என் மலர்
நீங்கள் தேடியது "knife attack"
- தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெர்லின்:
ஜெர்மனியில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி தாக்குதல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சில தாக்குதல் தீவிரவாதிகளாலும் மற்றவை தீவிர மனநோயால் பாதிக்கப்பட்ட நபர்களாலும் நடத்தப்பட்டன.
இந்நிலையில ஜெர்மனியின் வடக்கு பகுதியில் ஓடும் ரெயிலில் பயணிகளை குறிவைத்து இன்று கத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹம்பர்க்-கீல் வழித்தடத்தில் ப்ரோக்ஸ்டெட் ரெயில் நிலையத்தை ரெயில் நெருங்கியபோது மர்ம நபர் தாக்குதல் நடத்தினான். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்துவதற்காக, ஹம்பர்க்-கீல் இடையிலான வழித்தடத்தில் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
- தகாத வார்த்தைகளால் திட்டியதை தட்டி கேட்டதால் ஆத்திரம்
- ஜெயிலில் அடைக்கப்பட்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் அடியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சித்ரா (வயது 45), இவர் சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் வீட்டுக்கு வெளியே நின்று உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பெரிய முக்கனூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு மகன் கவியரசன் (20), புதுப்பேட்டை அருகே உள்ள கல்நார்சம் பட்டி கிழக்கு மேடு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மகன் கார்த்திக் ( 18 ), கோவிந்தன் மகன் விஜய் (20) மற்றும் சந்தைத் தோப்பு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் பிரதீப் குமார் ( 20 ) ஆகிய 4 பேர் சித்ராவின் உறவினர்களிடம் தகாத வார்த் தைகளால் திட்டினர்.
இதனை சித்ரா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவியரசன் தான் வைத்திருந்த கத்தியால் சித்ராவின் தலை மீது தாக்கியதில் கீழே விழுந்தார். அதன்பின்னர் அனைவரும் சேர்ந்து சித்ராவை காலால் எட்டி உதைத்து காயப்படுத்தினர். படுகாயம் அடைந்த சித்ரா சி கிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது சம்பந்தமாக சித்ரா கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஜெயச்சந் திரன் வழக்குப்பதிவு செய்து கவியரசன், விஜய் , மற்றும் பிரதீப் குமார் ஆகிய 3 பேரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
இவர்களில் கார்த்திக் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரத்குமாரை குத்தினார்.
- நண்பர் ரமேஷ் என்பவருடன் எஸ்.என். பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றார்
கோவை:
கோவை துடியலூர் ஜி.என்.மில் அடுத்த எஸ்.என். பாளையம் பட்டத்தரசி யம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 24). தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் எஸ்.என். பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றார். அங்கு தனது நண்பருடன் அமர்ந்து மதுகுடித்தார்.
அப்போது பரத்குமார் அருகில் அமர்ந்து குடித்து கொண்டு இருந்த நபரின் மது பாட்டிலை தெரியாமல் தட்டி விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்தனர்.
பின்னர் பரத்குமார் தனது நண்பரை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றார். இதனை பார்த்த அந்த நபர் அவர்களது பின்னால் வந்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரத்குமாரை குத்தினார். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.
பலத்த காயம் அடைந்த பரத்குமாரை அவரது நண்பர் ரமேஷ் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். இதுகுறித்து பரத்குமார் துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (42). தொழிலாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போரூர்:
நெற்குன்றம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜாவீத். இவர் இரவு நண்பர் லோகேஷ் உடன் அதே பகுதி முனியப்பா நகர் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் அரிவாள், கத்தி, கம்பியால் ஜாவீத், லோகேஷ் ஆகிய இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதையடுத்த சுந்தரி என்ற பெண்ணையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
இதில் சுந்தரிக்கும் லேசான வெட்டு விழுந்தது. தலையில் வெட்டுபட்ட ஜாவீத் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். லோகேஷ், சுந்தரி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதிராஜ், ராஜூ ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதில் அதேபகுதி தனலட்சுமி நகர், அன்னம்மாள் நகர் பகுதி வாலிபர்கள் இடையே தெருக்களுக்குள் பைக் ரேஸ் செல்வதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை வெறி தாக்குதல் நடந்து இருப்பது தெரிய வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திஉள்ளனர். இதுதொடர்பாக நெற்குன்றம் அன்னம்மாள் நகரைச் சேர்ந்த அருண், அய்யனார், மோகன், சுபாஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த நெக்கினி மலை கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருடைய தந்தைக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
நேற்று இரவு மாணவி மற்றும் அவரது தந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் குமார் உள்பட 5 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் மாணவியை தூக்கி கொண்டு மலை பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. திடீரென கண் விழித்து பார்த்த மாணவியின் தந்தை தூங்கி கொண்டிருந்த மகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அப்போது இளம்பெண் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வீட்டுக்கு ஓடிவந்தார். நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை அங்கு நின்று கொண்டிருந்த குமாரிடம் சென்று தட்டிக்கேட்டார். வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் தந்தை குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் குமார் படுகாயமடைந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவியின் தந்தையை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நெக்கினி மலை கிராமத்திற்கு சென்று மரத்தில் கட்டி வைத்திருந்த மாணவியின் தந்தையை மீட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி:
கோவை வடவள்ளி சிறுவாணி மெயின் ரோட்டில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் முதலாவது கடை மகாராணி அவென்யூவில் உள்ளது. இந்த டாஸ்மாக் மதுக்கடையில் அதே பகுதியை சேர்ந்த பதி என்ற பழம்பதி (வயது 43) என்பவர் பார் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு 10 மணிக்கு வழக்கம்போல் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. 10.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பார் உரிமையாளர் பழம்பதியிடம் மதுகேட்டனர். பார் உரிமையாளர் கூடுதல் விலைக்கு மது விற்றதாக கூறப்படுகிறது.
மதுக்கடையை விட மிக கூடுதல் பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பார் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். இது குறித்து அறிந்ததும் பார் ஊழியர்கள் அங்கு வந்தனர். பார் உரிமையாளரும், ஊழியர்களும் சேர்ந்த 2 வாலிபர்களையும் தாக்கினர். மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஒருவரது செல்போனை பறித்து விரட்டி விட்டனர்.
வேறு இடத்துக்கு சென்ற வாலிபர்களில் ஒருவரிடம் இருந்த செல்போன் மூலம் தனது நண்பர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் 3 கார்களில் 15-க்கும் மேற்பட்ட நண்பர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
மதுபாரை மூடிவிட்டு பழம்பதி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். மகாராணி அவென்யூ சந்திப்பு அருகே வந்தபோது 3 கார்களில் வந்த நண்பர்களுடன் ஏற்கனவே இருந்த 2 வாலிபர்களும் வழிமறித்தனர்.
நண்பர்களை தாக்கியது குறித்து கேட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் பழம்பதியை தாக்கினர். பழம்பதிக்கு அவரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அவர் அலறி சத்தம்போட்டார்.
சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. வெட்டுக்காயங்களுடன் கிடந்த பழம்பதியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் வாலிபர்களிடம் இருந்து பறித்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனையும் பழம்பதி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவற்றை மீட்டு வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய வாலிபர்களை தேடி வருகிறார்கள்.