என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எவின் லூயிஸ் அதிரடி: 3வது டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
    X

    எவின் லூயிஸ் அதிரடி: 3வது டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

    • டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 256 ரன்கள் குவித்தது.

    டப்ளின்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரெடியில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்தது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ் மற்றும் ஷாய் ஹோப் ஜோடி அதிரடியாக விளையாடியது.

    முதல் விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்த நிலையில் ஷாய் ஹோப் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட எவின் லூயிஸ் 91 ரன்னில் (44 பந்துகள்) ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கீசி கார்டி 22 பந்தில் 49 ரன்கள் குவித்தார்.

    அயர்லாந்து சார்பில் மேத்யூ ஹம்ப்ரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஸ் அடைர் 48 ரன்னும், ஹாரி டெக்டர் 38 ரன்னும், மார்க் அடைர் 31 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், அயர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், டி20 தொடரை 1-0 என கைப்பற்றியது.

    Next Story
    ×