ஓடும் பஸ்சில் நகை அபேஸ்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் நகை அபேஸ்
Published on

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள மேலகுருணை குளத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி(36). இவர் அருப்புக்கோட்டையில் இருந்து மேலகுருணை குளத்திற்கு பஸ்சில் சென்றார். அப்போது டிக்கெட் எடுப்ப தற்காக தான் வைத்திருந்த பையில் மணிபர்சை பார்த்தபோது அது காணாமல் போயிருந்தது. அதில் 11/2 செயின் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வைத்திருந்தார். பஸ்சில் யாரோ மர்மநபர் அவரது மணிபர்சை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com