என் மலர்

    நீங்கள் தேடியது "survey"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் இறந்துள்ளது.
    • புலிக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஒரு கடமானின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி வனக்கோட்டத்தில் ஊட்டி வனசரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள சின்னகுன்னூரில் தாய்புலி ஒன்று 4 குட்டிகளுடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

    வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 குட்டிபுலிகள் சடலமாகவும், ஒரு குட்டிப்புலி உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்கப்பட்டது. ஆனால் அந்த புலியும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.

    மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் இறந்துள்ளது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இறந்த குட்டி புலிகளின் தாய் புலியின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அதனை தொடர்ந்து தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாளில் 4 வயதான புலிகள், 6 குட்டிப்புலிகள் என 10 புலிகள் இறந்துள்ளன. ஆகஸ்டு 16-ந் தேதி சீகூர் வனப்பகுதியில் நீரோடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன. அதனை ஆய்வு செய்தபோது அவை தாய்புலியால் கைவிடப்பட்டது தெரியவந்தது.

    ஆகஸ்டு 17-ந் தேதி நடுவட்டத்தில் ஒரு புலி இறந்து கிடந்தது. அந்த புலியின் உடலில் உள்ள காயங்களை ஆய்வு செய்த போது வேறு ஒரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது..

    இதேபோல் புலிகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆகஸ்டு 31-ல் ஒரு புலி இறந்தது.

    தொடர்ந்து கடந்த 9-ந் தேதி அவலாஞ்சி உபரி நீர் ஓடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன.

    மாட்டு மாமிசத்தில் விஷம் வைத்து இந்த புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உடல் உறுப்புகள் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தி சேகர் என்பவரை கைது செய்துள்ளோம்.

    கடந்த 14-ந் தேதி சின்னக்குன்னூரில் புலிக்குட்டிகள் சுற்றுவதாக வந்த தகவலின் பேரில் புலிகளை கண்டுபிடிக்கும் வல்லுநர்களை அனுப்பி தேடும் பணி நடந்தது.

    அடர்ந்த வனப்பகுதியில் 3 புலிக்குட்டிகள் இறந்த நிலையிலும், ஒரு புலிக்குட்டி உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்கப்பட்டது.

    அதனை மீட்டு சிகிச்சை அளித்த போது அந்த குட்டிபுலியும் இறந்துவிட்டது.

    இறந்த குட்டிகளை ஆய்வு செய்த போது, 4 குட்டிகளும் உணவின்றி இறந்தது தெரியவந்தது. இவற்றின் உடல் உறுப்பின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புலிக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஒரு கடமானின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதன் மாதிரியும் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். மேலும் குட்டிகளின் தாய்புலியை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும்.

    மேலும் கோரகுந்தா, குந்தா, நடுவட்டம் உள்ளிட்ட 6 சரகங்களில் முகாம்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும். அத்துடன் அங்கு தொடர் கண்காணிப்புக்காக வேட்டை தடுப்பு காவலர்களும் நியமிக்கப்படுவர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மாநகராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பாதாள சாக்கடை திட்டப் பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் மதுரை, நெல்லை, தூத்துக் குடி, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகள். நகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு முன்னிலை வகித்தார். மதுரை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டப் பணிகள், அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகள், விரிவாக் கப்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப் பட்டது.

    மேலும் நெல்லை, நாகர் கோவில், தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிகளில் குடிநீர் விநியோக பணிகள், முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப் பட்டது.

    முன்னதாக அவனியா புரம் வெள்ளைக்கல்லில் செயல்பட்டு வரும் குப்பை சேகரிப்பு மையத்தில் அரசு முதன்மை செயலர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஐராவத நல்லூர் பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். பெரியார் பஸ் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக பணிகளையும் பார்வையிட்டார்.

