நெல்லையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு வலைவீச்சு

பாளை குலவணிகர்புரம் அருகே உள்ள வீரமாணிக்கபுரம் பகுதியில் 15 வயது சிறுமிக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.போலீசார் சிறுமியை பாளை அனைத்தும் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
நெல்லையில்  சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு வலைவீச்சு
Published on

நெல்லை:

பாளை குலவணிகர்புரம் அருகே உள்ள வீரமாணிக்கபுரம் பகுதியில் 15 வயது சிறுமிக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனை அந்த பகுதியை சேர்ந்த சிலர் மாவட்ட நிர்வாக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஒன் ஸ்டாப்' சென்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த அதிகாரிகள் பாளை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக வீரமாணிக்கபுரத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சென்று நடத்திய விசாரணையில் வீரமாணிக்கபுரம் 4-வது தெருவை சேர்ந்த ராயல் விக்கி (வயது 23) என்ற வாலிபருக்கும், அவரது உறவினர் ஒருவரின் 15 வயது மகளுக்கும் திருமணம் நடந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுமியை பாளை அனைத்தும் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் அந்த சிறுமி காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தலைமறைவான ராயல் விக்கியை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com