என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன்"

    • சிறுவன் 12 நிமிடங்களில் சுமார் 64 அம்புகளை எய்து அசத்தினார்.
    • இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் H வினோத் கலந்துகொண்டார்.

    கண்களை கட்டிக்கொண்டு 64 அம்புகளை எய்து 7 வயது சிறுவன் சித்தார்த் இரட்டை சாதனை படைத்துள்ளார். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகங்களில் அங்கீகாரம் பெறுள்ளார்.

    சென்னை நந்தனம் YMCA உடற்கல்வி கல்லூரி வளாகத்தில் உள்ள வில்வித்தை மைதானத்தில், 7 வயது சிறுவன் கண்களை கட்டிக் கொண்டு, காம்பவுண்ட் வில் மூலமாக 7 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி, அம்புகளை எரியும் சாதனை முயற்சி நடைபெற்றது.

    இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய புத்தகங்களில் அங்கீகாரம் பெறும் வகையிலான இந்த சாதனை நிகழ்ச்சியில் 7 வயதே நிரம்பிய சித்தார்த் பன்னீர் எனும் சிறுவன் 12 நிமிடங்களில் சுமார் 64 அம்புகளை எய்து அசத்தினார்.

    குறிப்பாக இந்தியாவில் முதன்முதலாக தயாரிக்கபட்டுள்ள காம்பவுண்ட் வில் மூலமாக சிறுவன் சித்தார்த் அம்புகளை எறிந்ததும், இதற்கு முன்னதாக கண்களை கட்டிக்கொண்டு இந்த சாதனையை யாரும் முயற்சி செய்ததில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. சித்தார்த்தின் முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்கள், சாதனைக்கான சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் H வினோத், இரா சரவணன் ஆகியோர் வருகை புரிந்தனர்.

    இதுகுறித்து பேசிய சித்தார்த்தின் தந்தை கரிகாலன், "எனது மகனை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வைப்பதே இலக்கு என்றும், இந்த இரட்டை சாதனைகள் புரிந்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

    • சம்பவத்தன்று சிறுவன் வீட்டில் தனியாக இருந்தான்.
    • சிறுவன் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன், தனது தாயின் செல்போன் மூலமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனுக்கு "டேட்டிங் செயலி" மூலமாக சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

    அதில் சில நபர்கள், அந்த சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவரம் அவரது தாய் மூலமாகத்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

    சம்பவத்தன்று சிறுவன் வீட்டில் தனியாக இருந்தான். அப்போது வெளியே சென்றிருந்த அவனது தாய் திடீரென வீட்டுக்கு வந்துவிட்டார். அவர் வந்ததும் சம்பந்தமில்லாத ஒரு நபர் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடினார். அது யார்? என்று கேட்டபோது சிறுவன் சரியாக பதில் கூறவில்லை.

    இதையடுத்து அவன் பயன்படுத்திய தனது செல்போனை சிறுவனின் தாய் சோதனை செய்தார். அப்போது சில வித்தியாசமான செயலிகள் தனது செல்போனில் இருப்பதை அவர் பார்த்தார். இதனால் சந்தேகமடைந்த அவர், போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சைல்டு லைன் அதிகாரிகள் முன்னிலையில் சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டான். அவர்களிடம் தான், சிறுவன் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விவரத்தை தெரிவித்திருக்கிறான். சிறுவன் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அப்போது சிறுவன் 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும், சிறுவனை தவறாக பயன்படுத்திய நபர்களை பற்றிய தகவல்களும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.

    அவர்களில் படன்னக்காடு சைனுதீன்(வயது52), வெள்ளச்சல் சுகேஷ்(30), வடக்கக்கொவ்வல் ரைஸ்(40), கலோலாடு அப்துல் ரகுமான்(55), சந்தேரா பகுதியை சேர்ந்த அப்சல்(23), சித்தராஜ்(48) உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் சைனுதீன் என்பவர் பேக்கல் பகுதியில் உள்ள கல்வி அலுவலகத்தில் மாவட்ட துணைக்கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் உள்பட இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் சிறுவனை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 போலீஸ் நிலையங்களில் 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 7 பேரும் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தலைமறைவாக உள்ள சிராஜ் என்பவர் உள்பட மேலும் 7 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பிடிக்க 5 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக் கின்றன. அவர்கள் தலைமறைவு நபர்களை பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில் சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் கல்வி அதிகாரி சைனுதீன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்தார்.

