என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Posco Law"

    • போலீசார் சிறுமியிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்தனர்.
    • சிறுமியின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு புதுவை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாஸ்பேட்டை மெயின் ரோடு பிள்ளையார்கோவில் அருகே நள்ளிரவில் 17வயது சிறுமி ஒருவர் தனியாக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    இதைக்கண்ட இன்ஸ்பெக்டர் சாந்தி தனது வாகனத்தை நிறுத்தி சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி அதிர்ச்சிகரமான தகவலை கூறினார்.

    அந்த சிறுமி பிளஸ்-2 படித்து வருவதாகவும், விடுமுறை முடிந்து வீட்டில் இருந்து வந்த அவருக்கு அவரது தந்தை கடந்த 10 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தார். இதனால் புகார் அளிக்க லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு நள்ளிரவில் நடத்து வந்ததாக தெரிவித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் சாந்தி பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு தனியார் காப்பகத்தில் இரவு தங்க வைத்தார்.

    நேற்று காலை இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சிறுமியிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்தனர்.

    பின்னர் சிறுமியின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மகள் என்றும் பாராமல் அவர் 10 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    • பள்ளி செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளை வீரன் நிறுத்தினார்.
    • சிறுமியை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தில் உள்ள பள்ளியில் 9 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி நேற்று மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே அதே ஊரைச் சேர்ந்த வீரன் (30) மோட்டார் சைக்கிளில் வந்தார். சாலையில் நடந்து சென்ற சிறுமியை ஏன் நடந்து செல்கிறாய். மோட்டார் சைக்கிளில் உட்கார், பள்ளியில் விடுகிறேன் என்று கூறினார். இதனை நம்பி அச்சிறுமி மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தார்.

    பள்ளி செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளை வீரன் நிறுத்தினார். சிறுமியை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தார். இதில் அச்சிறுமி கூச்சலிட்டார். அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தனர்.

    கரும்புதோட்டத்தில் வீரனிடம் சிக்கியிருந்த சிறுமியை மீட்டனர். வீரனுக்கு தர்மஅடி கொடுத்து, கடலூர் மாவட்ட சிறார் உதவி மையத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினர். அவர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வீரனை கைது செய்து போக்சோ வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை அவளது பெற்றோருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் தண்டபாணி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • மாணவியின் பெற்றோர் பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஈரோடு, 46 புதுவை சேர்ந்த தண்டபாணி (55) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் இந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் தண்டபாணி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் தண்டபாணி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் தண்டபாணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இந்நிலையில் ஆசிரியர் தண்டபாணியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வங்கமானூத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 70). அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று 10 வயது சிறுமியை மிட்டாய் தருவதாக தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் அழுது கொண்டே சென்ற சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் சேகரிடம் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா தலைமையில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜேம்சை போகசோ சட்டத்தில் கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த சலவைத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் வினோத் (வயது23). இவருக்கும் வடகாடு பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருங்கி பழகினர்.

    அப்போது வினோத் மைனர் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் வினோத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்த போது வினோத் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தர்மபுரி அருகே பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    தர்மபுரி:

    தர்மபுரியை அடுத்த குப்பூர் பகுதியில் உள்ள எஸ்.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து மாணவி யின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கா ததால் மாணவி மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவரும் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் கோபாலகிருஷ்ணன் என்பவர் மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியர் கோபால கிருஷ்ணனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குபதிந்து போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து மாணவியை மீட்டு தொப்பூர் அருகே உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    தஞ்சை அருகே திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை-கும்பகோணம் சாலையில் உள்ள திட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன்(வயது23). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து அவர் மகேஸ்வரனிடம் சென்று தான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

    ஆனால் அதற்கு மகேஸ்வரன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோருடன் சென்று வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மகேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியிடம் முறைகேடாக பழகி அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கிப் பழகியதில் அவர் கர்ப்பமானது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மகேஸ்வரன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ராணிப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கெடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராமதாஸ் (வயது 25),எலக்ட்ரீசியன், இவர் மலைமேடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுபற்றி சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் ராமதாஸ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குடிபோதையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் 34 வயது கார் டிரைவர். இவருக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தினசரி மது குடித்து விட்டு வீட்டுக்கு வரும் டிரைவர் அடிக்கடி தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் மது போதையில் இருந்த அவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் பயந்த சிறுமி நடந்ததை தனது தாயிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தாய் இது குறித்து காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை காங்கயம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    வடமதுரை அருகே மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே குருந்தம்பட்டி பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 19). அய்யலூர் பகுதியில் உள்ள குளிர்பான கடையில் வேலை பார்த்து வருகிறார். இப்பகுதியில் உள்ள பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலகிருஷ்ணன், கடத்திச் சென்றார்.

    இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. சிவக்குமார் உத்தரவின் பேரில் வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் 2 பேரையும் கரூர் அருகே மடக்கி பிடித்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். மேலும் சிறுமியை கடத்திய பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    அரியாங்குப்பத்தில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்தபோது காணாமல் போனார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதில், தனது மகளை யாரோ கடத்தி சென்று விட்டனர் என்று கூறி இருந்தனர்.

    இந்த புகாரை அடுத்து போலீசார் கடத்தல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த சிறுமியை கடத்தி சென்றது அவரது உறவினரான ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ரமணா என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிறுமி தானாகவே வீட்டுக்கு வந்தார். இதை அறிந்த அரியாங்குப்பம் போலீசார் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக எல்லைப் பிள்ளைச்சாவடியில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது டாக்டர்கள் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். அதில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் குழந்தைகள் நலக்குழு ராஜேந்திரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியை ரமணா கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.

    இதையடுத்து குழந்தைகள் நலக்குழுவினர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.

    இதன் மீது விசாரணை நடத்திய போலீசார் கடத்தல் வழக்கை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் (போக்சோ) வழக்காக மாற்றி ரமணவை தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரமணா ரவுடியாக செயல்பட்டு வந்தார். அவர் மீது 2 கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே மாணவியை கடத்திய வாலிபர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம், ஆனந்தூர் அருகே உள்ள மேலவயல் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஆனந்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

    கடந்த 20.10.2018 இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை திடீரென்று காணவில்லை.

    இது குறித்து சிறுமியின் தாயார் ஆர்.எஸ. மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். திருவாடனை டி.எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஆர்.எஸ். மங்கலம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.

    சிறுமி கொடுத்த வாக்கு மூலத்தின்படி இவர்களின் உறவினரான பாப்பா குடியைச் சேர்ந்த சாத்தையா மகன் ரங்கராஜன் (வயது31) என்பவரை போஸ்கோ சட்டத்தின கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×