என் மலர்
அயர்லாந்து
- புயல் கரையை கடந்தபோது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
- அப்போது மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
டப்ளின்:
அயர்லாந்தில் உருவான ஆமி புயலால் கடந்த சில நாளாக பெய்த கனமழையால் டோனகல், லீட்ரிம் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக் காடாக மாறின.
இதற்கிடையே புயல் கரையை கடந்தபோது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. அப்போது ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.
ஆமி புயல் காரணமாக டப்ளின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 115 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். அதேபோல், ரெயில் சேவையும் கடுமையாக பாதிப்பு அடைந்தது.
- நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.
- அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்ல.
அயர்லாந்தில், இந்திய சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளனது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டூப்லினில் மூன்று இளைஞர்களால் ஒரு இந்தியர் தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாலை 5:30 மணியளவில் ஃபேர்வியூ பார்க்கில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் எட்டு தையல்கள் போடப்பட்டன.
தனக்கு நேர்ந்ததை விவரித்த பாதிக்கப்பட்டவர், "நான் பூங்காவிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மின்சார ஸ்கூட்டரில் வந்த ஒரு இளைஞன் என் அருகில் வந்து என் வயிற்றில் உதைத்தான்.
நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.
நான் தரையில் விழுந்த பிறகும் அவர்கள் என்னைத் தொடர்ந்து தாக்கினர். அவர்களில் ஒருவர் தனது ஸ்ட்டீல் தண்ணீர் பாட்டிலால் என் கண்ணில் அடித்தார்" என்று தெரிவித்தார்.
மேலும் அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்லை என்றும் 2 இளைஞர்கள் மட்டும் தனக்கு உதவி செய்து காவல்துறைக்கு தகவல் அளித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார். சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், வரும் நாட்களில் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக 6 வயது இந்திய சிறுமி, சிறுவர்கள் கும்பலால், " உனது நாட்டுக்கே திரும்பிப் போ' என கூறி தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சமீபத்திய ஆறு வயது இந்திய சிறுமியை அந்நாட்டை விட்டு வெளியேறும்படி சிறுவர் கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
- இந்திய சமூகத்தின் நேர்மறையான பங்களிப்பைக் கெடுக்கும் என்று மைக்கேல் எச்சரித்தார்.
அயர்லாந்தில், இந்திய சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளனது.
இந்தத் தாக்குதல்களை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கண்டித்துள்ளார்.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மைக்கேல் டி ஹிக்கின்ஸ், இந்திய சமூகம் அயர்லாந்தின் மருத்துவம், செவிலியர், பராமரிப்பு, கலாச்சாரம், வணிகம் மற்றும் தொழில்முனைவு போன்ற பல துறைகளுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளது.
இந்திய சமூகத்தினர் மீதான சமீபத்திய தாக்குதல்கள் அயர்லாந்தின் மதிப்புகளுக்கு முரணானவை என்றும், அவை கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய ஆறு வயது இந்திய சிறுமியை அந்நாட்டை விட்டு வெளியேறும்படி சிறுவர் கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதுபோன்ற செயல்கள் முழு சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், இந்திய சமூகத்தின் நேர்மறையான பங்களிப்பைக் கெடுக்கும் என்று மைக்கேல் எச்சரித்தார்.
தாக்குதல்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டூப்ளினில் உள்ள இந்திய தூதரகம் அதன் குடிமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, அவசர உதவி எண்களைப் பகிர்ந்துள்ளது.
- லிசாவுக்கு ஜோசப்பின் 5.5 மில்லியன் யூரோ (ரூ.47 கோடி) மதிப்புள்ள சொத்து சொந்தமானது.
- ஜோசப்பின் பணத்தைப் பெறுவதற்காக அவருடன் நெருங்கிய பழக்கம் கொண்ட சூழ்ச்சிகாரியாக சித்தரிக்கின்றனர்.
அயர்லாந்தின் ஆஃபாலி கவுண்டியில் ஜோசப் க்ரோகன் என்ற 75 வயது பணக்கார நில உரிமையாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர், லிசா ஃபிளாஹெர்டி (50) என்ற பணிப்பெண்ணை ரகசியாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த ரகசிய திருமணம் நடந்த 24 மணி நேரத்திற்குள் ஜோசப் க்ரோகன் இறந்தார். இதன் மூலம் லிசாவுக்கு ஜோசப்பின் 5.5 மில்லியன் யூரோ (ரூ.47 கோடி) மதிப்புள்ள சொத்து சொந்தமானது.