    சிறுவன் பாலியல் வன்கொடுமை வழக்கில் கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது.
    • அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    திருவனந்தபுரம்:

    செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில், செல்போனில் பயன்படுத்தக்கூடிய ஏராளமான செயலிகளும் வந்துவிட்டன. அவற்றில் "ஆபாச சாட்டிங்" தொடர்பான செயலிகளும் ஏராளமாக இருக்கின்றன.

    அதுபோன்ற செயலியை பயன்படுத்தி பணத்தை இழப்பவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்த நிலையில் கேரளாவில் "டேட்டிங் செயலி" பயன்படுத்திய சிறுவன் ஒருவன், பல நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நடந்திருக்கிறது.

    14 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன், சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனுக்கு "டேட்டிங் செயலி" மூலமாக சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த நபர்கள், சிறுவனை வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக பலரால் சிறுவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறான். சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கண்டுபிடிக்க 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

    அவர்கள் விசாரணை நடத்தியதில் சிறுவனை காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, மேலும் பலரால் சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    இதனால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டேட்டிங் செயலியை பயன்படுத்திய சிறுவன், பலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    • சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் கிராமம் வ.உ.சி நகரில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் கவுஷிக் (வயது 12) ராமநத்தம் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவன் பள்ளிக்கு செல்ல வீட்டில் ஷூ அணிந்தார்.

    அப்போது அதில் இருந்த சிறிய பாம்பு கடித்தது. இதில் மாணவன் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடி காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிலர் தங்கள் தாய்மொழியான தமிழை பேசுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை.
    • ஒழுங்கான்னா எப்படி பேசுவாங்க... என்று கேட்கிறான்.

    தாய்மொழியில் கல்வி கற்பது ஒருவரின் சிந்தனைத் திறனை வளர்க்க உதவுகிறது. ஏனெனில் ஒருவரின் சிந்தனை தாய்மொழியில் தான் ஆழமாக வேரூன்றுகிறது. தாய்மொழியில் பேசுவது ஒருவருடன் எளிதாக தொடர்பு கொள்ள உதவுகிறது. அது ஒருவரை ஒரு சமூகத்துடன் இணைக்கிறது.

    தற்போதுள்ள காலகட்டத்தில் தனியார் பள்ளிகளின் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியாக இல்லாவிட்டால், ஆங்கில வழிக் கல்வியானது கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளில் முதன்மை மொழியாக பயன்படுத்தப்படுகிறது.

    இத்தகைய சூழ்நிலையில் சிலர் தங்கள் தாய்மொழியான தமிழை பேசுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை. அப்படி விரும்பாததற்கான காரணங்கள் பல உள்ளன. சமூக அழுத்தங்கள், ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, அல்லது பிற மொழிகளில் பேசுவதால் கிடைக்கும் சமூக அந்தஸ்து போன்ற காரணங்களால் சிலர் தமிழைப் பேசுவதை தவிர்க்கிறார்கள்.

    இந்நிலையில் தமிழ்ல்ல பேசும்மா என்று ஒரு சிறுவன் அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

    அந்த வீடியோவில், சிறுவனிடம் அவரது அம்மா..

    whats your problem என்கிறார்.

    சிறுவன், ஒழுங்கா பேசும்மா... தமிழ்ல்ல பேசும்மா... என்று அழுகிறான்.

    அதற்கு அவனது அம்மா தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசுகிறார்.

    ஒழுங்கான்னா எப்படி பேசுவாங்க... என்று கேட்கிறார்.

    இப்படி... இப்படி பேசுமா... தமிழ்ல்ல பேசும்மா என்று சொல்கிறான்.

    English-ல பேசுறது புரியவே புரியலை என்று சொல்கிறான்.

    உங்க school-ல மேம் எப்படி பேசுறாங்க... என்று கேட்கிறார்.

