என் மலர்
நீங்கள் தேடியது "complaint register"
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சின்னகரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் மகேஸ்வரி (வயது 19). இவர் கல்லூரியில் படிக்கும்போது, கும்பகோணம் மேல விசலூரை சேர்ந்த தமிழரசன் என்பவரை காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகேஸ்வரி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தமிழரசனை வற்புறுத்தி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழரசன் மகேஸ்வரியை சந்திப்பதை தவிர்தது வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதனை தமிழரசன் ஏற்கவில்லை.
அவர் திருமண ஆசைக்காட்டி ஏமாற்றி விட்டதை அறிந்த மகேஸ்வரி இதுபற்றி நன்னிலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தமிழரசனை தேடி வருகின்றனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராமதாஸ் (வயது 25),எலக்ட்ரீசியன், இவர் மலைமேடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுபற்றி சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் ராமதாஸ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை:
மதுரை அனுப்பானடி திருமலைநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது18). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி உள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு திருமண ஆசைகாட்டி, கடந்த 30-ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து காளீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் கோட்டார் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் நாகராஜன் (வயது 30) அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவன், தனது பெற்றோரிடம் கூறினார்.
இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆசிரியர் நாகராஜன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து ஆசிரியர் நாகராஜன் தலைமறைவாகி உள்ளார்.
கோட்டார் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை மகளிர் போலீசார் விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மகளிர் போலீசார் இது தொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளனர்.
வேலூர்:
காட்பாடி அருகேயுள்ள குழந்தைகள் இல்லத்தில் சமூக பணியாளராக பணிபுரிந்து வரும் ரஞ்சிதா, விருதம்பட்டு போலீசில் புகார் மனு அளித்தார்.
அதில், ‘‘எங்களது குழந்தைகள் இல்லத்தில் வாலாஜா தாலுகா ஒழுகூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தங்கி காட்பாடியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டார். வழக்கத்தைவிட அதிகமாக கோபம் கொண்டார்.
இதையடுத்து மாணவியை அருகேயுள்ள மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றோம். சிகிச்சையின்போது, மாணவி கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறை நாளில் காங்கேயநல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து அருகேயுள்ள வீட்டிற்கு வந்த வேலூர் கஸ்பாவை சேர்ந்த சேகர் (62) என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அதன்காரணமாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேகர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.