search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidnapped student"

    தேன்கனிக்கோட்டை அருகே மாணவியை கடத்தி சென்ற ஊர்காவல் படை வீரரை போலீசார் கைது செய்து ஓசூர் சிறையில் அடைத்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ராயக்கோட்டை ரகமத் காலனியை சேர்ந்தவரின் 16 வயது மகள் ராயக்கோட்டை அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 6-ந்தேதி கடைக்கு சென்றவர் அதன்பின் வீடு திரும்ப வில்லை. பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    அதில் ராயக்கோட்டை ஜெ.ஜெ,நகரை சேர்ந்த முருகனின் மகனும், ஊர்க்காவல் படைவீரருமான சங்கர் (26) என்பவர் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சாந்தா மாணவியை மீட்டு பேற்றோரிடம் ஒப்படைத்தார். அவரை கடத்தி சென்ற சங்கர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் செய்து ஓசூர் கிளை சிறையில் அடைத்தார். 
    7-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக 5 பேர் கும்பலில் ஒருவரை மாணவியின் தந்தை கத்தியால் குத்தினார்.

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த நெக்கினி மலை கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவருடைய தந்தைக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    நேற்று இரவு மாணவி மற்றும் அவரது தந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் குமார் உள்பட 5 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் மாணவியை தூக்கி கொண்டு மலை பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. திடீரென கண் விழித்து பார்த்த மாணவியின் தந்தை தூங்கி கொண்டிருந்த மகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது இளம்பெண் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வீட்டுக்கு ஓடிவந்தார். நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை அங்கு நின்று கொண்டிருந்த குமாரிடம் சென்று தட்டிக்கேட்டார். வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.

    அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் தந்தை குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் குமார் படுகாயமடைந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவியின் தந்தையை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் நெக்கினி மலை கிராமத்திற்கு சென்று மரத்தில் கட்டி வைத்திருந்த மாணவியின் தந்தையை மீட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவெண்ணைநல்லூர் அருகே மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வீடுகளை சூறையாடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் காலனியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 22). இவர் கடலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் அதே பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் தினமும் ஒரே பஸ்சில் கல்லூரிக்கு சென்றுவந்தனர்.

    இவர்கள் கடந்த 21-ந் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றனர். அன்று மாலை அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை மாணவர் திருமூர்ததி கடத்தி சென்று விட்டார். கடத்தப்பட்ட தனது மகளை மீட்டு கொடுக்கும்படி கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியை தேடி வந்தனர். மாணவி கடத்தப்பட்டு 4 நாட்கள் ஆகியும் அவர் எங்கு இருக்கிறார் என தெரியாததால் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். நேற்று மதியம் மாணவியின் உறவினர்கள் சுமார் 15 பேர் ஒன்று திரண்டனர்.

    பின்பு அவர்கள் ஆனத்தூர் காலனிக்கு சென்று அங்கிருந்த வீடுகளை அடித்து உடைத்து சூறையாடினர். இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள் அடித்து உடைக்கப்பட்டன. ஒரு மினி லாரியின் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. பின்னர் காலனிபகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு திடீர் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, உளுந்தூர்பேட்டை இன்ஸ் பெக்டர் சாகுல்ஹமீது ஆகியோர் விரைந்து சென்றனர்.

    இதற்கிடையே இந்த தகவல் தெரியவந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வீடுகளை சூறையாடியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வீடுகளை சூறையாடிய மதுசூதனன் (வயது 31), இளையராஜா (26), புருஷோத்தமன் (27), தேவ நாதன் (43), வேலு (34) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவான 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆனத்தூர் காலனி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால் அங்கு 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ் பெக்டர்கள் மற்றும் 100-க் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    டி.கல்லுப்பட்டி அருகே கடத்தப்பட்ட மாணவியை மீட்ட போலீசார் காதலனை கைது செய்தனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்த கொல்லவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மகள் மகேஸ்வரி (வயது 17), பிளஸ்-2 மாணவி.