    English-ல பேசுறாங்க என்று சிறுவன் சொல்ல...

    நானும் அதான் English-ல பேசுறேன் என்று சொல்கிறார்.

    நீ மட்டும் இப்படியே பேசு என்கிறான்.

    மேம்.. பேசும்போது English புரியுதா? என்று கேட்கிறார்.

    நான் சொல்றதை கேளும்மா... தமிழ்ல்ல பேசும்மா என்று அந்த சிறுவன் தலையில் அடித்துக்கொண்டு அழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • 10 ஆம் வகுப்பு மாணவரான விஜய் கார்த்திக், தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
    • விஜய் கார்த்திக் ஜாலியாக பேட்மிண்டன் விளையாடியுள்ளார்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உறவினர் வீட்டில் பேட்மிண்டன் விளையாடி கொண்டிருக்கும் போது, டிரான்ஸ்ஃபார்மரின் மீது விழுந்த ஷட்டில் கார்க்கை எடுக்க முயற்சித்த போது 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவரான விஜய் கார்த்திக், தனது பெற்றோர் உடன் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 

    • சோஹைல் கான் என்பவர் தனது வளர்ப்பு நாய் பிட் புல்லுடன் ஆட்டோவுக்குள் ஏறினார்.
    • சிறுவன் ஹம்சா மட்டும் சோஹையிலிடம் மாட்டிக் கொண்டான்.

    மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நின்றிருந்த ஆட்டோவில் 11 வயது சிறுவன் ஹம்சா தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டி ருந்தான்.

    அப்போது சோஹைல் கான் என்பவர் தனது வளர்ப்பு நாய் பிட் புல்லுடன் ஆட்டோவுக்குள் ஏறினார். நாயை கண்டதும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தப்பித்து ஓட சிறுவன் ஹம்சா மட்டும் சோஹையிலிடம் மாட்டிக் கொண்டான்.

    முதலில் நாயோடு விளையாட வற்புறுத்திய அந்த நபர் பின்பு அந்த நாயை அவிழ்த்துவிட்டார். நாய் அவனை கடிக்க தொடங்கியது. ஆட்டோவிலிருந்து இறங்கி ஓடிய அந்த சிறுவனை நாய் துரத்திச் சென்று பல இடங்களில் கடித்தது. இதில் அந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த யாரும் தட்டிக் கேட்கவில்லை. நாயை அழைத்து வந்தவரும் நாய் சிறுவனை கடிப்பதை பார்த்து சிரித்துக் கொண்டி ருந்தார்.

    பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை சோஹைல் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படகின் முன்பு அமர்ந்து சிறுவன் திகா சிரமமின்றி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • சிறுவனுக்கு உதவித் தொகையாக ரூ. 20 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தோனேசிய நாட்டின் ரியாவ் மாகாணத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய படகுப் பந்தயத்தில் படகின் முன்பு அமர்ந்து சிறுவன் திகா சிரமமின்றி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், படகில் நடனமாடி கவனம்பெற்ற 11 வயது சிறுவன் ரியாவ் மாகாணத்தின் சுற்றுலாத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சுற்றுலாத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரய்யான் அர்கன் திகா என்ற சிறுவனுக்கு உதவித் தொகையாக ரூ. 20 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    • 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் காளியப்பன், குமார் ஆகியோர் மீது மோதியது.
    • இந்த விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி ராமர் கோவில் பஸ் நிறுத்தம் அடுத்த திண்டில் வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (47). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வண்ணாத்திப்பட்டி ஊருக்கு நடுவே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.

    அப்போது அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவன் அங்கு டிராக்டரை ஓட்டி வந்தான். இந்த நிலையில் சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் காளியப்பன், குமார் ஆகியோர் மீது மோதியது.

    இந்த விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குமாருக்கு இடது கால் முறிந்து படுகாயம் அடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குமார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் டிராக்டர் மோதி இறந்த காளியப்பன் சாவிற்கு காரணமான சிறுவனை கைது செய்ய கோரி அஞ்செட்டி-தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் காளியப்பனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் விபத்திற்கு காரணமான சிறுவன், சிறுவனின் தந்தை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சிறுவன் ஆசிரியையுடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.
    • அங்கிருந்து இருவரும் ஜெய்ப்பூருக்குச் சென்று இரண்டு இரவுகள் ஒரு ஹோட்டலில் தங்கினர்.

