search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stray dogs"

    • தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வந்தது.

    இந்த நிலையில் காங்கேயம் அடுத்த மறவம்பாளையம் பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட செம்மண்குழி கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் சுமார் 35 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு விவசாயம் மற்றும் ஆடு மேய்த்தல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. வழக்கம்போல் நேற்று ஆடுகளை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடிக்க முயன்றுள்ளது.

    இதில் நாய்களிடமிருந்து தப்பிய செம்மறி ஆடுகள் அங்கிருந்து தெறித்து ஓடிய போது, அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இன்று காலை பொன்னுசாமி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல தோட்டத்திற்கு சென்று பட்டியில் பார்த்தபோது ஆடுகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியபோது கிணற்றுப் பக்கத்திலிருந்து ஆடுகளின் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது 35 ஆடுகளும், கிணற்றுக்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கயிறுகளை கட்டி ஆடுகளை மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரை அதிகமாக குடித்ததால் 16 ஆடுகள் இறந்து விட்டது. இது தொடர்பாக காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த அப்புகுட்டி என்பவர் தோட்டத்தில் வளர்த்த வந்த 3 ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்றது. எனவே தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆக்ராவில் 24 வயது இளைஞர் ஒருவர் நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்டார்.
    • வாலிபரை புதைத்த 4 பேரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 24 வயது இளைஞர் ஒருவர் நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்டார். அதன்பின் தெரு நாய்களால் தோண்டி எடுக்கப்பட்ட வினோதம் நடைபெற்றுள்ளது.

    ஆக்ராவைச் சேர்ந்த வாலிபர் ரூப் கிஷோர் (24). கடந்த மாதம் 18-ம் தேதி அன்று ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்த தன்னை அங்கித், கவுரவ், கரண், ஆகாஷ் என 4 பேர்தாக்கியதாக குற்றம் சாட்டினார்.

    கழுத்தை நெரித்ததில் அவர் இறந்துவிட்டார் எனக்கருதி அவர்களது பண்ணையில் கிஷோரை புதைத்தனர். கிஷோர் புதைக்கப்பட்ட இடத்தை அங்கு சுற்றித் திரிந்த தெருநாய்கள் கூட்டம் தோண்டத் தொடங்கியது.

    அப்போது கிஷோரின் சதையை நாய்கள் கடித்ததில் அவருக்கு திடீரென சுயநினைவு திரும்பியது. இதனால் அங்கிருந்து எழுந்த அவர், அப்பகுதியில் இருந்து வெளியேறினார். உள்ளூர்வாசிகள் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    இதுதொடர்பாக கிஷோரின் தாய் கூறுகையில், 4 பேர் தனது மகனை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர் என குற்றம் சாட்டினார்.

    இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது என்றும், தப்பிச்சென்ற 4 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    நிலத்தகராறு காரணமாக புதைக்கப்பட்ட வாலிபர் ஒருவர், தெருநாய்களால் உயிர் பிழைத்த அதிசயம் அப்பகுதியில் ஆச்சரியத்தை

    ஏற்படுத்தியுள்ளது.

    • மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
    • விசாரணையில் மனிஷாவை தாக்கிய சோனு நாய்களைத் தாக்கியதும் தெரிந்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் ரகுபீர் நகரில் தெரு விலங்குகளை பராமரிக்கும் இளம்பெண் மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

    மனிஷா கிட்டத்தட்ட 150 தெருநாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள கடையில் பணிபுரியும் ஒருவர் அவரை தாக்கினார். இச்சம்பவம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

    மனிஷா இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவத்தை விவரித்தார். அதில், பாதுகாப்பற்ற விலங்குகளுக்கு எதிரான கொடுமையை எடுத்துக் காட்டினார். நாய்களைப் பாதுகாக்க முயன்றபோது தன்னைத் தாக்கியதையும் வெளிப்படுத்தினார். நாங்கள் மோசமாக அடிக்கப் பட்டோம். யாரும் எங்களுக்கு உதவவில்லை, எங்களுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை என தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக, மனிஷாவின் தாயார் சோனு மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் சோனு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மனிஷாவை தாக்கியது சோனு என்பதும், நாய்களை தாக்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தெரு நாய்கள் வலை மூலம் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் தடுப்பூசி.
    • நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் வண்ணம் பூசவும் திட்டம்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 93,000 நாய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    தெரு நாய்கள் வலை மூலம் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் தடுப்பூசிகள் விட முடிவு செய்யப்படுகிறது.

    தடுப்பூசி போடப்பட்டு பின்னர் அதே தெருவில்

    தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் ஒரு பகுதிகளில் வண்ணம் தீட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் தெரு நாய்கள் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தூரத்துகிறது.
    • சிறுவர், சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேருராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக அங்குள்ள சாலையில் சுற்றி திரிந்து வருகிறது. சில நேரம் சாலையின் நடுவே சண்டையிட்டு அவ்வழியாக செல்லும் இருசகக்கர வாகனத்தில் விழுந்து அதில் வருபவர்களை பயமுறுத்துகிறது. மேலும் தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் தெரு நாய்கள் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தூரத்துகிறது. இதில் சிலர் தவறி விழுந்து காயம் அடையும் நிலையும் ஏற்படுகிறது.

