search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minor girl"

    • மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோவில் வழக்கு தொடரப்பட்டது.
    • சிறுமியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா பாலியல் தொந்தரவு என புகார் எழுந்தது.

    பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மீது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    அதில் தனது மகளின் செல்போனுக்கு பா.ஜ.க. பிரமுகர் எம்.எஸ்.ஷா தொடர்ந்து ஆபாசமான உரையாடல்களை அனுப்பி வந்துள்ளதாகவும், இதுபற்றி தனது மகளிடம் கேட்டபோது எம்.எஸ்.ஷா அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிய வந்தது.

    மேலும், புகார் கொடுத்தவரின் மனைவி பா.ஜ.க. பிரமுகர் இருக்கும் இடத்திற்கு மகளை தனியாக அழைத்துச் சென்று தங்க வைத்ததாகவும், வாட்ஸ்அப் மூலம் அவர் கூப்பிடும் இடத்திற்கு சென்று அவருடன் தங்கி னால் ஸ்கூட்டர், புதிய ஆடைகள் வாங்கித் தருகிறேன், கடனை அடைக்கி றேன் என ஆசை வார்த்தை களை கூறி அழைத்து சென்று பாலியல் துன்பு றுத்தல் அளித்துள்ளார். இதற்கு தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க. நிர்வாகி எம்.எஸ்.ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பா.ஜ.க. மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா இன்று மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    • சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
    • சிறுமிக்கு நடந்ததை வெளியே சொல்ல கூடாது என மிரட்டினார்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. சம்பவத்தின்போது ஞானசேகரன் மற்றொருவரிடம் போன் செய்து சார் என பேசியதாகவும், அந்த சார் உடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி விசாரணையில் கூறியதாக தழுவல் வெளியாகியது.

    சார் என்று யாரும் இல்லை என்றும் பொய்யான தகவல் பரப்ப வேண்டாம் என்றும் அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் யார் அந்த சார் என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.

     

    சட்டசபை கூட்டங்களிலும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் பலர் யார் அந்த சார் என்ற பேட்ஜை தனது சட்டையில் குத்திக்கொண்டு வந்தனர். இந்நிலையில் திமுக தொண்டர்கள் யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் கொடுத்துள்ளனர்.

    அண்ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் புகார் அளித்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியதாகவும், புகாரிலிருந்து ஒரு சிறுவனின் பெயரை நீக்க வேண்டும் என தங்களை தாக்கியதாக சிறுமியின் தாய் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கு தொடர்பான புலனாய்வு விசாரணையில் அதிமுகவின் 103வது வட்ட செயலாளர் சுதாகர், சென்னை அண்ணாநகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.

    சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி தரப்பு சுதாகரை அணுகியதாகவும் சிறுமிக்கு நடந்ததை வெளியே சொல்ல கூடாது என மிரட்டியதோடு புகார் அளிக்காமல் இருந்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பல லட்சம் ரூபாய் பணம் பெற்று தருவதாக சுதாகர் பேசினார் என்று சிறுமி தரப்பு கூறியதை அடுத்து சுதாகர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உடன் சுதாகர் இருக்கும் புகைப்படங்களை வைரல் செய்து வரும் திமுக, சுதாகர் தான் அந்த சார் என டிரண்ட் செய்து வருகிறது. மேலும் சாலையில் வருவோர் போவோரிடமும் அந்த போட்டோவை திமுகவினர் வழங்கி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் அதிமுக திமுக இடையே சண்டை மூண்டுள்ளது.

    • பாளை குலவணிகர்புரம் அருகே உள்ள வீரமாணிக்கபுரம் பகுதியில் 15 வயது சிறுமிக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.
    • போலீசார் சிறுமியை பாளை அனைத்தும் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    நெல்லை:

    பாளை குலவணிகர்புரம் அருகே உள்ள வீரமாணிக்கபுரம் பகுதியில் 15 வயது சிறுமிக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

    இதனை அந்த பகுதியை சேர்ந்த சிலர் மாவட்ட நிர்வாக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஒன் ஸ்டாப்' சென்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த அதிகாரிகள் பாளை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக வீரமாணிக்கபுரத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சென்று நடத்திய விசாரணையில் வீரமாணிக்கபுரம் 4-வது தெருவை சேர்ந்த ராயல் விக்கி (வயது 23) என்ற வாலிபருக்கும், அவரது உறவினர் ஒருவரின் 15 வயது மகளுக்கும் திருமணம் நடந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுமியை பாளை அனைத்தும் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் அந்த சிறுமி காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தலைமறைவான ராயல் விக்கியை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த சலவைத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் வினோத் (வயது23). இவருக்கும் வடகாடு பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருங்கி பழகினர்.

    அப்போது வினோத் மைனர் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் வினோத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்த போது வினோத் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே காதலிப்பதாக கூறி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே சித்தார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் குருநாதன் மகன் நிதீஷ்குமார் (வயது21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த மைனர் பெண் தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இதனால் அடிக்கடி அங்கே சென்ற நிதீஷ்குமார் இளம்பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.

    மேலும் அடிக்கடி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சோதனை செய்து பார்த்தபோது 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து ராஜதானி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே திருமண ஆசை காட்டி மைனர் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே கோம்பை அணைமேட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் விக்னேஸ்வரன் (வயது 23). அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கேரளாவில் வேலை பார்த்து வந்த 17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர்.

    விக்னேஸ்வரன் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து ஓடைப்பகுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இது குறித்து கோம்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.

    நாகல்நகரில் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைதானார்கள்.

