என் மலர்
தென் கொரியா
- அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
- கூட்டு ராணுவ பயிற்சியைக் கைவிட வேண்டும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.
சியோல்:
கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
எனவே பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா அவ்வப்போது கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கருதுகிறார். எனவே இந்தக் கூட்டு ராணுவ பயிற்சியைக் கைவிட வேண்டும் என தென் கொரியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க ராணுவ மந்திரி பீட் ஹெக்சேத் தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ராணுவ செலவுகளை உயர்த்தும் தென் கொரியாவின் முடிவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இது வடகொரியாவின் கோபத்தை மேலும் தூண்டியது.
இந்நிலையில், கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
- பூசான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- ஜி ஜின்பிங்குடன் நான் கச்சா எண்ணெய் பற்றி விவாதிக்கவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக பூசான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம் தொடர்பான சாதகமான முடிவுகள் எட்டப்பட்டன. சீனா மீதான வரியை 57%லிருந்து 47%ஆக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த சந்திபின் பின் வாஷிங்டன் புறப்பட்ட டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, சீனா நீண்ட காலமாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருகிறது. அது சீனாவின் பெரும்பான்மையான தேவையை பூர்த்தி செய்கிறது.
அதே சமயம், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.
ஜி ஜின்பிங்குடன் நான் கச்சா எண்ணெய் பற்றி விவாதிக்கவில்லை. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒன்றாக இணைந்து செயல்படுவது பற்றி விவாதித்தோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்திய பொருட்கள் மீது அபராதமாக டிரம்ப் 50 சதவீத வரிவிதித்தது குறிப்பிடத்தக்கது.
- நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறேன்.
- இந்த போரில் 7 புத்தம் புதிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதில் பேசிய டிரம்ப், "நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறேன்.
உங்களுக்குத் தெரியும், பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு. எங்களுக்கு ஒரு சிறந்த உறவு இருக்கிறது. பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர். ஆனால் சற்று கடினமானவர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரின்போது, நீங்கள் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கினால், நாங்கள் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று கூறினேன்.
நான் சொன்ன இரண்டு நாட்களுக்குள், மோடியும் ஷெரீப்பும் என்னிடம் பேசி போரை நிறுத்தினர்" என்று தெரிவித்தார்.
இதன்மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை நிறுத்தியதாக டிரம்ப் பேசியதன் எண்ணிக்கை 50ஐ கடனத்துள்ளது.
மேலும் இந்த போரில் 7 புத்தம் புதிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அது இந்தியா உடையதா, பாகிஸ்தான் உடையதா என்று குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு 29-ந் தேதி தொடங்குகிறது.
- மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வாஷிங்டன்:
தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார். மறுநாள் (30-ந்தேதி )அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்து உள்ளார். அதிபர் டிரம்ப் இன்று இரவு (வெள்ளிக்கிழமை) மலேசியா செல்வார் என்றும் அதன்பிறகு ஜப்பான் மற்றும் தென்கொரியா செல்ல இருக்கிறார் என அவர் கூறி இருக்கிறார்.
அமெரிக்காவி வர்த்தக போருக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது டிரம்ப்பும், ஜின்பிங்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளனர்.
- கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்றது.
- இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி சாம்பியன் பட்டம் வென்றார்.
சியோல்:
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்றது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை 6- 1 என எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட இகா ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி 7-6 (7-3) என 2வது செட்டை கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இகா ஸ்வியாடெக் 7-5 என வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.
- கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.
- இதில் கிரெஜ்சிகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
சியோல்:
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக் நாட்டின் சினியாகோவா-கிரெஜ்சிகோவா ஜோடி, அமெரிக்காவின் கேட்டி மெக்னலி- ஆஸ்திட்ரேலியாவின் மாயா ஜாயிண்ட் ஜோடியுடன் மோதியது.
இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரெஜ்சிகோவா ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா, சீனாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடை பிடித்தது.
இதற்கிடையே சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர்.
மேலும் சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது. இதையடுத்து மோடி எப்போதும் எனக்கு நண்பர் தான். இந்தியா- அமெரிக்கா உறவு சிறப்பாக உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையே சீனாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் சீன அதிபர் ஜின் பிங்குடன் டிரம்ப் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு தென் கொரியாவின் ஜியாங்சு நகரில், அக்டோபர் இறுதியில் தொடங்கி, நவம்பர் தொடக் கம் வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவருடன் உயர்மட்ட ஆலோசகர்களும் செல்ல உள்ளனர்.
மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
அதில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டிரம்ப், ஜின்பிங் இடையே இருதரப்பு சந்திப்பு குறித்து தீவிர விவாதங்கள் நடந்துள்ளது. ஆனால் இன்னும் உறுதியான திட்டங்கள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும்போது, "டிரம்பின் தென்கொரிய பயணத்தில் பொருளாதார ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும். வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அணு ஆயுத ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் கவனம் செலுத்தப்படும்" என்றார்.
- முன்னாள் அதிபர் மனைவி மீது பரிசு பொருள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
- இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.
சியோல்:
தென்கொரிய அதிபராக இருந்த யூன் சுக் இயோல் கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ தனது கணவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிசு பொருட்கள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தென் கொரியா முன்னாள் அதிபரின் மனைவி கிம் கியோன் ஹீ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் இது தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையின் இறுதியில் அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
- தென்கொரிய அதிபர் மூன் ஜே இங் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
- இந்த மசோதா நேற்று பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
சியோல்:
தென் கொரியாவில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்றச் சம்பவங்கள், போதைப் பொருள் பயன்பாடு, ஆன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் மாணவர்கள் சிக்கி அவர்களின் வாழ்க்கை சீரழிவதாக புகார் எழுந்தது.
பள்ளியில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்பாடுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இங் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதற்காக மசோதாவை நேற்று பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தென் கொரியாவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் (மார்ச் 2026) பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- தென்கொரியா அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த டிசம்பரில் அவசர நிலை பிரகடனம் செய்தார்.
- இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சியோல்:
தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஒரே நாளில் அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது. இதனால் யூன் சுக் இயோல் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும், அவர்மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்டவை பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். 52 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். புதிய அதிபராக லீ ஜே மியுங் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்சிகளை அழிக்க முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் முயன்றதாக புகார்கள் எழுந்தன.
சியோல் கோர்ட்டில் இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து யூன் சுக் இயோல் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- தீ விபத்தில் 22 பயணிகள் புகையை சுவாசித்து மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- இந்த தீ விபத்தில் 330 மில்லியன் வோன் சொத்து சேதம் ஏற்பட்டது.
தென் கொரியாவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலுக்குள் தீவைத்த 67 வயது வோன் என்ற நபர் கைது செய்யப்டட்டார்.
கடந்த மே 31 அன்று ஹான் நதிக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ரெயிலுக்கு தீ வைக்கப்பட்டது. ரெயில் உள்ளே பெட்ரோல் ஊற்றி, தீ வைத்தார்.
தீ விபத்தில் 22 பயணிகள் புகையை சுவாசித்து மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வோன்-உம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தீ விபத்தில் 330 மில்லியன் வோன் சொத்து சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
மனைவியுடன் விவாகரத்து வழக்கின் முடிவில் ஏற்பட்ட விரக்தியால் வோன் இந்த செயலைச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நான்கு பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
- இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்கொரியாவில் 4 பேருடன் சென்ற கடற்படைக்கு சொந்தமான ரோந்து பயிற்சி விமானம், திடீரென விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பி-3 என்ற ரோந்து விமானம் தென்கிழக்கு நகரான போஹாங்கில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தரையில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என் கப்பற்படை தெரிவித்துள்ளது.






