என் மலர்tooltip icon

    உலகம்

    அயர்லாந்து: பூங்காவில் வைத்து இந்தியரின் வயிற்றில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய இனவெறி கும்பல்
    X

    அயர்லாந்து: பூங்காவில் வைத்து இந்தியரின் வயிற்றில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய இனவெறி கும்பல்

    • நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.
    • அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்ல.

    அயர்லாந்தில், இந்திய சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளனது.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டூப்லினில் மூன்று இளைஞர்களால் ஒரு இந்தியர் தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மாலை 5:30 மணியளவில் ஃபேர்வியூ பார்க்கில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் எட்டு தையல்கள் போடப்பட்டன.

    தனக்கு நேர்ந்ததை விவரித்த பாதிக்கப்பட்டவர், "நான் பூங்காவிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மின்சார ஸ்கூட்டரில் வந்த ஒரு இளைஞன் என் அருகில் வந்து என் வயிற்றில் உதைத்தான்.

    நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.

    நான் தரையில் விழுந்த பிறகும் அவர்கள் என்னைத் தொடர்ந்து தாக்கினர். அவர்களில் ஒருவர் தனது ஸ்ட்டீல் தண்ணீர் பாட்டிலால் என் கண்ணில் அடித்தார்" என்று தெரிவித்தார்.

    மேலும் அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்லை என்றும் 2 இளைஞர்கள் மட்டும் தனக்கு உதவி செய்து காவல்துறைக்கு தகவல் அளித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார். சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தத் தாக்குதலை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

    இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், வரும் நாட்களில் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக 6 வயது இந்திய சிறுமி, சிறுவர்கள் கும்பலால், " உனது நாட்டுக்கே திரும்பிப் போ' என கூறி தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×