    குள்ளனம்பட்டி:

    மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நாகல்நகர் பகுதியில் தங்கி 2 மகள்களுடன் அந்த பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேக் பரீத், தங்கராஜ் ஆகியோர் பாண்டியின் 16 வயது கொண்ட மகளை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

    அப்போது அவர்கள் ஒவ்வொரு நாளும் தனித்தனியாக 2 பேரும் சேர்ந்து மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக பாண்டி திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குபதிவு செய்து ஆட்டோ டிரைவர் சேக் பரீத், தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே மைனர் பெண்ணை உல்லாசம் அனுபவித்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வரு‌ஷநாடு அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 23). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    இதனால் சுரேசும், அந்த பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர். இளம் வயது காரணமாக அடிக்கடி அத்து மீற தொடங்கியுள்ளனர். அப்போது சுரேஷ் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

    மேலும் மைனர் பெண்ணுடன் தனிமையில் இருந்ததை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

    தற்போது அந்த பெண்ணிடம் செல்போனில் உள்ள அந்தரங்க படத்தை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மைனர் பெண் தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து வரு‌ஷநாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

    மைனர் பெண்ணை காதலித்து கர்ப்பாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை சமயநல்லூர் அருகிலுள்ள பொதும்பு காந்திஜி நகரைச் சேர்ந்தவர் முத்துமாரி மகன் சங்கையா (வயது19). இவர் சோழவந்தான் ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

    அந்த பெண்ணின் பெற்றோர் சென்னையில் வசிக்கின்றனர். எனவே சோழவந்தானில் பாட்டி வீட்டில் அந்த பெண் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்ற சங்கையா அங்கு தனியாக இருந்த அவரை கற்பழித்தார். இதில் அந்த பெண் தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதுகுறித்து பெண்ணின் தாயார் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் வழக்குப்பதிவு செய்து சங்கையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள ஆலம்பாடியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (38). இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

    அதே பகுதியில் வசிக்கும் அய்யாவு மகன் மூர்த்தி (24) என்பவர் நான் உங்களின் மகளை காதலிக்கிறேன். அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டார். இதற்கு வெள்ளைச்சாமி மறுப்பு தெரிவித்து விட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை வலுத்தது.

    அப்போது மூர்த்தி உருட்டுக்கட்டையால் வெள்ளைச்சாமி மற்றும் அவரது மனைவியை தாக்கினார். இதுதொடர்பாக வெள்ளைச்சாமி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நாகர்கோவில் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே உள்ள மணிக்கட்டி பொட்டலைச் சேர்ந்தவர் லிங்கம் (வயது 22). தொழிலாளி.

    இவருக்கும், சுசீந்திரம் குளத்தூர் காலனியைச் சேர்ந்த 16 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். மணிக்கட்டிப் பொட்டலில் உள்ள தனது உறவிரை பார்க்க வந்தபோது லிங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

    இவர்களது காதல் விவகாரம் 2 பேருடைய பெற்றோருக்கும் தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லிங்கம், அந்த பெண்ணின் பெற்றோரை நேரில் பார்த்து பெண் கேட்டார். ஆனால் அவர்கள் லிங்கத்துக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லிங்கமும், அந்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறினர். உவரியில் உள்ள கோவிலுக்கு சென்று அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தனியாக குடும்பம் நடத்தினர்.

    இதில் அந்த பெண் கர்ப்பமானார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு 16 வயதே ஆவதை உறுதி செய்தனர். மைனர் பெண் ஒருவர் கர்ப்பமானது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார், 9 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணை அழைத்து விசாரித்தனர். பின்னர் மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பணியாக்கியதாக லிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    லிங்கத்தை போலீசார் தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தாயத்து கொடுப்பதாக 10 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று சீரழித்த 80 வயது நபரை போலீசார் இன்று கைது செய்தனர். #80yearoldarrrested #molestingminorgirl
    தானே:

    மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள அம்பிவிலி பகுதியை சேர்ந்தவர் யூனுஸ் சையத். 80 வயதாகும் இவர் தோஷம் கழிப்பதற்காக தாயத்துகளை தயாரித்து கொடுப்பதுடன் அப்பகுதியில் மந்திரத்தால் நோய்களை குணப்படுத்துவதாக கூறி தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில், அருகாமையில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை தாயத்து தருவதாக கூறி நேற்று பிற்பகல் யூனுஸ் தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தனிமையை பயன்படுத்தி தனது மகளை யூனுஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து, யூனுஸ் சையதை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #80yearoldarrrested #molestingminorgirl
    மத்திய பிரதேசத்தில் சிறுமி கற்பழிப்பு வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிந்த 3 நாளில் வாலிபருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் ரேகளி நகர் அருகே முகினி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதி கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக நரேஷ் என்ற வாலிபரை போலீசார் அதே தினத்தில் கைது செய்தனர்.

    சிறுமியை கற்பழித்த வழக்கில் வாலிபர் நரேசுக்கு சாகர் மாவட்ட கோர்ட்டு நீதிபதி சுதான்சு சக்சேனா தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    மத்திய பிரேதச மாநிலத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் சட்டசபையில் ஒருமனதாக மசோதா கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் 376-வது பிரிவின்படி தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கில் விசாரணை முடிந்த 3 தினங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து விசாரணையும் முடிந்து 3 நாளில் தீர்ப்பு அளிக்கப்பட்டது சாதனையாகும்.

    சாகர் மாவட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் வழக்கில் 3-வது முறையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே கோர்ட்டில் கடந்த மாதம் இதே மாதிரியான வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×