search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archery"

    • தென்கொரியா 2049 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.
    • பிரான்ஸ் 2025 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தது.

    பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டிக்கான முதன்மை சுற்றுகள் 30-ந்தேதி தொடங்குகின்றன. இன்று தரவரிசை பெறுவதற்கான சுற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 72 அம்புகள் எய்த வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் தரவரிசை கொடுக்கப்படும்.

    தனிநபர் புள்ளிகள் அணிகள் மற்றும் கலப்பு அணிகளுக்கு அப்படியே சேர்க்கப்படும். அதன்படி இன்று மதியம் பெண்களுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் (இந்திய அணி) 4-வது இடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    இந்த நிலையில் தற்போது ஆண்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்தியாவின் திராஜ் பொம்மாதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திராஜ் பொம்மாதேவரா 681 புள்ளிகளும், தருண்தீப் ராய் 674 புள்ளிகளும், பிரவீன் ரமேஷ் ஜாதவ் 658 புள்ளிகளும் பெற்றனர். மொத்தமாக 2013 புள்ளிகள் பெற்று அணிகள் பிரிவில் 3-வது இடம் பிடித்தனர். இதனால் ஆண்கள் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். மீதமுள்ள 8 அணிகளில் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். தென்கொரியா 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன.

    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
    • வில்வித்தை மகளிர் பிரிவுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான சுற்று நடந்தது.

    பாரிஸ்:

    பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில், வில்வித்தை மகளிர் பிரிவுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான சுற்று இன்று நடைபெற்றது. இதில் 72 அம்புகள் எய்யப்பட்டன.

    இதில் தென் கொரியா 2016 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், சீனா 1996 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், மெக்சிகோ 1986 புள்ளிகளுடன் 3வது இடத்தையும், இந்தியா 1983 புள்ளிகளுடன் 4வது இடத்தையும் பிடித்தன.

    இதன்மூலம் வில்வித்தை பிரிவில் இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

    • குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் கலாசாரம் இன்றளவும் உள்ளது.
    • வில்லுப்பாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று.

    நெல்லை:

    தமிழகத்தில் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை மீறி பல மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத குழந்தைகள் சிலருக்கு குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் கலாசாரம் இன்றளவும் உள்ளது.

    அந்த வகையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவுக்கு உட்பட்ட பாப்பாக்குடி பகுதியில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    எனவே அந்த பகுதியில் உள்ள சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து குழந்தை திருமணங்களை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    இதுபோன்ற விஷயங்களில் அதிகாரிகள் வழக்கமாக பள்ளி மாணவர்களை கொண்டும், தன்னார்வலர்களை கொண்டும் விழிப்புணர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.

    ஆனால் சற்று வித்தியாசமாக குழந்தை திருமணங்களை தடுக்க நெல்லையை சேர்ந்த அரசு பெண் அதிகாரி ஒருவர் தானே களத்தில் இறங்கி கிராமிய கலையான வில்லுப்பாட்டு மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

    நெல்லையை அடுத்த தச்சநல்லூரை சேர்ந்தவர் கோமதி கிருஷ்ணமூர்த்தி. இவர் குரூப்-4 தேர்வு மூலம் தமிழக அரசுத்துறையில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த பதவி உயர்வு பெற்று தற்போது நெல்லை மாவட்டம் முக்கூடல் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வருவாய் கட்டுப்பாட்டில் தான் பாப்பாக்குடி கிராமம் அமைந்துள்ளது.

    அங்கு அதிக குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை அறிந்து வேதனை அடைந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார். இதற்காக அவரே களத்தில் இறங்கி கிராமிய கலையான வில்லுபாட்டை பாடி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு சென்றார்.

    இந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பள்ளிகளில் வருவாய் ஆய்வாளர் கோமதி கிருஷ்ணமூர்த்தி வில்லுப்பாட்டு மூலம் மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

    வில்லுப்பாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று. அந்த கலை நயத்தை சற்று கூட குறைவில்லாமல் அதிகாரியாக இருந்தாலும் வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்ற கலைஞரை போன்று கோமதி கிருஷ்ணமூர்த்தி வில்லு பாடகியாகவே மாறி இருப்பார்.

    இதற்காக பிரத்யேகமாக வில்லு கலைக்கு தேவைப்படும் மண்பானை, வில்லு வீசுகோல் ஆகியவற்றை அவரே தயார் செய்து வைத்துள்ளார். அவருடன் சேர்ந்து சமூக நலத்துறையை சேர்ந்த சமூகநலத்துறை அலுவலரான பத்மா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து வில்லுப்பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் போதை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அன்றைய தினம் கோமதி கிருஷ்ணமூர்த்தி முக்கூடலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தானே வேடமிட்டு நாடகம் ஒன்றை நடத்தி இருந்தார். அதில் எமதர்மராஜா வேடம் போட்டு மது, கஞ்சா போன்ற போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து தத்ரூபமாக நடித்துக் காட்டி இருந்தார்.

