என் மலர்
நீங்கள் தேடியது "Teachers"
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தார்
- கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம்
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினரின் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினரின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமஊதிய போராட்டம் சார்ந்து இன்று (31-01-2026) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
அதில் மூன்று நபர்கள் ஊதிய குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றதின் அடிப்படையிலும் தமது அரசு மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நல்லதொரு முடிவு ஏற்படும் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம் என்று உறுதி அளிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகை, ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.
- இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 36வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது போல, அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டிற்கான ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என சென்னையின் பல்வேறு கல்லூரிகளை சேரந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையின் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கல்லூரி வளாகங்களுக்கு உள்ளேயே இன்றுடன் ஏழாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் இன்று கண்ப
தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் ஊதியம், நிலுவைத்தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு இந்த ஆணையின்படி ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகை, ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் சங்க பொறுப்பாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர், ஜனவரி மாத ஊதியத்தில் சேர்க்கப்படும் என உறுதி அளித்த நிலையில் ஜனவரி மாதம் 20-ம் தேதியைக் கடந்த பின்பும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறாத நிலையில், தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றுடன் 36வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மறுபுறம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக தரப்படாத சம்பளத்தை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு தரவேண்டும் என்பது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
- அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு 2021ம் ஆண்டு ஆணையின்படி ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது.
- கடந்த டிசம்பர் மாதம் சங்க பொறுப்பாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர், ஜனவரி மாத ஊதியத்தில் நிலுவைத்தொகை சேர்க்கப்படும் என உறுதி அளித்தார்.
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது போல, அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டிற்கான ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என சென்னையின் பல்வேறு கல்லூரிகளை சேரந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் புதுகல்லூரி, மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் கல்லூரி வளாகங்களுக்கு உள்ளேயே போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் ஊதியம், நிலுவைத்தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு இந்த ஆணையின்படி ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகை, ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் சங்க பொறுப்பாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர், ஜனவரி மாத ஊதியத்தில் சேர்க்கப்படும் என உறுதி அளித்த நிலையில் ஜனவரி மாதம் 20-ம் தேதியைக் கடந்த பின்பும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறாத நிலையில், தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர்.
மறுபுறம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக தரப்படாத சம்பளத்தை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு தரவேண்டும் என்பது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
- டெல்லி அரசின் இந்த உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
- உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன
தேசிய தலைநகர் முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக கல்வி நிறுவனங்களில் இருந்து நோடல் அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் கல்வி இயக்குநரகம் (DoE) அறிவுறுத்தியுள்ளது.
பயிற்சியைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சமர்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி அரசின் இந்த உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விலங்கு நல ஆர்வலர்கள், மற்றும் விலங்குகள் நலன் துறையைச் சார்ந்தவர்களுக்கு இந்தப் பணியை ஒதுக்காமல் தங்களுக்கு ஒதுக்குவது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கல்வி சாராத பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்துவது மாணவர்களின் கல்வியை பாதித்து, ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் தெருநாய் கணக்கெடுப்புக்கு ஆசிரியர்களை நியமிக்கும் இதே போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது நாய் கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
- பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இன்று முதல் இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல், கல்வியியல், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இன்று முதல் ஜனவரி 5-ந்தேதி வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.dcetransfer.in மற்றும் www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியிலும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.tndotetransfer.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
- அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊழியம், சமவேலை சம ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை தொடர்பாக அமைச்சர்களுடன் அரசு ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
- தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.
- சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது.
- சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
சென்னை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருச்சியில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் நவம்பர் 18-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்கிட வேண்டும். 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை வழங்க வேண்டும்.
2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக் காலத்தை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
1.4.2003-க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது, அது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும் என்றும் வேலை செய்யாத நாளுக்கு ஊதியம் இல்லை எனவும் போராட்ட விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்து உள்ளது.
ஆனாலும் அதனை மீறி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களி லும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் இப்போராட் டம் நடந்தது.
