என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வாலிபருக்கு கத்தி குத்து
  X

  வாலிபருக்கு கத்தி குத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குமாரபாளையத்தில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார்கள்.
  • அதிகம் மது குடித்து விட்டு, மற்ற இருவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார்.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் பெராந்தார் காடு பகுதி யில் வசிப்பவர்கள் அழகன்

  (வயது 58), கபீர் (48),

  பெம்மன்கவுடா (40). இவர்கள்

  குமாரபாளையத்தில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார்கள்.

  கடந்த மாதம் 3-ம் தேதி இரவு, பெம்மன்கவுடா அதிகம் மது குடித்து விட்டு, மற்ற இருவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவரும் நிறுவனத்திற்கு சென்று தூங்கி விட்டு, மறுநாள் காலை அறைக்கு வந்து கதவை தட்ட, பெம்மன்கவுடா, இவர்களை தகாத வார்த்தையால் திட்டி கதவை திறந்துள்ளார்.

  அங்கு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதை கண்டு, இப்படி செய்யலாமா? என்று அழகன், கேட்க அவரை தாக்கி பெம்மன்கவுடா கத்தியால் குத்தினார். இதனால் பயந்து கபீர் வெளியே வந்து சத்தம் போட, பெம்மன்கவுடா அங்கிருந்து தப்பி ஓடினார்.

  பலத்த காயமடைந்த அழகன் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் பெம்மன்கவு டாவை கைது செய்தனர்.

  Next Story
  ×