என் மலர்
நீங்கள் தேடியது "கத்தி குத்து"
- நிலத்தகராறில் பயங்கரம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த மராட் டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் நாயுடு. இவரது மகன்கள் தட்சணா மூர்த்தி (வயது 49), சுந்தர மூர்த்தி, சரவணன் (41). அண்ணன் - தம்பிகளான இவர்களுக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் சுமார் 3 ஏக்கர் 88 சென்ட் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் இவர்கள் 3 பேருக்கும் இடையே பிரச்சினை வந்ததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் ஊர் பெரியவர் கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் வழக்கை வாபஸ் பெறுவதாக தட்சணா மூர்த்தி தெரிவித்தார். அதன் படி வழக்கை வாபஸ் பெற் றார்.இந்த நிலையில் தட்ச ணாமூர்த்தி நேற்று காலை அவருக்குரிய இடத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்து கொண்டு இருந்தார். அப் போது அங்கு வந்த தட்சணா மூர்த்தியின் கடைசி தம்பி சரவணன், கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது ஏன் ஏர் ஓட்டுகிறாய் என்று கேட் டுள்ளார்.
இதனால் தட்சணாமூர்த் திக்கும் சரவணனுக்கும் தக ராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சரவணன் நிலத்தில் இருந்த கல்லால் தட்சணா மூர்த்தியை தாக்கியுள்ளார். இதைப்பார்த்த அவரது தம்பி
சுந்தரமூர்த்தி, அண்ணனை இப்படி கல்லால் அடித்து இருக்கின்றாயே என்று கேட் டுள்ளார். அதற்கு சரவணன் ஒன்று சேர்ந்து என் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கி றாய் என்று கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தர மூர்த்தியை சரமாரியாக குத்தி உள்ளார். படுகாயம் அடைந்தநிலையிலும் தடுக்க வந்த தட்சணாமூர்த்தியையும் கத்தியால் குத்திய சரவணன்தப்பி சென்று விட்டார். நிலைகுலைந்து மயங்கி விழுந்த தட்சணாமூர்த்தி மற் றும் சுந்தரமூர்த்தியை அரு கில் இருந்தவர்கள் மீட்டு ஒடு கத்தூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் சிகிச்சைக் காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டனர். இது குறித்து சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமாரபாளையத்தில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார்கள்.
- அதிகம் மது குடித்து விட்டு, மற்ற இருவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பெராந்தார் காடு பகுதி யில் வசிப்பவர்கள் அழகன்
(வயது 58), கபீர் (48),
பெம்மன்கவுடா (40). இவர்கள்
குமாரபாளையத்தில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த மாதம் 3-ம் தேதி இரவு, பெம்மன்கவுடா அதிகம் மது குடித்து விட்டு, மற்ற இருவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவரும் நிறுவனத்திற்கு சென்று தூங்கி விட்டு, மறுநாள் காலை அறைக்கு வந்து கதவை தட்ட, பெம்மன்கவுடா, இவர்களை தகாத வார்த்தையால் திட்டி கதவை திறந்துள்ளார்.
அங்கு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதை கண்டு, இப்படி செய்யலாமா? என்று அழகன், கேட்க அவரை தாக்கி பெம்மன்கவுடா கத்தியால் குத்தினார். இதனால் பயந்து கபீர் வெளியே வந்து சத்தம் போட, பெம்மன்கவுடா அங்கிருந்து தப்பி ஓடினார்.
பலத்த காயமடைந்த அழகன் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் பெம்மன்கவு டாவை கைது செய்தனர்.
- ஆனந்திற்கும் ரமேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆனந்தை சரமாரியாக குத்தினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து இருவரையும் சமாதானம் செய்ய புதுப்பட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 37) அங்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆனந்த் அண்ணன் ரமேஷ், ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆனந்திற்கும் ரமேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆனந்தை சரமாரியாக குத்தினார். அப்போது இதை தடுக்க வந்த தாய் மீனாவிற்கும் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆனந்தையும் மீனாவையும் மீட்டு அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொன்மலர்பாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது தாய் ஜெயலட்சுமிக்கும் இடையே நேற்று குடும்பத் தகராறு ஏற்பட்டு உள்ளது.