    பதினொரு வயது சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை செய்ததற்காகக் குஜராத் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

    சிறுவன் காணாமல் போனது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவன் ஆசிரியையுடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.

    மூன்று நாள் தேடுதலுக்குப் பிறகு, குஜராத்-ராஜஸ்தான் எல்லைக்கு அருகில் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

    விசாரணையின்படி, ஏப்ரல் 25 ஆம் தேதி, ஆசிரியை மான்சி சிறுவனுடன் சூரத்திலிருந்து புறப்பட்டு பேருந்தில் அகமதாபாத்தையும், பின்னர் வதோதரா வழியாக டெல்லியையும் அடைந்தார்.

    அங்கிருந்து இருவரும் ஜெய்ப்பூருக்குச் சென்று இரண்டு இரவுகள் ஒரு ஹோட்டலில் தங்கினர். தற்போது சிறுவன் மீட்கப்பட்டு ஆசிரியை மான்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

    போலீசார் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 127 இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார். 

    • காயமடைந்த சிறுவன், சிகிச்சைக்காக பத்தனாபுரததில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.
    • போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனின் தந்தை வின்சு குமாரை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் பதானபுரம் பகுதியை சேர்ந்தவர் வின்சு குமார். இவருக்கு 11 வயதில் மகன் இருக்கிறான். சம்பவத்தன்று அவன் தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளான். விளையாடிவிட்டு வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்திருக்கிறான்.

    இதனால் ஆத்திரமடைந்த வின்சுகுமார், நண்பர்களுடன் விளையாடச் சென்றது குறித்து கேட்டு தனது மகனை கண்டித்துள்ளார். மேலும் கம்பியை சூடாக்கி, மகனின் தொடை மற்றும் கால்களில் சூடு வைத்தார். இதில் காயமடைந்த சிறுவன், சிகிச்சைக்காக பத்தனாபுரததில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

    இதுகுறித்து சிறுவனின் தாய், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவனது தாயிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனின் தந்தை வின்சு குமாரை கைது செய்தனர்.

    • கார் சாலையில் நடந்து சென்ற முதியவர் உட்பட இருவர் மீது மோதியதுடன் அங்கு சாலையோரம் நின்ற ஆட்டோ மற்றும் மரத்தின் மீது மோதி நின்றது.
    • சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த தந்தை மீது 3 பிரிவில் வழக்குப்பதிந்துள்ள காவல்துறை அவரை சிறையில் அடைத்தனர்.

    வடபழனி:

    வடபழனியை சேர்ந்தவர் சியாம் (வயது 45). இவர் கடந்த 8-ந்தேதி இரவு தனது 14 வயது மகனிடம் கார் சாவியை கொடுத்து அனுப்பி தெருவில் நிறுத்தி வைத்துள்ள கார் மீது கவரை மூடி விட்டு வருமாறு அனுப்பி உள்ளார்.

    அந்த சிறுவன் காரை ஓட்டும் ஆசையில் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு குமரன் நகர் பிரதான சாலை வழியாக காரில் வலம் வந்துள்ளான். அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் நடந்து சென்ற முதியவர் உட்பட இருவர் மீது மோதியதுடன் அங்கு சாலையோரம் நின்ற ஆட்டோ மற்றும் மரத்தின் மீது மோதி நின்றது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    விசாரணையில் காயமடைந்தவர்கள் சாலிகிராமம், தனலட்சுமி காலனி, வெங்கடேஸ்வரா தெருவை சேர்ந்த மகாலிங்கம் (69), கங்காதரன் (49) என தெரியவந்தது. இதையடுத்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, சிறுவனின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிறுவன் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில் படுகாயம் அடைந்த முதியவர் உயிரிழந்தார்.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனையடுத்து சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த தந்தை மீது 3 பிரிவில் வழக்குப்பதிந்துள்ள காவல்துறை அவரை சிறையில் அடைத்தனர்.

    ×