    இந்த கூட்டத்தில் மாநக ராட்சி ஆணையாளர்கள் பிரவீன்குமார், (மதுரை), சிவகிருஷ்ணமூர்த்தி, (நெல்லை), ஆனந்தமோகன், (நாகர்கோவில்) தினேஷ் குமார், (தூத்துக்குடி) நக ராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் முஜிபூர் ரகுமான், விஜயலட்சுமி, மதுரை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்தனர்
    • பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, அரியலூர் நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் நகராட்சி துறையினரால் மளிகை கடைகள் மற்றும் ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 32 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் (பிளாஸ்டிக்) 160 கிலோ அளவு 6 கடைகளில் கண்டறியப்பட்டு உடன் பறிமுதல் செய்யப்பட்டது. 6 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டது. காலாவதியான உணவு பொருட்கள், சுமார் 80 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளருக்கு எச்சரிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு, தரம், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
    • பொதுமக்களின் வீடுகளுக்கே சென்றார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தின் உண்மை தன்மை குறித்து கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம், நன்செய், புன்செய் நிலங்களின் விவரம், மின்சார பயன்பாடு, வாகனங்கள் விவரம், பிற ஓய்வூதியங்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். இதேபோன்று மக்கள் நலப்பணியாளர்கள் மூலம் விண்ணப்பங்கள் நேரடி ஆய்வு செய்வதை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு செய்து, அவர்களிடம் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை முறையாக சரிபார்த்து ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். பின்னர் அவர் வெங்கடகிருஷ்ணாபுரம் அங்கன்வாடி மையத்தினையும், கயர்லாபாத் ஊராட்சி அரசு நகரில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அரசு நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3.42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நர்சரி கார்டனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் தொப்பா ஊரணி சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, பரிசல்கல்பாறை பகுதியில், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணியினையும், மேலும் கவிநாடு கிழக்கு ஊராட்சியில், திருமயம் சாலையிலிருந்து கணக்கன்பட்டி வரை செல்லும் 2 கி.மீ. நீளமுள்ள சாலை, முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.83.94 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியினையும் பார்வையிட்டார்.

    இதேபோல திருக்கோகர்ணம் யானையம்மாள் வீதி மற்றும் 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சி பள்ளத்திவயல் மற்றும் கவிநாடுகிழக்கு குமரன்நகர் ஆகிய பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று, விண்ணப்பத்தின் உண்மைத்தன்மை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உள்ளாட்சி அமைப்பினர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ம.தி.மு.க. மாநாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • மாநாடு நடைபெற உள்ள இடத்தை பூமிநாதன் எம்.எல்.ஏ. இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    மதுரை வலையங் குளத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    மாநிலம் முழுவதும் இருந்து திரளான ம.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி வலையங்குளத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை பூமிநாதன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் பொருளாளர் சுருதி ரமேஷ்.பார்வையிட்டடனர். இதில் நிர்வாகிகள் சுப்பையா, கீரைத்துரைபாண்டியன் பாஸ்கரசேதுபதி, பச்சமுத்து. புகழ்முருகன், மாயழகு., அய்யனார். காளிமுத்து முத்துலெ ட்சுமி.. கரு.சுந்தர், அன்னமுகமது, கவுரி மகேஷ், திருப்பரங்குன்றம் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேட்டூர் துணை சுப்பிரண்டு அலுவ லகத்தில் ஆய்வு செய்தார்.
    • மேட்டூர் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    மேட்டூர்:

    சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேட்டூர் துணை சுப்பிரண்டு அலுவ லகத்தில் ஆய்வு செய்தார்.

