என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கீசி கார்டி அதிரடி: 3வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
    X

    கீசி கார்டி அதிரடி: 3வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 385 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் கீசி கார்டி 170 ரன்கள் விளாசி அசத்தினார்.

    டப்ளின்:

    அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி டப்ளினில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 3வது விக்கெட்டுக்கு கீசி கார்டி. ஷாய் ஹோப் ஜோடி இணைந்தது. ஆரம்பம் முதலே இந்த ஜோடி அதிரடியாக ஆடியது.

    3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில் ஷாய் ஹோப் 75 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கார்டி சதமடித்து 170 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 23 பந்தில் 50 ரன் எடுத்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 385 ரன்கள் குவித்தது. மழை காரணமாக ஆட்டம் சிறிது தடைபட்டது.

    இதனால் 46 ஓவரில் 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் அயர்லாந்து 29.5 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை 1-1 என சமனிலை அடையச் செய்தது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கீசி கார்டி வென்றார்.

    Next Story
    ×