என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தாயிடம் தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டவருக்கு கத்தி குத்து
  X

  தாயிடம் தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டவருக்கு கத்தி குத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொன்மலர்பாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது தாய் ஜெயலட்சுமிக்கும் இடையே நேற்று குடும்பத் தகராறு ஏற்பட்டு உள்ளது.
  • இதில் ஆத்திரமடைந்த பாலச்சந்தர், பிரபுவை கத்தியால் குத்தி உள்ளார்.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொன்மலர்பாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது தாய் ஜெயலட்சுமிக்கும் இடையே நேற்று குடும்பத் தகராறு ஏற்பட்டு உள்ளது.

  அப்போது பாலச்சந்தர், அவரது தாய் ஜெயலட்சுமியை அடித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவர்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பிரபு (42) என்பவர், பாலச்சந்தரை தடுத்து தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலச்சந்தர், பிரபுவை கத்தியால் குத்தி உள்ளார்.

  இதைப் பார்த்த அங்கிருந்த

  வர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாலச்சந்தரை தடுத்து, காயமடைந்த பிரபுவை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  மேலும் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் இந்திராணி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிரபுவை கத்தியால் குத்திய பாலச்சந்தரை கைது செய்தனர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×