    சிறுவர், சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் தெருவில் திரியும் நாய்களை கட்டுப்படுத்திட நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கால்நடை டாக்டர் செல்வமுத்து தெரு நாய்களுக்கும், வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார்.
    • வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உலக ரேபிஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு தெருவோர மற்றும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது.

    கால்நடை டாக்டர் செல்வமுத்து தெரு நாய்களுக்கும், வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார். 60க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்களிடம் தடுப்பு ஊசி பற்றியும் அதன் நன்மைகள் குறித்தும் விளக்கினார்.

    • கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது.
    • முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாய் செல்கின்றன. இதில் வெறி பிடித்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கிறது. கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க் கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது. இவர்கள் திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சுரேசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து திருச்சி தனி யார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களினால் பள்ளி குழந்தைகள், பாதசாரிகள், முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.

    எனவே, திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டுமென திட்டக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாய் செல்கின்றன. இதில் வெறி பிடித்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கிறது. கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது. இவர்கள் திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சுரேசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து திருச்சி தனி யார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களினால் பள்ளி குழந்தைகள், பாதசாரிகள், முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.

    எனவே, திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டுமென திட்டக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரமக்குடியில் உயிருக்கு போராடிய பெண் மான் மீட்கப்பட்டது.
    • தெரு நாய்கள் கடித்ததால் அந்த மான் காயம் அடைந்திருப்பது தெரியவந்தது.

    பரமக்குடி

    பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட 1-வது வார்டு மஞ்சள்பட்டிணம் பகுதியில் அதிகாலை வீடுகளின் அருகே உயிருக்கு போராடி கொண்டிருக்கும் பெண் மானை பார்த்த அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மானை மீட்டனர். உடனடியாக பெண்மானை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு முதலுதவிக்காக பரமக்குடியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து வருகின்றனர்.

    தெரு நாய்கள் கடித்ததால் அந்த மான் காயம் அடைந்திருப்பது தெரியவந்தது.

    • தெருக்களில் சுற்றித் திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கட்டுப்படுத்த அரசு எச்சரிக்கை விடுத்தது.
    • உணவு பைகளை கீழே போட்டு போட்டுவிட்டு அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.

    கடலூர்:

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவியை நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்த மாடு முட்டியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார்.இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தெருக்களில் சுற்றித் திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கட்டுப்படுத்த அரசு எச்சரிக்கை விடுத்தது.

    ஆனால் இதனை கால்நடை வளர்ப்போர்கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. அதிகாலை நேரத்திலேயே 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் உலா வரத் தொடங்குகிறது .நடைப்பயிற்சி செல்வோர் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பணிகளுக்கு செல்வோர் சாலையில் பயணிக்கும் போது இந்த நாய்கள் அவர்களை சுற்றி குறைப்பதோடு கடிக்கவும் முற்படுகிறது .

    இதனால் அவர்கள் அச்சத்துடன் ஓட வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க நடைப்பயிற்சி மேற்கொள்வோர் கைகளில் தடியுடன் நடக்க வேண்டி உள்ளது. பள்ளி மாணவ -மாணவிகள் தங்களது உணவு பைகளை கீழே போட்டு போட்டுவிட்டு அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.இரவு நேரங்களில் தனியாக தெருக்களில் நடந்து வருவோரை இந்த நாய்களின் கூட்டம் குறைத்துக் கொண்டே துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது இதனால் பலர் அச்சமடைந்து குரல் எழுப்பிய படி அங்கும் எங்கும் ஓடி தங்களை நாய்க்கடிகளில் இருந்து காத்துக் கொள்கின்றனர். இது போன்ற இடையூர்களை போக்க நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஈரடுக்கு பஸ் நிலையம், ேமம்பாலங்கள், சாலைகள் விரிவாக்கம், பாதாள சாக்கடை பணிகள் என நாளுக்கு நாள் பல பணிகள் நடைபெற்று வருகிறது.
    • வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளும் அடிக்கடி அரங்கேறுகின்றன. மேலும் 4 சக்கர வாகனங்களையும் சில நாய்கள் ஓட ஓட துரத்துகின்றன.

    சேலம்:

    சேலம் மாநகரில் 60 வார்டுகள் உள்ளன. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் சேலம் மாநகராட்சி நாளுக்குநாள் விரிவடைந்து வருகிறது. ஈரடுக்கு பஸ் நிலையம், ேமம்பாலங்கள், சாலைகள் விரிவாக்கம், பாதாள சாக்கடை பணிகள் என நாளுக்கு நாள் பல பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஆனால் சேலம் மாநகரில் சமீப காலமாக நாய்கள் தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தனியாக சாலைகள் மற்றும் தெருக்களில் செல்ல முடியாமல் பயத்தில் தவித்து வருகிறார்கள். குறிப்பாக பெரியபுதூர், நகரமலை அடிவாரம், ரெட்டியூர், பள்ளப்பட்டி அம்மாப்பேட்டை, களரம்பட்டி, கிச்சிப்பாளையம், தாதகாப்பட்டி, பெரமனூர் உள்பட பல பகுதிகளில் சாலையிலேயே நாய்கள் படுத்து கிடக்கின்றன.

