரி (வயது 52). இவர், உடை–யாப்–பட்டி பகு–தி–யில் மின்–வா–ரிய அலு–வ–ல–கத்–தில் அக்–க–வுண்ட் மேற்–பார்–வை–யா–ள–ராக பணி–பு–ரிந்து வரு–கி–றார். இவர் குடும்–பத்–து–டன் வெளி–யூர் சென்ற போது மர்–ம–ந–பர்–கள் வீட்–டின் பூட்டை உடைத்து பீரோ–வில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயி–ரத்தை திருடி சென்–ற–னர்.
இது–கு–றித்து மாதேஸ்–வரி கொடுத்த புகா–ரின் பேரில் காரிப்–பட்டி போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தியதில், மாதேஸ்–வரி வீட்–டில் திரு–டி–யது உளுந்–தூர்–பேட்டை பகு–தியை சேர்ந்த கும–ர–வேல் (23) என்–ப–து தெரிய வந்–தது. உடனே போலீ–சார் அவரை கைது செய்–த–னர். அவ–ரி–டம் இருந்து 6 பவுன் நகையை மீட்–ட–னர். இந்த திருட்டு தொடர்–பாக மேலும் ஒரு–வரை போலீ–சார் தேடி வரு–கின்–ற–னர்.
- மர்மநபர் மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார்.
- தனிப்படை போலீசார் மர்மநபரை கைது செய்து பறிமுதல் செய்தனர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவள்ளுவர் நகர் அருகே கடந்த மாதம் 26-ந்தேதி காலை மூதாட்டி ஒருவர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார்.
இந்த நகை பறிப்பில் ஈடுபட்டவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் உத்தரவிட்டார்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், ஏட்டுகள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, செந்தில்குமார், ஜனார்த்தனன், ராஜ்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெற்றிவேல் (வயது38) என்பதும், இவர் தற்போது கும்பகோணம் பெருமாண்டி பகுதியில் தங்கியிருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் வெற்றிவேலை கைது செய்து அவரிடம் இருந்து 7 பவுன் நகை மற்றும் வழிப்பறி செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
- அமிர்தவல்லி (வயது 50). இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு சென்றுள்ளார்.
- அப்போது வீட்டிற்கு வந்த வாலிபர், உங்கள் பாட்டி எனக்கு பணம் தர வேண்டும், பீரோ சாவியை கொடு என கேட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 50). இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த வாலிபர், உங்கள் பாட்டி எனக்கு பணம் தர வேண்டும். பீரோ சாவியை கொடு என கேட்டுள்ளார். சாவியை வாங்கி பீரோவில் இருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து அமிர்தவல்லி சேத்தியாதோப்பு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை-பணம் அபேஸ் செய்யப்பட்டது.
- சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(வயது52). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த பொங்கல் திருவிழாவுக்கு சென்றுவிட்டு சிவகாசிக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக மினி பஸ்சில் ஏறினார். அப்போது டிக்கெட் எடுப்பதற்காக தான் கையில் வைத்திருந்த பையில் மணிபர்சை எடுத்தார். அதில் வைத்திருந்த 4½ பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரத்து 500 காணாமல் போய் இருந்தது. யாரோ மர்மநபர் நகைகளையும், பணத்தையும் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள மேலகுருணை குளத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி(36). இவர் அருப்புக்கோட்டையில் இருந்து மேலகுருணை குளத்திற்கு பஸ்சில் சென்றார். அப்போது டிக்கெட் எடுப்ப தற்காக தான் வைத்திருந்த பையில் மணிபர்சை பார்த்தபோது அது காணாமல் போயிருந்தது. அதில் 11/2 செயின் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வைத்திருந்தார். பஸ்சில் யாரோ மர்மநபர் அவரது மணிபர்சை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறையில் முத்தாரம்மன்கோவில் உள்ளது.
- இந்த கோவிலின் உபயதாரராக அதே ஊரை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் தங்கசாமி(வயது 30) இருந்து வருகிறார்.
நெல்லை:
ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறையில் முத்தாரம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலின் உபயதாரராக அதே ஊரை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் தங்கசாமி(வயது 30) இருந்து வருகிறார்.
இவர் கடந்த 17-ந்தேதி கோவிலில் பூஜை முடிந்த பின்னர் கோவிலை பூட்டிவிட்டு வீடு திரும்பிவிட்டார். அதன்பின்னர் நேற்று காலை கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
மேலும் கோவில் கருவறையில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்கநகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தங்கசாமி பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.