ஆனால் ஜோசப்பின் திருமணம் மற்றும் மரணம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறி அவரின் குடும்பத்தினர் லிசாவுக்கு 5.5 மில்லியன் யூரோ சொத்து கிடைக்கக்கூடாது என வழக்கு தொடர்ந்தனர்.

குடும்பத்தினர் லிசாவை, ஜோசப்பின் பணத்தைப் பெறுவதற்காக அவருடன் நெருங்கிய பழக்கம் கொண்ட சூழ்ச்சிகாரியாக சித்தரிக்கின்றனர்.
ஆனால், லிசாவின் நண்பர்கள், இவர்களுக்கு இடையிலான உறவு 1991 ஆம் ஆண்டு லிசாவுக்கு 16 வயதாக இருந்தபோது தொடங்கியது என்றும், அவர் லிசாவின் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தார் என்றும் கூறுகின்றனர். ஜோசப், லிசாவின் மூன்று குழந்தைகளுக்கும் ஒரு தந்தை பிம்பமாக இருந்தார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே ஜோசப் க்ரோகனின் மரணத்திற்கு புற்றுநோய் மற்றும் சிகிச்சையுடன் தொடர்புடைய தொற்றுதான் காரணம் என்று தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்தனர்.
ஜோசப்பின் பெயரைப் பயன்படுத்தவும், அவரது பண்ணையை எடுத்துக்கொள்ளவும் லிசாவுக்கு முழு உரிமை உண்டு என்று அவரது நண்பர்கள் வாதிடுகின்றனர்.
- முதலில் பேட் செய்த மன்ஸ்டர் ரெட்ஸ் அணி 20 ஓவரில் 188 ரன்கள் குவித்தது.
- அதிகபட்சமாக கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்கள் எடுத்தார்.
டப்ளின்:
அயர்லாந்தில் உள்ளூர் டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது.
முதலில் பேட் செய்த மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்னும், பீட்டர் மூர் 35 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.12வது ஓவரை கர்டிஸ் காம்பெர் வீசினார். இதன் கடைசி 2 பந்தில் வில்சன், கிரஹாம் ஆகியோரை அவுட்டாகினர். மீண்டும் 14வது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை (29) அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3-வது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரை அவுட்டாக்கினார்.
இதனால் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி 88 ரன்களில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி 100 ரன்னில் வெற்றி அபார பெற்றது.
இந்நிலையில், அயர்லாந்தின் கர்டிஸ் காம்பெர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.
ஏற்கனவே, கர்டிஸ் காம்பெர் கடந்த 2021ல் நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.
- இது அயர்லாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய லாட்டரி வெற்றியாகும்.
- பல பிரபலங்களை விடவும் அந்த நபர் பணக்காரர் ஆகியுள்ளார்.
ஒரே ஒரு லாட்டரி டிக்கெட்டில் ஐரோப்பாவின் மிகப்பெரிய யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் பரிசான ரூ.2,120 கோடி (208 மில்லியன் பவுண்டுகள்) தொகையை அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் வென்றுள்ளார். இது அயர்லாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய லாட்டரி வெற்றியாகும்.
இந்த வெற்றி மூலம், கால்பந்து வீரர் ஹாரி கேன் (ரூ.1,150 கோடி) மற்றும் பாப் பாடகி துவா லிபா (ரூ.1,100 கோடி) போன்ற பல பிரபலங்களை விடவும் அந்த நபர் பணக்காரர் ஆகியுள்ளார்.
அயர்லாந்து தேசிய லாட்டரி, வெற்றியாளர் தனது டிக்கெட்டைப் பத்திரப்படுத்தி, லாட்டரி தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த வெற்றியாளர் ஐரிஷ் நாட்டின் 18வது யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் வெற்றியாளர் ஆவார். வெற்றியாளரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
- டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 256 ரன்கள் குவித்தது.
டப்ளின்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரெடியில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ் மற்றும் ஷாய் ஹோப் ஜோடி அதிரடியாக விளையாடியது.
முதல் விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்த நிலையில் ஷாய் ஹோப் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட எவின் லூயிஸ் 91 ரன்னில் (44 பந்துகள்) ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கீசி கார்டி 22 பந்தில் 49 ரன்கள் குவித்தார்.