    இந்த நாய்கள் சாலைகளிலே படுத்து கிடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடனே அதனை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ- மாணவிகள் சிறுமிகள் இந்த நாய்களால் பெரும் அச்சத்தில் உள்ளனர். சில நாய்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்களையும் விரட்டி விரட்டி விரட்டி கடிக்கிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும் ஓட ஓட விரட்டியும் சில நாய்கள் கடிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளும் அடிக்கடி அரங்கேறுகின்றன. மேலும் 4 சக்கர வாகனங்களையும் சில நாய்கள் ஓட ஓட துரத்துகின்றன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் வாய்க்கால்பட்டடறை பகுதியில் 22 பேரை ஒரு நாய் கடித்து குதறியது. அதில் காயம் அடைந்த அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

    சேலம் பள்ளப்படடி போலீஸ் நிலையத்தில் போலீஸ் காரர் ஒருவர் நாய் வளர்த்து வருகிறார். கடந்த வாரம் போலீஸ் நிலையம் முன்பு சென்ற 7 பேரை அந்த நாய் கடித்து குதறியது. இதேபோல சேலம் மாநகரில் தினம், தினம் பல இடங்களில் பொது மக்களை நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சேலம் மாநகராட்சி சார்பில் கருத்தடை ஊசி போடவும், நாய்களை பிடிக்கவும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதற்கு போதுமான நடவடிக்கைள் சமீப காலமாக மேற்கொள்ளப்படுவது இல்லை. இதனால் நாளுக்கு நாள் நாய்கள் அதிக அளவில் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிகின்றன.

    இதேபோல சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் முன்பு மற்றும் சுரங்கப்பாதைகளில் அதிக அளவில் நாய் தொல்லை உள்ளது.

    குறிப்பாக அங்குள்ள சுரங்கப்பாதைகளில் நாய்கள் படுத்து தூங்குவதால் பயணிகள் அச்சத்துடன் கடக்கும் நிலை உள்ளது. ஒரு கட்டத்தில் சுரங்கப்பாதைக்குள் நாய்கள் சண்டையிட்டு கொள்வதால் பயணிகள் தங்கள் உடமைகளை விட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடிக்கும் சூழலும் நிலவுகிறது. இதனால் அந்த நாய்களை பிடித்து அகற்ற வேண்டும் என்பது ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    மாநகராட்சியில் நாய்கள் தொல்லை குறித்து புகார் கொடுத்தாலும் நாய்களை பிடிக்க யாரும் வருவதில்லை.இதனால் போன் செய்வதற்கும் பலர் விரும்புவதில்லை.

    எனவே நாளுக்கு நாள் பெருகி மக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பதுடன் அதனை பிடித்து அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • தெரு நாய்கள் தொல்லை அதிகரிக்கிறது.
    • இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் அதிகரித் துள்ளது. பகல், இரவில் நாய்கள் கூட்டமாக குடியி ருப்புகளில் வலம் வந்து அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    தற்போது நாய்களுக்கு இனப்பெருக்கத்திற்கான காலம் என்பதால் இணைகளை தேடி வெளியிடங்களில் இருந்து நகருக்குள் அதிகம் சுற்றித் திரிகிறது.

    இறைச்சி கடைகளை சுற்றியும் கூட்டமாக திரிகின்றன. குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் தெரு நாய்கள் குழந்தைகள், வயதானவர்களுக்கு அதிக பாதிப்பை தருகிறது. மெயின் ரோட்டில் திடீரென்று குறுக்காக வரும் தெரு நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுத்துகிறது.

    தெரு நாய்கள் தொல்லை தருவதாக இருந்தாலும் அதனை அப்புறப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் உள்ளாட்சி நிர்வாகத்தினர், தன்னார் வலர்கள் யாரும் முன் வருவதில்லை. தற்போது நாய் கள் எண்ணிக்கை பெருகி விட்டது. தெரு நாய்களுக்கான கருத்தடை ஆபரேஷன்களை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வா கங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

    • மாணவர்களுக்கு தெரு நாய்களின் உளவியல், பண்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது அவைகளுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி செலுத்தும் நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படும்.

    புதுச்சேரி:

    இந்தியா அறக்கட்டளை என்ற அரசு சாரா நிறுவனம் மற்றும் பள்ளி கல்வி துறையுடன் இணைந்து ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு தெரு நாய்களின் உளவியல், பண்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது அவைகளுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி செலுத்தும் நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுவதற்கு கருத்துரு அளிக்க உழவர் கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள், தெருநாய்களுக்கு உணவு அளிப்பவர்கள் 7598171674 என்ற நகராட்சி வாட்ஸ் ஆப்எண்ணில் பதிவு செய் து கொள்ளுமாறு உழவர் கரை நகராட்சி அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    ×