    அதே ஊரைச் சேர்ந்த விஜயபாண்டியன் மகன் கோடீஸ்வரன் (26) பி.காம். பட்டதாரி. இவரும் மகேஸ்வரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் மகேஸ்வரி திடீரென மாயமானார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசில், முத்துக்கிருஷ்ணன் புகார் செய்தார்.

    அதில், மகேஸ்வரி கடத்தப்பட்டுள்ளதாகவும், கோடீஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் இதனை செய்திருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் காதலனுடன் மகேஸ்வரி ஊருக்கு வந்த போது போலீசார் அவரை மீட்டனர். கோடீஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவரது பெற்றோர் விஜயபாண்டியன்-வசந்தி, தம்பி கருப்பசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    9-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற வாலிபர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த மாம்பாடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த சிவசக்தி (வயது 23), என்பவர் கடந்த 17ந் தேதி, கடத்திச் சென்றதாக அவரது தாய் அரூர் போலீசில் புகார் அளித்தார்.

    இது குறித்து, போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மாணவியை கடத்திச் சென்ற சிவசக்தியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். மேலும், இவருக்கு, அடைக்கலம் அளித்ததாக, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த பாளையம்காட்டு பள்ளத்தை சேர்ந்த சிவா (41), ரமேஷ் (25), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    செய்யாறு அருகே மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த ராந்தம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை

    இது குறித்து மாணவியின் தாய் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் சுரேஷ் என்பவர் மாணவியை கடத்தி சென்று பாலியில் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியை மீட்டு சுரேசை பேக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    ஆம்பூரில் மாணவியை கடத்தி சென்று பெங்களூருவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை, ஆம்பூர் மோட்டுக்கொல்லையை சேர்ந்த அர்ப்பான் (வயது 24), நியூபெத்லகேமை சேர்ந்த இர்பான்கான் (22), மு.க.கொல்லையை சேர்ந்த முதஸீர் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் கடத்தினர். காரில் பெங்களூருவுக்கு சென்று அங்கு ஒரு விடுதியில் மாணவியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் பள்ளி மாணவியை காணாமல் தவித்த பெற்றோர் இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசிலும், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாணவியை கடத்தி சென்ற கும்பலை தேடி வந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த அந்த கும்பல் மாணவியை பெங்களூரில் விட்டுவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து போலீசார் பெங்களூரு சென்று மாணவியை மீட்டு வந்தனர்.

    மேலும் இதுதொடர்பாக மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ப்பான், இர்பான்கான், முதஸீர் ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே மாணவியை கடத்திய வாலிபர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம், ஆனந்தூர் அருகே உள்ள மேலவயல் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஆனந்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

    கடந்த 20.10.2018 இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை திடீரென்று காணவில்லை.

    இது குறித்து சிறுமியின் தாயார் ஆர்.எஸ. மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். திருவாடனை டி.எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஆர்.எஸ். மங்கலம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.

    சிறுமி கொடுத்த வாக்கு மூலத்தின்படி இவர்களின் உறவினரான பாப்பா குடியைச் சேர்ந்த சாத்தையா மகன் ரங்கராஜன் (வயது31) என்பவரை போஸ்கோ சட்டத்தின கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கூடலூர் அருகே பள்ள மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன் பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. விவசாயி. அவரது மகள் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -2 படித்து வருகிறார்.

    கடந்த 23-ந் தேதி கடைக்கு சென்ற பள்ளி மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    மேலும் விசாரித்ததில் அதே ஊரைச் சேர்ந்த தயாளன் மகன் கவுதம் மாணவியை கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது.

    அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டு தேடி வந்தனர். ஆனால் மாணவியுடன் கவுதம் மதுரையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று அவர்களை கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மைனர் பெண்ணை கடத்தியதால் கவுதமை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்ற மெக்கானிக்கை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 23). மோட்டார் சைக்கிள்மெக்கானிக். இவர் தனது எதிர் வீட்டில் வசித்து வந்த பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் சுமார் 17 வயதுள்ள மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு மாணவி திடீரென காணாமல் போனார். மாணவியை அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை, மாணவியை மெக்கானிக் பிரவீன்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்றிருக்கலாம் என்று போலீசில் புகார் செய்தனர்.

    மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் திருமணம் செய்வதற்காக ஆந்திர மாநிலத்திற்கு சிறுமியை கடத்தி செல்ல முயன்ற மெக்கானிக் பிரவீன்குமாரை பேரணாம்பட்டு வீ.கோட்டா சந்திப்பு சாலையில் போலீசார் பிடித்தனர்.

     இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி அருகே டியூசன் படிக்க சென்ற மாணவனை கும்பல் காரில் கடத்தி சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி பிடாரி கீழ தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அகிலா. இவர்களுக்கு மணிகண்டன்(11) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மணிகண்டன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த நிலையில் நேற்று மாலை மணிகண்டன், பக்கத்து தெருவில் உள்ள ஆசிரியரிடம் டியூசன் படிக்க நடந்து சென்று கொண்டிருந்தான்.

    அப்போது ஒரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென, மாணவன் மணிகண்டனை குண்டுக் கட்டாக தூக்கி சென்றனர். பின்னர் அவர்கள் மாணவனின் வாயை பொத்தி, காரில் போட்டு கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினான். ஆனால் காரில் பின் இருக்கையில் இருந்த 2 பேர், மணிகண்டனை கெட்டியாக பிடித்து கொண்டனர்.

    இந்த நிலையில் கார், கொள்ளிடம் முக்கூடம் பகுதியில் சீர்காழி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரை ரோட்டோரத்தில் நிறுத்தி, கும்பலை சேர்ந்த ஒருவர் சிறுநீர் கழித்தார்.

    அந்த சமயத்தை பயன் படுத்தி மணிகண்டன், திடீரென காரில் இருந்த மற்றொருவரின் கையை கடித்து விட்டு மின்னல் வேகத்தில் காரில் இருந்து தப்பி ஓடினான்.

    இதை சற்றும் எதிர் பார்க்காத கடத்தல் கும்பல், தப்பி ஓடிய மணிகண்டனை பிடிக்க விரட்டி சென்றனர்.

    ஆனால் மணிகண்டன் சத்தம் போட்டப்படி ரோட்டில் ஓடியதால் கடத்தல் கும்பல் பதட்டம் அடைந்தனர். உடனே சுதாரித்து கொண்ட அவர்கள் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு தப்பி சென்றனர்.

    இதையடுத்து கடத்தல் சம்பவம் குறித்து மணிகண்டன், அட்டகுளம் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மாணவனை மீட்டு விசாரணை நடத்தினர். மாணவன் போலீசாரிடம் ‘தன்னை கடத்தியவர்கள் 4 பேர் கும்பல்’ என்றும், காரில் செல்லும் போது செல்போனில் தன்னை படம் பிடித்ததாகவும் தெரிவித்தான்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பணம் பறிக்கும் நோக்கில் மாணவனை கும்பல் கடத்தி சென்றதா? அல்லது மாணவனே கடத்தல் நாடகம் நடத்துகிறானா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரையில் திருமண ஆசைகாட்டி 9-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    மதுரை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மைனர் பெண் திருப்பாலையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாய மானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது பெற்றோர் பெருங்குடி போலீசில் புகார் செய்தனர். அதில், மேலூர் அருகே உள்ள பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் மகன் பெரியசாமி (வயது20) என்பவர் திருமண ஆசை காட்டி மகளை கடத்தி சென்று விட்டதாக குறிப்பிட்டு இருந்தனர்.

    இதன் அடிப்படையில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இருவரும் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று இருவரையும் அழைத்து வந்தனர்.

    பின்னர் மைனர் பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை கடத்திய பெரியசாமி கைது செய்யப்பட்டார்.

    ×