- இதில் ஆத்திரமடைந்த பாலச்சந்தர், பிரபுவை கத்தியால் குத்தி உள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொன்மலர்பாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது தாய் ஜெயலட்சுமிக்கும் இடையே நேற்று குடும்பத் தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது பாலச்சந்தர், அவரது தாய் ஜெயலட்சுமியை அடித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவர்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பிரபு (42) என்பவர், பாலச்சந்தரை தடுத்து தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலச்சந்தர், பிரபுவை கத்தியால் குத்தி உள்ளார்.
இதைப் பார்த்த அங்கிருந்த
வர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாலச்சந்தரை தடுத்து, காயமடைந்த பிரபுவை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் இந்திராணி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிரபுவை கத்தியால் குத்திய பாலச்சந்தரை கைது செய்தனர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
- நில அளவையர் மீது வழக்கு
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவர் நெமிலியில் நில அளவையராக பணி செய்து வருகிறார்.
நேற்று காலை இவருக்கும் எதிர் வீட்டில் இருக்கும் கருணாகரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கருணாகரனை, அருள் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த கருணாகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அருள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
இந்த தகராறை அங்கு இருந்தவர்கள் செல்போன் வீடியோ மூலம் பதிவு செய்துள்ளனர். இதனை சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளனர். தற்போது வீடியோ வைரலாகி வருகிறது.
- மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிவந்து, 2 பேர் மீதும் மோதுவது போல் நிறுத்தியுள்ளார்.
- நான் அப்படிதான் செய்வேன். என கூறி, கையில் வைத்திருந்த கத்தியால், 2 பேரையும் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியைச்சேர்ந்தவர் லட்சுமணன். இவர், கோட்டுச்சேரி ஆர்த்தி நகரில் வசிக்கும் தனது தம்பி முருகராஜை, வீட்டு வாசலில் சந்தித்து பேசிகொண்டிருந்தார்.அப்போது , எதிர்வீட்டில் வசிக்கும் வாலிபர் தட்சிணாமூர்த்தி என்பவர், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிவந்து, 2 பேர் மீதும் மோதுவது போல் நிறுத்தியுள்ளார். ஏன் இப்படி செய்கிறாய் என இருவரும் கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன் என கூறினார்.. பின்னர். அண்ணன், தம்பி இருவர் வீட்டினுள் சென்றபிறகு, தட்சிணாமூர்த்தி முருகராஜ் வீட்டின் மீது கற்களை வீசினார்
இதனை வெளியே வந்த அண்ணன், தம்பி இருவரும் ஏன் வீட்டு மீது கல்லை வீசினாய் என கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன். என கூறி, கையில் வைத்திருந்த கத்தியால், 2 பேரையும் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.இது குறித்து, லட்சுமணன், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே புத்தந்தூர் காட்டு க்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 26) இவர் சம்பவத்தன்று புத்தந்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (24), என்பவர் நான் காதலிக்கும் பெண்ணை நீ எப்படி நிச்சயம் செய்ய போவாய் என்று கூறி ஏழுமலையின் முதுகில் கத்தியால் குத்தி, உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.
இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
- சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே ஈசாந்திமங்கலம் நாவல் காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). அ.தி.மு.க. பிரமுகர்.தோவாளை ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
தற்போது மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வின் பெர்னால்டு (35), பிரேம் (22), மனோசிங் (24) ஆகிய 3 பேரும் நாவல் காடு பகுதியில் இருந்து மது அருந்தினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார்கள். கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.அவரை சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் செல்வின் பெர்னால்டு, பிரேம், மனோசிங் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் செல்வின் பெர்னால்டு, பிரேம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தலைமறைவாக உள்ள மனோசிங்கை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள். மணிகண்டனை தாக்கி யதற்கான காரணம் என்ன என்பது குறித்து கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- பாரதி (வயது 37). இவரது மனைவி இந்துமதி. இந்துமதியிடம் குடிப்பதற்கு பாரதி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். குடிக்க் பணம் தர மறுத்தார்,
- பாரதி பேனா கத்தியால் மனைவி இந்துமதியை கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த சித்திரப்பேட்டையை சேர்ந்தவர் பாரதி (வயது 37). இவரது மனைவி இந்துமதி. இந்துமதியிடம் குடிப்பதற்கு பாரதி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். அப்போது இந்துமதி கணவர் பாரதிக்கு மது குடிக்க பணம் தர மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பாரதி பேனா கத்தியால் மனைவி இந்துமதியை கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த இந்துமதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவெண்ணைநல்லூர் அருகே கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- விளம்பரம் மற்றும் நோட்டீஸ் கொடுக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.
விழுப்புரம்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி குருவிவிளாம்பட்டியை சேர்ந்த ராமராஜ் மகன் ரவி கிருஷ்ணா (வயது 27). இவரும் காமராஜ், சூர்யா ஆகிய 3 பேரும் டாட்டா ஏசி வாகனத்தின் மூலம் டி.வி.எஸ்.விளம்பரம் மற்றும் நோட்டீஸ் கொடுக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியில் விளம்பரம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் ரவிகிருஷ்ணாவை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் 3 பேரை பிடிப்பதற்கு வரும்போது 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
ஒருவரை பிடிதது திருவெண்ணெய்நல்லூர் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற கண்டம்பாக்கம் குணசேகர் மகன் முருகையன் (28) என்பவரை கைது செய்து, தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
- லாரி டிரைவர் கைது
- முன் விரோதம் காரணமாக விபரீதம்
செய்யாறு:
செய்யாறு அடுத்த பிரம்ம தேசத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). பிரியாணி மாஸ்டர். இவரது மனைவி மாயாதேவி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி (28).லாரி டிரைவர். இவருக்கும் பெருமாளுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. பெருமாளின் மனைவி பிரிந்து சென்றதற்கு வீராசாமி தான் காரணம் என்று கூறி இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை வீராசாமி பஜார் வீதியில் நின்றிருந்த பெருமாளிடம் சென்று தகராறில் ஈடுபட்டார். பின்னர் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த வீராசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெருமாளை சரமாரியாக குத்தினார். இதனால் பஜார் வீதியில் நின்று இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பெருமாளை அங்கிரு ந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்து வமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பிரம்ம தேசம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார்.
மேலும் வீராசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கார் ஏற்றியதிலும், கத்திக்குத்திலும் படுகாயம் அடைந்த 14 பேர் ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
- தென்கொரியாவில் இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடந்துள்ளது இது 2- வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சியோல்:
தென்கொரியா லெசூர் மாகாணம் சியோங்கனம் பகுதியில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.பலர் அங்குள்ள கடைக்குள்ளும், வெளியிலும் இருந்தனர்.
அப்போது வணிக வளாகத்துக்கு வேகமாக ஒரு கார் வந்தது. அதை ஓட்டி வந்தவர் திடீரென நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றினார். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் காரை நிறுத்தி விட்டு மர்ம வாலிபர் கீழே இறங்கினான். திடீரென அவன் கையில் வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக குத்தினான். இதில் பலருக்கு கத்திக்குத்து விழுந்தது.
இதை பார்த்ததும் பொது மக்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 9 பேர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இது பற்றி அறிந்ததும் பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் மீது காரை ஏற்றி கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவருக்கு 22 வயது இருக்கும். அவர் ஏன் இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கார் ஏற்றியதிலும், கத்திக்குத்திலும் படுகாயம் அடைந்த 14 பேர் ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தென்கொரியாவில் இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடந்துள்ளது இது 2- வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.






