என் மலர்
நீங்கள் தேடியது "Palayankottai"
- ஒரு மாணவனை இன்னொரு மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார்.
- காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாளையங் கோட்டை வ.உ.சி. மைதானத்தின் பின்புறம் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 8-ம் வகுப்பு பிரிவு ஒன்றில் ஆசிரியை ரேவதி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுக்கும், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணாபுரம் மாணவர் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவனை சரிமாரியாக வெட்டினார். இதில் அந்த மாணவனின் கை, தோல்பட்டை, முதுகு உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் படுகாயம் அடைந்த அந்த மாணவன் அலறி துடித்தான்.
உடனே ஆசிரியை ரேவதி ஓடி சென்று வெட்டிய மாணவனை தடுக்க முயன்றார். இதில் ஆசிரியைக்கும் வெட்டு விழுந்தது. இதைப்பார்த்து சக மாணவர்கள் அலறல் சத்தம் போட்டனர்.
உடனே வெட்டிய மாணவன் சட்டையில் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் வெளியேறி அருகே உள்ள பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றான். அங்கிருந்த போலீசார் மாணவனிடம் இருந்த அரிவாளை கைப்பற்றி விசாரித்தபோது சக மாணவனை அரிவாளால் வெட்டியதாக கூறி உள்ளான்.
இதைக்கேட்டு அதிர்ச்சிய டைந்த போலீசார் மாணவனை கைது செய்ததோடு, உடனடியாக பள்ளிக் கூடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் படுகாயம் அடைந்த மாணவனையும், வெட்டுப்பட்ட ஆசிரியையும் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு படுகாயம் அடைந்த மாணவனுக்கும், ஆசிரியைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளியில் மாணவன் வெட்டப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பள்ளியில் இந்த 2 மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.
அப்போது ஆசிரியை தலையிட்டு 2 மாணவர்களையும் கண்டித்து பிரச்சினையை தீர்த்துள்ளார். மேலும் இதுகுறித்து 2 மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் கூறி அவர்களை வரவழைத்து மாணவர்களை கண்டித்து அனுப்பி உள்ளார்.
ஆனால் வெட்டிய மாணவன் இந்த பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு இன்று அரிவாளை பையில் மறைத்து வைத்து எடுத்து வந்து வெட்டியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாணவன் வெட்டுப்பட்ட தகவல் அறிந்து அவனது பெற்றோர் மட்டுமல்லாதது ஏராளமான மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து பள்ளி முன்பு 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் கூறுகையில், பென்சில் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் மாணவனின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பள்ளி வகுப்பறையில் சுழற்சி முறையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் பள்ளியில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக புத்தக பையில் இருந்த அரிவாள் கண்டறியப்படவில்லை என்றார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென காந்திமதி கழுத்தில் கிடந்த 4 கிராம் நகையை பறித்து சென்றார்.
- செயின் பறிப்பு தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை தியாகராஜநகர் 8-வது வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மனைவி காந்திமதி (வயது 58).
இவர் இன்று அதிகாலை வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென காந்திமதி கழுத்தில் கிடந்த 4 கிராம் நகையை பறித்து சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பிசென்றார்.
இதுதொடர்பாக அவர் பெருமாள்புரம் ேபாலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.