    மேட்டூர் துணை சுப்பி ரண்டு மரியமுத்து கட்டுப்பாட்டில் இருக்கும் மேச்சேரி போலீஸ் நிலையம், கருமலை கூடல் போலீஸ் நிலையம், மேட்டூர் போலீஸ் நிலையம், கொளத்தூர் போலீஸ் நிலையம், மற்றும் மேட்டூர் பெண்கள் போலீஸ் நிலை யம்,ஆகிய போலீஸ் நிலை யங்களில் உள்ள நிலுவை யில் உள்ள வழக்குகள், ஆவணங்கள் பற்றியும் ஆய்வு செய்தார்.மேட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலவரங்களை பற்றி கேட்ட றிந்தார். மேலும் மேட்டூர் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    பள்ளி மாணவ, மாணவி கள் சிலம்பம் சுற்றி சிறப்பாக வர வேற்றனர். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் கேரம்போர்ட் விளையாடி மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் மாணவ, மாணவி களுக்கு பரிசு வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.அருண்ராய் ஆய்வு செய்தார்.

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.அருண்ராய்  ஆய்வு செய்தார். அரியலூர் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோக மேம்பாட்டுத் திட்டப் பணிகளை பார்வையிட்டு , பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பணிகள் தொடங்கிய நாள், முடிவுறும் நாள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்து, பணிகளை உரிய காலத்துக்குள் முடித்து அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அரியலூர் ஒன்றியம், மேலக்கருப்பூ கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.11.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குமாரசாமி ஏரி தூர் வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் பணியினையும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினையும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினையும் பார்வையிட்ட அவர்,தொடர்ந்து ஜெயங்கொண்டம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் உணவினை வழங்க வேண்டும் எனவும், விடுதிகளின் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக, அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொணட் அவர், அங்கு அனைத்து துறை அலுவலர்களிடம் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பாலமுரளி, வேளாண்மை இணை இயக்குநர்(பொ) பழனிசாமி, நகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெற்றோர்களிடையே தங்களது குழந்தைகளை இடையில் நிறுத்தாமலிருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அங்கன்வாடி பணியாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

    விழுப்புரம்:

    மயிலம் ஒன்றியத்தில் மயிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளான கோயில் அடிவாரம், பிள்ளையார் கோயில் தெரு மற்றும் மயிலாடும் பாறை ஆகிய பகுதிகளில் பள்ளி செல்லாக் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு விழிப்புணர்வு முகாம் வட்டாரக் கல்வி அலுவலர் மதன்குமார், தலைமையில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் குழு மூலம் நடைபெற்றது. பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு கள ஆய்வின்போது அப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடையே தங்களது குழந்தைகளை இடையில் நிறுத்தாமல் குழந்தைகளை பள்ளிக்கு தொடர்ச்சியாக அனுப்பிவைக்க வலியுறுத்தி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மயிலம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் லட்சுமி நரசிம்மன், செந்தில் ராஜா, ஆனந்தி, சுப்பிரமணியன், ஸ்ரீதர், சிவக்குமார், மயிலம் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் , சிறப்புப் பயிற்றுநர் நந்தீஷ்வரி மற்றும் மயிலம் அங்கன்வாடி பணியாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொன்பரப்பி அரசினர் மாணவியர் விடுதியில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட்டார்
    • குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் விடுதிக்கு தனது சொந்த செலவில் ஆழ்குழாய் கிணறு அமைத்துத் தரப்படும் என தெரிவித்தார்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மாணவியர் கோரிக்கையினை ஏற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொன்பரப்பி அரசினர் மாணவியர் விடுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்கள்.

    அப்போது பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவிகள் தங்களது விடுதிக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பழுதடைந்த சுற்றுச்சுவரினை சீரமைத்தல், கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை நிறைவேற்ற கோரி மனு வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் உடனடியாக பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியினை நேரில் சென்று பார்வையிட்டு.

    குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர், மாணவிகளின் கோரிக்கையினை ஏற்று விடுதிக்கு உள்ளே குரங்குகள் வராமல் இருக்க உடனடியாக பாதுகாப்பு வலைகளை அடித்துத்தரவும், பழுதடைந்த சுவர்களை சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் விடுதிக்கு தனது சொந்த செலவில் ஆழ்குழாய் கிணறு அமைத்துத் தரப்படும் என தெரிவித்தார். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு விடுதி மாணவிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print