    இது குறித்து கோமதி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, `பாப்பாக்குடி பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறுவதாக அதை தடுக்க வேண்டும் என நாங்கள் வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    பொதுவாக நான் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் இதுபோன்ற பொது மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் வைத்திருப்பேன். எனவே கிராமிய கலையான வில்லுப்பாட்டு மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் எளிதில் புரியும் என்பதால் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறேன் என்று கூறினார்.

    • எஸ்டோனியா அணியை 232-229 என வீழ்த்தி தங்கம் வென்றது.
    • ஏற்கனவே 2 முறை தங்கம் வென்ற நிலையில், 3-வது முறையாக தங்கம் வென்றது.

    துருக்கி:

    துருக்கியில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-3) நடைபெற்றது. இதில் காம்பவுண்ட் பிரிவில் 3 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி எஸ்டோனியா அணியை 232-229 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

    உலகின் நம்பர் ஒன் காம்பவுண்ட் பிரிவு பெண்கள் அணியாக திகழும் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

    ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி உலகக் கோப்பை ஸ்டேஜ்-1 மற்றும் ஸ்டேஜ் 2 பிரிவுகளிலும் தங்கம் வென்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பாரிசில் நடந்த போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தனர்.

    • முதல் இரண்டு ரவுண்டில் இந்திய வீராங்கனைகள் அதிக புள்ளிகள் சேர்த்தனர்.
    • இதனால் 5-2 என உக்ரைன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

    வில்வித்தை உலகக் கோப்பை துருக்கி நாட்டின் அன்டால்யா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்கள் அணி (தீபிகா, பஜன், அங்கிதா) காலிறுதியில் ரிகர்வ் பிரிவில் உக்ரைன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய பெண்கள் அணி 5-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    முதல் ரவுண்டில் இந்திய வீராங்கனைகள் 53 புள்ளிகளும், உக்ரைன் வீராங்கனைகள் 52 புள்ளிகளும் பெற்றனர்.

    2-வது சுற்றில் இந்திய வீராங்கனைகள் 53 புள்ளிகளும், உக்ரைன் வீராங்கனைகள் 54 புள்ளிகளும் பெற்றனர்.

    3-வது சுற்றில் இந்திய வீராங்கனைகள் 57 புள்ளிகள் பெற்றனர். உக்ரைன் வீராங்கனைகள் 54 புள்ளிகள் பெற்றனர்.

    4-வது சுற்றில் இந்திய வீராங்கனைகளும், உக்ரைன் வீராங்கனைகளும் தலா 53 புள்ளிகள் பெற்றனர்.

    ஒரு சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற அணிக்கு 2 மார்க் வழங்கப்படும். சமநிலை பெற்றால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு மார்க் வழங்கப்படும். அதன் அடிப்படையில் இந்திய வீராங்கனைகள் 5-3 என வெற்றி பெற்றனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் ஒரு வீராங்கனை இரண்டு முறை என மூன்று வீராங்கனைகள் ஆறு அம்புகளை எய்த வேண்டும். வட்டத்தின் மையத்தை அம்பு தாக்கினால் 10 புள்ளிகள் வழங்கப்படும்.

    ஆண்கள் அணி நெதர்லாந்திடம் 1-5 என தோல்வியடைந்து வெளியேறியது.

    • துருக்கி அணியை 232-226 என வீழ்த்தி தங்கம் வென்றது.
    • ஏற்கனவே இரண்டு முறை தங்கம் வென்ற நிலையில், தொடர்ந்து 3-வது முறையாக தற்போது தங்கம் வென்றுள்ளது.

    தென்கொரியாவில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-2) நடைபெற்று வருகிறது. இதில் மூன்று பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி துருக்கி அணியை 232-226 என புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

    உலகின் நம்பர் ஒன் காம்பவுண்ட் பிரிவு பெண்கள் அணியாக திகழும் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஆகியோர்தான் இந்த தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

    ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்டேஜ்-1ல் தங்கம் வென்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பாரிஸ் நகரில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தனர்.

    அமெரிக்காவில் நடைபெறும் கலப்பு அணியில் ஜோதி, பிரியான்ஷ் தங்கத்திற்கான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆண்களுக்கான காம்பவுண்ட் பிரிவில் பிரதாமேஷ் புஜ் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

    • மாநில அளவிலான போட்டியில் விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.
    • ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சி சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிச்சாமி. கூலி தொழிலாளி.

    இவரது மனைவி செம்மலர்.

    இந்த தம்பதிக்கு அஜிஷா என்ற மகள் உள்ளார்.

    இவர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு தமிழ் இளங்கலை படித்து வருகிறார்.