சென்னையில் தலைமை செயலகம், எழிலகம், குறளகம், வணிக வரி அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வந்தனர். இதனால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல ஆசிரியர்களும் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்செயல் விடுப்பு கடிதம் கொடுக்காமல் பெரும்பாலானவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழிலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், சுரேஷ், காந்திராஜன் ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மெரினா காமராஜர் சாலை நுழைவு பகுதியில் முன் எச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் தலைமை செயலக சங்க தலைவருமான வெங்கடேசன் கூறியதாவது:-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையில் எந்த பயனும் இல்லை. இன்றைய போராட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.
இதனால் அரசு அலுவலக பணிகள், பள்ளிகளில் கற்றல் பணி பாதிக்கக்கூடும். எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 55% ஆக இருந்த அகவிலைப்படியை 58% ஆக உயர்த்தி உத்தரவிட்டார்.
- அகவிலைப்படி உயர்வால் ஆண்டுக்கு ரூ.1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
சென்னை:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 55% ஆக இருந்த அகவிலைப்படியை 58% ஆக உயர்த்தி உத்தரவிட்டார்.
ஜூலை 1 முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வால் ஆண்டுக்கு ரூ.1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
- நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடி வருகின்றனர்.
- ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நூற்றாண்டு கால வரலாறு கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பிரச்சினைகளை உடனே தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும். 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை வழங்குதல், முனைவர் பட்ட ஊக்கத் தொகைகளை வழங்குதல், ஆசிரியர்களுக்கான (சி.ஏ.எஸ்.) பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்கல், அயற்பணியிட ஆசிரியர்களை உள்ளெடுப்பு செய்தல் உள்ளிட்ட ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்காக அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, போராடி பெற்ற சட்டப்படியான உரிமைகளும் கூட ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இவைகள் அவர்களது உரிமைக்கு எதிரானது.
நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடி வருகின்றனர். ஆகவே ஆசிரியர்கள், ஊழியர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக் கழக நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
- மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 243 புதிய பள்ளிக்கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக்கட்டங்களை அவர் திறந்து வைத்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாக 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது:
* மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்கு வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துகள்.
* மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கே பாடமெடுத்திருக்கிறார் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி.
* ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவர் அல்ல. ஆசிரியர் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள்.
* மாணவர்களின் சிந்தனையை தூண்டி அறிவை மேம்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.
* மாணவர்களுக்கு சரியானதை ஆசிரியர்கள் தான் வழிகாட்ட வேண்டும்.
* சமூகத்திற்கே ஒளி ஏற்றி வைக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.
* பாட புத்தகத்தை கடந்து சமூக ஒழுக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
* மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்துகொள்ள வேண்டும்.
* மாணவர்களுக்கு உடல்நலமும், மனநலமும் முக்கியம்.
* மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
* மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.
* பெற்றோர்களை விட ஆசிரியர்கள் மத்தியில்தான் மாணவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
* தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நமது பெருமையின் அடையாளமாக திகழ்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
- மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் ‘மகிழ் முற்றம்' குழுத்திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.
சென்னை:
பள்ளிகளில் அமைதியான சூழலை ஏற்படுத்தவும், மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும் மேற்கொள்ளப்பட வேண்டிய சில வழிமுறைகள் குறித்து, பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
சாதி அல்லது வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடையே ஏற்படுத்த முயற்சிப்பதாக ஆசிரியர் மீது பெறப்படும் புகார்கள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் உடனடியாக விசாரணை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்.
மாணவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கக்கூடிய கல்வி உதவித் தொகை விவரங்கள் ரகசியமாக பராமரிக்கப்படுவது மிக மிக அவசியம். இந்த விவரங்களை பொதுவெளியில் தெரியும் வகையில் காட்சிப்படுத்தக்கூடாது. மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் 'மகிழ் முற்றம்' குழுத்திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தெரியவந்தால், அதை தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் திருக்குறள் அறநெறி வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். 'மாணவர் மனசு' புகார் பெட்டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து, அதில் உள்ள தபால்களின் எண்ணிக்கையை பதிவு செய்து, அதுகுறித்து விசாரணை செய்து மாவட்டக்கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






