சேத்தியாத்தோப்பு அருகே சிறுவனை ஏமாற்றி 3 பவுன் நகை கொள்ளை : வாலிபருக்கு வலைவீச்சு

அமிர்தவல்லி (வயது 50). இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த வாலிபர், உங்கள் பாட்டி எனக்கு பணம் தர வேண்டும், பீரோ சாவியை கொடு என கேட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.
சேத்தியாத்தோப்பு அருகே   சிறுவனை ஏமாற்றி 3 பவுன் நகை கொள்ளை :   வாலிபருக்கு வலைவீச்சு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 50).          இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த வாலிபர், உங்கள் பாட்டி எனக்கு பணம் தர வேண்டும். பீரோ சாவியை கொடு என கேட்டுள்ளார். சாவியை வாங்கி பீரோவில் இருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து அமிர்தவல்லி சேத்தியாதோப்பு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com