அயர்லாந்து சார்பில் மேத்யூ ஹம்ப்ரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஸ் அடைர் 48 ரன்னும், ஹாரி டெக்டர் 38 ரன்னும், மார்க் அடைர் 31 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில், அயர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், டி20 தொடரை 1-0 என கைப்பற்றியது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 385 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் கீசி கார்டி 170 ரன்கள் விளாசி அசத்தினார்.
டப்ளின்:
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி டப்ளினில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 3வது விக்கெட்டுக்கு கீசி கார்டி. ஷாய் ஹோப் ஜோடி இணைந்தது. ஆரம்பம் முதலே இந்த ஜோடி அதிரடியாக ஆடியது.
3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில் ஷாய் ஹோப் 75 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கார்டி சதமடித்து 170 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 23 பந்தில் 50 ரன் எடுத்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 385 ரன்கள் குவித்தது. மழை காரணமாக ஆட்டம் சிறிது தடைபட்டது.
இதனால் 46 ஓவரில் 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் அயர்லாந்து 29.5 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை 1-1 என சமனிலை அடையச் செய்தது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கீசி கார்டி வென்றார்.
- முதலில் ஆடிய அயர்லாந்து அணி 50 ஓவரில் 303 ரன்களைக் குவித்தது.
- கேப்டன் பால் ஸ்டிர்லிங் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார்.
டப்ளின்:
அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் ஆடிய அயர்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான ஆண்ட்ரூ பால்பிர்னி சிறப்பாக ஆடி 112 ரன்கள் எடுத்தார். அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.1 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 124 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் பால் ஸ்டிர்லிங் 34 ரன்களைக் கடந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த முதல் அயர்லாந்து வீரர் என்ற சாதனை படைத்தார்.
பால் ஸ்டிர்லிங் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என 3 வடிவ போட்டிகளில் விளையாடி இதுவரை 10,017 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய அயர்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்களைக் குவித்தது.
- தொடக்க ஆட்டக்காரரான ஆண்ட்ரூ பால்பிர்னி சிறப்பாக ஆடி 112 ரன்கள் எடுத்தார்.
டப்ளின்:
வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி டப்ளினில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான ஆண்ட்ரூ பால்பிர்னி சிறப்பாக ஆடி 112 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் பால் ஸ்டிர்லிங் 54 ரன்னும், ஹாரி டெக்டோர் 56 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மேத்யூ போர்டே 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அயர்லாந்து அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் முன்னணி வீரர்கள் வெளியேறினர். 31 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறியது.
அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் அரை சதம் கடந்து 55 ரன்னில் அவுட்டானார். மேத்யூ போர்டே 38 ரன்னும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 35 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 34.1 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 124 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
அயர்லாந்து சார்பில் பேரி மெக் கார்த்தி 4 விக்கெட்டும், ஜார்ஜ் டாக்ரெல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது பால்பிர்னிக்கு வழங்கப்பட்டது.
- மத்திய மந்திரி ஜெய்சங்கர் அயர்லாந்து ஜனாதிபதி ஹிக்கின்சை சந்தித்துப் பேசினார்.
- அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களை தெரிவித்துக் கொண்டார்.
டப்ளின்:
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 4-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றார்.
இதற்கிடையே, நேற்று அயர்லாந்து நாட்டுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டப்ளின் நகரில் அந்நாட்டு ஜனாதிபதி மைக்கேல் ஹிக்கின்சை நேரில் சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், நவீன உலகம் மற்றும் அதன் வளர்ச்சி பற்றிய விவாதங்களில் ஈடுபட்டோம். அவருடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தேசியம் வலுப்படுவதற்கான கலாசாரத்தின் பங்கு பற்றியும் நாங்கள் பேசினோம் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், வடக்கு அயர்லாந்தின் தலைநகரான பெல்பாஸ்டில் இந்திய தூதரகத்தின் புதிய கிளையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று திறந்து வைத்தார்.
- ஜிம்பாப்வே அணி அயர்லாந்துடன் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
- இப்போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
பெல்பாஸ்ட்:
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 210 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதை தொடர்ந்து, 40 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 197 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வீரர் ஆண்டி மெக்ப்ரைன் ஒரே பந்தில் ஓடியே 5 ரன்கள் எடுத்துள்ளார்.
எந்த ஓவர் த்ரோவும் இல்லாமல் ஃபீல்டர் பவுண்டரில் லைனில் பந்தை தடுத்து வீசுவதற்குள் மெக்ப்ரைன் - லார்கன் ஜோடி ஓடியே 5 ரன்கள் எடுத்துள்ளனர்.