    அஜிஷா சிறு வயது முதலே வில்வித்தை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பமாக இருந்தாலும் தன் மகள் ஆசைபட்டால் என்பதற்காக பக்கிரிச்சாமி அஜிதாவை திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் கராத்தே ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் சேர்த்துள்ளார்.

    மாணவியும் சிறப்பாக பயிற்சி பெற்று ஒன்றிய, மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி பதக்கம் வென்றுளார்.

    மேலும், இவர் மாநில அளவிலான வில்வித்தை போட்டிக்கு தேர்வாகி சிறப்பாக விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.

    தொடர்ந்து, இவர் சர்வதேச விளையாட்டு போட்டிக்கு தயாராகி உள்ளார்.

    இந்நிலையில், போட்டியில் விளையாடு வதற்கு வில்-அம்பு கருவி வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    ஆனால் இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்திற்கு மேல் உள்ளது. ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

    எனவே, தமிழக அரசு வில்-அம்பு வாங்குவதற்கு நிதி உதவி அளித்தால் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

    தனது கனவு நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துைற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

    • இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • டை பிரேக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

    பாரீஸ்:

    பிரான்சில் நடைபெற்று வரும் உலக கோப்பை 4-ம் நிலை வில்வித்தை போட்டியின் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதனால் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியானது.

    ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஒஜாஸ் தியோடெல், பிரத மேஷ் ஜவகர், அபிஷேக் வர்மா ஆகியோர் அடங்கிய அணி தென் கொரியாவை எதிர் கொண்டது. இந்த ஆட்டம் 235-235 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. டை பிரேக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சந்திக்கிறது.

    மகளிர் அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத்கபூர் ஆகியோர் அடங்கிய அணி 234-233 என்ற கணக்கில் இங்கி லாந்தை தோற்கடித் தது. இறுதிப் போட்டியில் மெக்சிகோவுடன் மோதுகிறது.

    • இறுதிச்சுற்றில் பிரியன்ஷ், அல்ஜாஷ் பிரென்க் என்ற வீரரை வீழ்த்தினார்.
    • இந்தியா இதுவரை 5 தங்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றுள்ளது.

    லிமரிக்:

    அயர்லாந்தில் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், 21 வயதிற்குட்பட்டோருக்கான காம்பவுண்டு வில்வித்தை போட்டியில், இந்தியாவின் பிரியன்ஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இவர் இறுதிச்சுற்றில் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த அல்ஜாஷ் பிரென்க் என்ற வீரரை 147-141 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

    முன்னதாக 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி காம்பவுண்டு பிரிவில் அமெரிக்காவின் லீன் டிரேக்கை 142-136 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

    இதன்மூலம்  இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 தங்கம் அடங்கும்

    • பாரம்பரிய வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு பாடல்கள் பாடினார்.
    • பள்ளி மாணவர்களுக்கு மரங்கள், காடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் சர்வதேச வனநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கொக்கலாடி ஊராட்சி தலைவர் வசந்த் தலைமை தாங்கினார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் அருள் முன்னிலை வகித்தார். நீர்நிலை பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ஐயப்பன், ஹபிபுல்லா, அம்பிகாபதி, சிவகுமார் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு மரங்கள், காடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

    இதில் மாணவர்கள் வனங்களை காப்பது குறித்து பாரம்பரிய வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு பாடல்கள் பாடினார். பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முடிவில் ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.

    • அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.
    • தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.

    சீர்காழி:

    தஞ்சாவூர் 39 வார்டு பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் கைலாஷ்.

    இவர் அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.

    இந்த சாதனையின் மூலம் தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.

    இதனை அறிந்த சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், சிறுவனை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று பாராட்டு பெற வைப்பதாக அப்போது தெரிவித்தார்.

    • செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகள் குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர்.
    • இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி ரஸினா ரீஜா 1-ம் இடத்தையும், 8-ம் வகுப்பு மாணவன் முஹம்மது ஜமால் ஜக்கரியா 1-ம் இடத்தையும், 7-ம் வகுப்பு மாணவன் ஹமீத் அல்தைப் 2-ம் இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவி ஹர்ஷினி 3-ம் இடத்தையும் பெற்று பதக்கம் வென்றனர்

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகள் குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர். பாரத் மாண்டிசேரி, இசக்கி வித்தியாஷ்ரம், வேல்ஸ் வித்யாலயா, செய்யது ரெசிடென்சியல் போன்ற பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி ரஸினா ரீஜா 1-ம் இடத்தையும், 8-ம் வகுப்பு மாணவன் முஹம்மது ஜமால் ஜக்கரியா 1-ம் இடத்தையும், 7-ம் வகுப்பு மாணவன் ஹமீத் அல்தைப் 2-ம் இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவி ஹர்ஷினி 3-ம் இடத்தையும் பெற்று பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் வில்வித்தை பயிற்சியாளர் ஜாகிர் உசேன் பாராட்டினார். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ×